உலக கோப்பை முன்னோட்டமா இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் பலப்பரிச்சை!

கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்று முதல்  கொண்டாட்டம் இந்தியா- இங்கிலாந்திடையேயான 3 டி 20 ஆட்டங்கள், 3 ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்கள் மற்றும் ஐந்து டெஸ்ட் தொடர்கள்  நடைபெற உள்ளன.  இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. இந்த தொடரினை இந்தியா பயன்படுத்தி நல்ல பயிற்சி பெற்று இங்கிலாந்து ஆடுகளங்களை பதம் பார்த்து வரலாம். 2019 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பைக்கு இது முன்னோட்டமாக இருக்கும். இந்திய அணி கிரிக்கெட் வீரர்களும் அடுத்த ஆண்டில் உலக கோப்பையை வெல்ல மும்முரமான பயிற்சி பெறும் முனைப்போடு தங்கள் திறனை காட்டுவார்கள் என நம்பபடுகின்றது.


இன்று டி 20:
இன்று இங்கிலாந்து தொடரில் முதல் போட்டி இன்று  தொடங்குகின்றது. இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில் இரு அணிகளும் முதலாவது டி 20  ஆட்டத்தில் மோதுகின்றன. இந்திய அணிக்கு உலக கோப்பைக்கு நல்ல ஒரு பயிற்சி களமாக அமையும். 

இந்திய அணி:
இந்திய அணியை பொறுத்தவரை நல்ல நிலையில் உள்ளது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். அவர்களுடன் லோகேஷ் ராகுலும் ஐபிஎல் போட்டியைத் தொடர்ந்து அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ரன் குவித்து தனது இடத்தை உறுதி செய்துள்ளார். இவர்களுடன் கேப்டன் கோலி, சுரேஷ் ரெய்னா, தல தோனி  மற்றும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அசத்தும் பட்சத்தில் இந்திய அணி நல்ல ஸ்கோரை பதிவு செய்யும். இந்திய அணி வேகப்பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர்.
சுழற்பந்து வீச்சை பொறுத்தவரையில் ஷாகால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இங்கிலாந்து வீரர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள்.

 பூம்ரா இல்லை:
இந்திய அணியின் சிறந்த பந்து வீச்சாளரான  ஜஸ்பிரித் பூம்ரா அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் கைவிரலில் ஏற்பட்ட காயத்தினால் இந்த டி 20 தொடரில் இருந்து விலகியுள்ளார். இது இந்திய அணிக்கு சற்று பின்னடைவாகும். இவருக்கு பதிலாக இந்திய ஏ அணியில் விளையாடி வரும் தீபக் சாஹர்  தேர்வு செய்யப்பட்டுள்ளார். தீபக் சிறந்த விளையாட்டினை வெளிப்படுத்துவார் என நம்படுகின்றது.  இந்திய அணி தலைவர் வீராட் கோலிக்கு சரியான 11  பேரினை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் இருக்கும். ஏனெனில் அனைவரும் சிறப்பான பார்மில் இருக்கின்றனர்.

 இங்கிலாந்து அணி :
 இந்திய அணியை போலவே இங்கிலாந்து அணியும் பலம் வாய்ந்தது ஆகும். சமீபத்தில் ஆஸ்திரேலிய அணியை வொய்ட் வாஷ்  செய்த அணியே இந்தப் போட்டித் தொடரிலும் களமிறங்குகிறது. இங்கிலாந்து அணியின் முதுகெலும்பாக திகழும் ஜாஸ் பட்லர்  அதிக நேரம் களத்தில் நின்றால் இந்திய அணியின் நிலைமை கந்தலாகிவிடும். இவர் மட்டுமின்றி ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், இயான் மோர்கன்,   ஜானி பர்ஸ்ஸோடவ் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலைமையில் உள்ளனர். இங்கிலாந்து அணி பந்து வீச்சைப் பொறுத்தவரையில் லியாம் பிளங்கெட், சிரிஸ் ஜோர்டன், டேவிட் வில்லே, ஜாக் பால் ஆகியோரும், சுழற்பந்து வீச்சில் மொயின் அலி மற்றும் அடில் ரஷித் ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர்.
 இரு அணிகளும் சம பலம் பொருந்திய தால் இந்த போட்டி சுவாரஸ்யம் மற்றும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது.
 போட்டிக்கான உத்தேச வீரர்கள்:
 இந்திய அணி:
1) Rohit Sharma  ரோஹித் சர்மா
2) Shikhar Dhawan ஷிகர் தவான்
3) Virat Kohli(Captain) வீராத் கோலி (கேப்டன்)
4) Suresh Raina சுரேஷ் ரெய்னா
5) Lokesh Rahul லோகேஷ்  ராகுல்
6) MS Dhoni (wicket keeper) எம்.எஸ். தோனி
7) Hardik Pandiya ஹார்திக் பாண்டியா
8)Kuldeep Yadav குல்தீப் யாதவ்
9) Bhuvaneshwar Kumar புவனேஷ்வர் குமார்
10) Umesh Yadav உமேஷ் யாதவ்
11)Yuzhvedhar Chahal  யூஸ்வெதார் சாஹால்

  இங்கிலாந்து அணி:
1) Jos Butler (Wicket keeper)  ஜாஸ் பட்லர்
2) Jason Roy ஜாசன் ராய்
3) Alex Hales அலெக்ஸ் ஹேல்ஸ்
4) Eoin Morgan (Captain)  இவொயின் மார்கன் (கேப்டன்)
5) Joe Root ஜோ ரூட்
6) Johnny Bairstow ஜானி பார்ஸ்டோவ்
7) Moeen Ali மோயின் அலி
8) Dawid Willey டேவிட் வில்லே
9) Adil Rashid அடில் ராஷ்த்
10) Liam plunkett லியம் புல்கேட்
11) Chris Jordan / Jake Ball  கிரிஷ்/ ஜாக் பால்

 இந்தப் போட்டி தொடரானது இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு தொடங்கும்.
சோனி டென்1 இல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றது.

Written By Toll Free.N

மேலும் படிக்க:
 இடம் கொடுத்த இந்திய இதயங்கள் ஜொலிக்க தொடங்கிய கால்பந்து போட்டி !

Post a Comment

0 Comments