விலை மதிப்பற்ற வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கோங்க தேவையற்ற மருத்துவ செலவுகளை குறைத்து விடுங்க இன்றைய மருத்துவ உலகத்தில் நடக்கும் போலிகளை இனம் கண்டுகொள்வது கடினமானது ஆனால் அந்த ஆராய்ச்சி விட்டுவிட்டு அந்த பக்கம் போகாமல் நம்மை வீட்டில் இருந்து காத்துக் கொள்வோம் .
உடல் என்ற கோவிலினை சுத்தமாகவும் ஆரோக்யமாக வைத்து கொள்ள நாம் குளிக்கும் போது தினமும் காலில் தொடங்கி தலையில் முடிக்க வேண்டும். அப்பொழுதான் உடல் குளிர்ச்சி அடையும்.
காலையில் சூரியன் உதிக்கும் திசைத்தன்னில் கால் மணி நேரம் நில்லுங்கள் உடலுக்கு உர்ச்சாகம் பொங்கும் வைட்டமின் டி பெறுவீர்கள்.
சன்பாத் எனப்படும் சூரியன் முன் நிற்கும் பொழுது செக்கில் ஆட்டிய நல்லெண்ணையை உடலில் நன்கு தேய்த்து கால்மணி நின்று பாருங்கள் அதன் பின் குளிக்கச் செல்லுங்கள் மிதமான சூடான நீரில் குளிக்க வேண்டும். உடல் உற்சாகம் பொங்கும் அத்துடன் பளப்பளக்கும் தேஜஸ் கிடைக்கும்.
குளிக்கும் போது மிதமான சூடு கொண்ட நீரில் குளிப்பதுடன் அவற்றில் சந்தன எண்ணெய் அல்லது எலுமிச்சை சாறு புலிந்து குளித்துப்பாருங்கள் நாள் முழுவதும் பிரகாசம் பொங்கும்.பிரஸஸாக இருக்கும்.
குளியல் என்பது உடலை குழுமைப்படுத்துவது அப்படியே நாள் முழுவதும் செய்யும் வேலையால் வியர்வை துவாரங்களில் படிந்துள்ள மாசினை நீக்க சோப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு மஞ்சள் மற்றும் கடலை மாவு, அரிசு மாவு, வேப்ப கொழுந்து , துளசி, ஆவாரம், குப்பைமேனி இலை, மருதாணி இலையினை நன்கு காயவைத்து பொடியாக குளியல் பொடியாக்கி குளித்தால் உடலில் படிந்துள்ள மாசு நீங்கும். அத்துடன் உடலில் உள்ள பொலிவு மெருக்கூட்டும் மேலும் சோப் போடுவதால் உடலில் தேவையற்ற கெமிக்கல்களின் பாதிப்பு குறையும். சோப் உபயோகிக்கும் போது உடலிலுள்ள வியர்வைதுவாரங்கள் அடைத்து கொள்ளும் அதனால் உடலில் தோல் வியாதிகள் அத்துடன் தோலில் டெட் ஸ்கின்கள் அதிகம் தங்கும்.
மேலும் படிக்க:
முகம் பளப்பளக்க நச்சுனு நாலு டிப்ஸ்
மட் தெரபி பத்தி அறிந்து கொள்வோமா அழகையும் ஆரோக்கியத்தையும் பேணி காப்போம்
0 Comments