டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் வெற்றி பெற்ற மொழி பாடத்தில் நூறு சதவிகித மதிபெண் பெற வேண்டும். என்றால் மொழி பாடத்தின் மூலை முடுக்கெல்லாம் தெரிந்திருக்க வேண்டும். அதாவது ஆறு முதல் 12 வகுப்பு வரையுள்ள தமிழ்பாடப் புத்தகங்களை முழுமையாக படித்து முடிக்க வேண்டும்.
மேலோட்டமாக இல்லை நுணுக்கமாக தொடர்ந்து படித்தலுடன் டெஸ்ட் பேட்ச் அல்லது சுயபரிசோதனை செய்து நீங்கள் சரியாக படித்துள்ளிர்களா என்பதை பரிசோதித்து பாருங்கள். அப்பொழுதுதான் எந்த பாடத்தை நீங்கள் சரியாக படிக்கவில்லை என்பதை தெளிவாக புரியும். மேலும் அப்பாடங்களை திரும்ப படித்தலுக்கு உதவிகரமாக இருக்கும்.
போட்டி தேர்வு என்பது நாம் பயிற்சி செய்த பாடங்களை கொண்டு வெற்றி களமாக இருக்கும். தற்காலத்தில் அது லட்சகணக்கானோரிடையே நடைபெறுகின்றது. எனினும் உண்மையான போட்டி 50000 பேரிடையே மட்டும் நடைபெறும். அந்த 50000 பேரில் நீங்களும் ஒருவர் என்ற உறுதியுடன் இருங்கள். மேலும் போட்டி தேர்வில் டாப் மார்க்குகளை பெற குறிக்கோளுடன் படிக்கவும் அப்பொழுது எளிதாக தேர்வை வெற்றி கொள்ள முடியும்.
நீங்கள் படிக்கும் பகுதி எதுவானாலும் அதனை முழுமையாக படியுங்கள் அத்துடன் அவற்றில் பிரிவுகளாக பிரித்து தனித்தனியாக குறிப்புகள் எடுத்து படிக்க வேண்டும். அவ்வாறு படிக்கும் பொழுது எளிதாக தேர்வில் கேட்கப்படும் கடினமான கேள்விகளையும் வெற்றி பெறலாம்.
பாடப்புத்தகங்களை படித்தப்பின் அவற்றிற்கான கேள்விகளை நீங்களே கேள்விகளை தயார் படுத்துங்கள் எளிதில் தேர்வை வெல்ல முடியும். போட்டி தேர்வர்கள் தயாரிக்கும் கேள்விகள் கடினமானதாக இருக்க வேண்டும் அப்பொழுது தேர்வில் கேட்கப்படும் கேள்விகளின் கடினம் பெரிதாக இருக்காது.
ஒரு பொருட் பன்மொழி:
ஓரே பொருளை குறிக்கும் பல அடுத்தடுத்து வருதலாகும். எடுத்துக்காட்டாக மூலை முடுக்கு, ஒருதனி, இளம் சிறு பையன், நடுமத்தியில், மீமிசை, சரிநிகர் சமானாம் எனபதை எடுத்துக்காட்டாகும்.
அடுக்குத் தொடர்:
பொருள் தரக்கூடிய ஒருசொல் அடுக்கி வருகின்ற சொல்லை அடுக்குத் தொடர் எனலாம் இவை அதிகபட்சமாக 4 முறை இவை வரும்.
இரட்டை கிளவி:
இரண்டாக மட்டுமேவரும் இரண்டும் சேர்ந்து வந்தால்தான் பொருள் தரும். பிரித்தால் பொருள் தராது.
ஓசை (இசை), நிறம் (பண்பு), குறிப்பு அடிப்படையில் வரும்
சரசர, சடசட, சலசல, பளபள, விறுவிறு, திக்திகென என வரும்.
விளி:
படர்க்கையாரே தன்முகமாக தான் அழைப்பதுவே ஆகும்.
எந்த ஒரு பெயரையும் விளியாக மாற்றலாம்.
ராமன்-ராமா, நாய்- நாயே
விளி என்பது முன்னிலையில் வரும் (முன்னால் இருக்கும்) ஆண்மகனை கூப்பிட்டால் ஆடூஉ முன்னிலை வெற்ப, மன்ன, நாட நாட்டின் தலைவன் வீரவாள் ஏந்திய ஏந்தலே ஆகும்.
மகடூ முன்னிலை = பெண் மகளை கூப்பிடல், செவ்வாய் மருங்குதல், நங்காய் ஆகும்.
போலி:
ஒரு சொல்லில் ஓரே எழுத்திற்கு பதிலாக வேரோரு எழுத்து வந்து அதே பொருளை தருமானால் அது போலி எனப்படும்.
போலி மொத்தம் ஐந்து வகைப்படும்.
முதல் போலி
இடைப் போலி
கடைப் போலி
முற்று போலி
இலக்கணப் போலி
முதல் போலி-
மஞ்சு = மைஞ்சு -அ-ஐ
இடைப் போலி-
அமச்சன்- அமைச்சர்
சமையல்
கடைப் போலி-
அகம்- அகன்- ம்-ன்
புறம் - புறன் -ம்
இடம்- இடன்-ம்- ன்
திறம்-திறன்- ம்
சாமபல்- சாம்பல்- அல், அர்
பொதும்பு -பொதும்பர். உ, அர்
வண்டு - வண்டர் - உ, அர்
முற்றுப் போலி-
ஐந்து - அஞ்சு- அஞ்சி
இலக்கணப் போலி -
முன்பின்னாகத் தொகைப் போல் வரும்
கால்வாய்- வாய்கால்
தானையின் முன் - முந்தானை
இல்முன்- முன்றில்
தொகை இலக்கணம்:
பண்பு தொகை
உம்மைத் தொகை
உவமைத் தொகை
வினைத் தொகை
வேற்றுமைத் தொகை
அன்மொழித் தொகை
தொகை:
இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சொற்கள் சேர்ந்து வரும். இடையில் சொல் மறைந்து வருவது தொகை எனப்படும்.
பண்புத் தொகை:
பண்புத் தொகை என்பது இடையில் ஆகிய என்பது மறைந்து வரும்.
உம்மைத் தொகை:
இரண்டு சொற்கள் சேர்ந்திருக்கும் பொழுது இடையில் 'உம் 'என்ற ஒரி சொல் மறைந்து வருதல் உம்மைத் தொகை எனப்படும். உம் என்ற எழுத்து மத்தியிலும் இறுதியிலும் வரும்.
ஆண்+பெண்= ஆணும் பெண்ணும்
பெயர்+ பெயர் என்றும் வினை என்றும் வரும்
பெயர்= இரவு, பகல், அம்மை அப்பன், பூரிகிழங்கு , சேர்சோழப் பாண்டியன், மாசால் தோசை
உவமைத் தொகை:
முதலில் உவமையும் பிறகு பொருளுமாக அமைவது இடையில் உவமை உருபு மறைந்து வரும்.
உருவகம்:
உருவகமானது பொருள் மற்றும் உருபும் பயனும் மறைந்து வருவதோ வேற்றுமைத் தொகை எனப்படும்.
வினைத் தொகை :
காலம் உணர்த்தும் உருபுகள், உருபுகள் மறைந்து வரும், வினையடியுடன் தல் சேர்த்தால் நன்றாக ஒட்டும் வினையடி+ பெயர் என்ற அமைப்பில் வரும்.
வேற்றுமை உருபோ அல்லது உருபும் பயனும் மறைந்து வருவதோ வேற்றுமைத் தொகை எனப்படும்.
மேலும் படிக்க:
0 Comments