டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கேள்விகளின் விடை தொகுப்பு படிங்க!

1.பிரதாம்- சியோக் பாலம் எதை இணைக்கின்றது?
விடை: 1.பேக் முதல் காரகோரம் ஜம்மு காஷ்மீர்
விளக்கம் : 
பிரதாம்- சியோக்  பாலம் சியோங் நதியில்  உருவாக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினருக்கும் உள்ளுர்  மக்களுக்கும் உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 


2. ஈரநிலப் பாதுகாப்பு மேலாண்மை கொள்கைகள் எப்பொழுது கொண்டு வரப்பட்டது?
விடை:1. செப்டம்பர் 26, 2017
விளக்கம்: 
2010 ஆம் ஆண்டு விதிகள் முறைப்படுத்தப்பட்டது. நாடுமுழுவதும் 115 ஈரநிலம் கண்டுபிடித்துள்ளது. 26 ஈரநிலத்தில் உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக ராம்சார் மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரநிலங்களுக்கான உலக அளவில் நடைபெறும் மாநாடு ராம்சார் மாநாடு ஆகும். நாட்டில் சுற்றுசூழல் அமைச்சக தலைமையில் செயல்படுகின்றது. 

3. மத்திய நேரடி வரிவாரியத்தின் பணியாது?
விடை: 2.நேரடி வரிதொடர்பான கொள்கைகள் வகுத்தல் 
விளக்கம்: 
மத்திய நேரடி வரிவாரியம் புதியவரி கொள்கைகள் வகுத்தல் முக்கியப் பங்கு வகிக்கின்றது. இந்த அமைப்பின் சேர்மன் மற்றும் 6 உறுப்பினர்கள் உள்ளனர்.

4. ஜார்க்கண்ட்  ஆரம்பிக்கப்பட்ட தேதி எப்பொழுது?
விடை: 1.நவம்பர் 15, 2000
விளக்கம் : 
ஜார்க்கண்ட் மாநிலம் நவம்பர் 15,2000 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ராஞ்சி அதன் தலைநகரம் ஆகும். 24 மாவட்டங்கள் கொண்டது. டாடாவின் அமைவிடமான ஜாம்செட்பூர் உள்ள இடம் அது ஆகும். ஹிந்து அலுவலக மொழியாகப் பயன்படுத்தப்படுகின்றது. 
    5. பெட்லா தேசிய பூங்கா எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
    விடை:2.ஜார்க்கண்ட்
    விளக்கம் : 
    பீகார், உத்திர பிரதேசம், சட்டீஸ்கர், ஓடிசா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் தனது எல்லையாக கொண்டது ஜார்க்கண்டில் பெட்லா தேசிய பூங்கா உள்ளது.  மேலும் ஹசாரிபாக் வனசரணாலயம் ஜார்க்கண்டில் உள்ளது. 

      6. இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின்  தொழில்நுட்பத்தில்  இயங்கும்  ஜிஎஸ்எல்வி எம்கே3 ராகெட் செலுத்தப்பட்ட தேதி எது? 
      விடை: ஜூன்4, 2017
      விளக்கம் : 
      ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் புறப்பட்டது. இனி வரும் காலங்களில் 4 டன் வரை அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தலாம். 

        7. இதுவரை  செயற்கைக் கோள்கள் ஏவுதளத்தில் கிரையோஜெனிக்  இன்ஜின் பயன்படுத்திய நாடுகள் எத்தனை?
        விடை: 2.5
        விளக்கம்:
        அமெரிக்கா, ரஷ்யா,சீனா, ஜப்பான், ஐரோப்பா விண்வெளி முகமை மட்டும் கிரியோஜெனிக் இஞ்ஜின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிக எடைகொண்ட செயற்கைக் கோள்கள் பயன்படுத்தி விண்ணில் செலுத்தி  வந்தன இந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 6-வதாக இணைந்துள்ளது. 

            8. எந்தெந்த மாவட்டங்களில் சட்டக்கல்லூரி  தொடங்கதமிழக அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
          விடை:1.  ராமநாதபுரம், விழுப்புரம், தருமபுரி
          விளக்கம் : 
          இராமநாதபுரம், விழுப்புரம், தருமபுரி, அகிய மாவட்டங்களில் புதிய சட்டக்கல்லூரி தொடங்க அனுமதி தமிழக அரசு வழங்கியுள்ளது. இவ்வாறே செங்கல்பட்டு சட்டக்கல்லூரி முதுகலை சட்டப்படிப்பில்  கிரிமினல் லாவுடன் சைபர் கிரைம் என்ற பாடப்பிரிவு துவங்கிடவும் அனுமதி கொடுக்கப்பட்டது.

            9. மத்திய அரசால் விதிக்கப்படும்  அத்தனை மறைமுக வரிகள் உள்ளடக்கிய ஒரேவரி  எது?
            விடை:ஜிஎஸ்டி
            விளக்கம்: 
            ஜிஎஸ்டி வரியானது சுதந்திரத்திற்கு   பிறகு இந்தியாவில் நடைபெறும் பெரிய வரிசீர்த்திருத்தம் என்று சொல்லப்படும். சரக்கு மற்றும் சேவை வரி, விற்பனை வரி போன்றவை மாநில அரசால் வசூலிக்கப்படும் வரி ஆகும். 

             10. இந்தியாவின் மிகப்பெரிய காற்றாலை பண்ணை எங்கு அமைந்துள்ளது?
            விடை: 3. தமிழ்நாடு 
            விளக்கம்: 
            இந்தியாவில் மிகபெரிய காற்றாலை பண்ணை தமிழ்நாட்டில் முப்பந்தல் என்னும் இடத்தில் உள்ளது.  நெல்லை குமரி எல்லைப் பகுதியில் அமைந்துள்ள முப்பந்தலில் 2015 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவின் மொத்த மின்சார மதிப்பின் உற்பத்தி திறன்3,16,379 மெகாவாட் ஆகும்.

            மேலும் படிக்க: 
            முந்தைய ஆண்டுகளுகளில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடை மற்றும் விளக்கம்

                Post a Comment

                0 Comments