புதிய அறிவியல் கண்டுப்பிடிப்புகளுக்கு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வாய்ப்பு!

மத்திய அரசின் டிபார்ட்மெண்ட் ஆப் சைன்ஸ் & டெக்னாலஜி துறை அறிவித்துள்ள கல்வி உதவித்தொகை பெற  மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31, 2018 அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஆகும். 


மத்திய அரசின் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மெண்ட், பெங்களூர்  அறிவித்துள்ள டிஎஸ்டி அண்டு டெக்ஸாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் இந்தியா இன்னோவேசன் சேலென்ஜ் டிசைன்  கான்டெஸ்  போட்டியில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள்  தங்களது கண்டுபிடிப்புகளுடன் பங்கேற்கலாம்.

தகுதிகள்:
இந்தியாவில் அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில்  இன்ஜினியரிங் படிப்பு படித்து கொண்டிருக்கும் மாணவர்கள்  விண்ணப்பிக்கலாம்.  அரசின் கல்வி உதவித்தொகை  வெற்றி பெறும் மாணவர்களின் சிறப்பான அறிவியல்   கண்டுபிடிப்புகளுக்கு வழங்கப்படும். ஐந்து சுற்றுகள் மூலம் தகுதியான மாணவ குழுக்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

நன்மைகள்: 
போட்டியில் பங்கேற்று  சிறந்த கண்டுபிடிப்புக்களை நல்கும் 10 மாணவ குழுவுக்கு 20 லட்சம் வரை  கொடுக்கப்படும். 
அறை இறுதிவரை போட்டியில் நுழையும் மாணவ குழுவுக்கு அவர்களின் புதிய கண்டுபிடிப்புகளின் முன்னேற்றத்திற்கு  ரூபாய் 5 லட்சம் வரை வழங்கப்படும். 
அறை இறுதிக்கு தேர்ந்தெடுக்கப்படும் குழுக்கள் மாதம் ரூபாய் 30,000 வரை பெறலாம். 
வரியற்ற பரிசுகள் பங்கேற்கும் மாணவர்கள் ரூபாய் 70 லட்சம் வரை பெறலாம்.
மேலும்  பங்கேற்கும் மாணவர்கள் குழுவுக்கு 15000 எண்ணிக்கை வரை சான்றிதழ்கள் மற்றும் 600 வகையான ரொக்க விருதுகள்   வழங்கப்படும்.

அறிவியல் கண்டுப்பிடிப்புகளை செய்ய விண்ணப்பிக்க வேண்டிய இறுதி தேதி ஆக்ஸ்ட் 31 ஆகும்.  தகுதியான   மாணவ குழுவின் படைப்புகள் ஆகஸ்ட் 31, 2018க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆகஸ்ட் 2018 இல் தொடங்கி,  அடுத்த ஆண்டு 2019 வரை சுற்றுகள்  நடைபெறும். 

விதிமுறைகள்: 
போட்டியில் பங்கேற்கும்  மாணவர்கள் ஆங்கிலத்தில்தான் முழுமையாக செய்ய வேண்டும். 
குழுவாக பங்கேற்கும்  மாணவர்கள் தங்கள் மாணவர்கள் குழு தலைவர்கள் பெயரை பதிவு செய்து கண்டுபிடிப்புகளை சமர்பிக்க வேண்டும். 


மேலும் படிக்க: 

Post a Comment

0 Comments