முதலுதவியாக தண்னீர் கொடுக்காதிங்க!



மயக்கநிலையில் உள்ளவர்கள்,உடலில் தீ காயம் பட்டவர்கள், உடலில் அடிப்பட்டு இரத்தப்போக்கு உள்ளவர்கள், மாரடைப்பில் உள்ளவர்களுக்கு ஏன் தண்ணீர் கொடுக்க கூடாது என்பதனை அறிந்து கொள்ளுங்கள்.

மயக்கநிலையில் உள்ளவர்களுக்கு ஏன் தண்ணீர் கொடுக்க கூடாது, ஏனெனில் அது நேரடியாக நுரையீரலை சென்றடைந்து சுவாச குழலை அடைக்கும் சில நேரங்களில் இறப்புக்கும் வாய்ப்பாக அமைந்து விடுகிறது.

மயக்கநிலையில் உள்ளவர்கள் குடிக்கும் தண்ணீர் நுரையீரலை சென்றடைவதால் அடிப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உடனடியாக அனஸ்தியாஸிஸ் கொடுக்க முடிவதில்லை. ஆகையால் சிகிச்சை மேற்கொள்ள தாமதமாகின்றது, இது பாதிக்கப்பட்டோரை இறப்பு வரை கொண்டு செல்லும், ஆதலால் அடிப்பட்டவர்கள், மாரடைப்பு வந்தவர்களுக்கு குடிக்க நீர்கொடுக்க கூடாது. ஆனால் முகத்தில் நீர் தெளிக்கலாம் முகத்தில் உணர்வு நரம்புகள் இருப்பதால் முகத்தில் நீர் தெளிக்கலாம் .

உடல் இயக்கநிலையில் குறைவாக இருக்கும் பொழுது கொடுக்கப்படும் நீர் ஆண்களுக்கு சிறுநீர் பைக்கு செல்ல 3 மணி நேரமும் பெணகளுக்கு கருப்பை இருப்பதால் 7 மணிநேரம் ஆகின்றது, இதனால் உடனடி சிக்ச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுகின்றது .

ஆகையால் அடிப்பட்டவர்களுக்கும், தீக்காயம், இரத்தப்போக்கு உள்ளவர்களுக்கு நீர் கொடுக்க வேண்டாம். நீங்கள் பார்த்திருப்பீர்கள் நம் வீட்டில் வயதானவர்களுக்கு இப்பவோ அப்பவோ என்று இருப்பவர்களுக்கு இறுதி மூச்சை நிறுத்த கொடுப்பது பால் ஆகும். உடலில் இறுதி மூச்சு இழுத்து கொண்டிருப்பவர்களுக்கு கொடுக்கப்படும் இறுதி பாலானது நேரடியாக உணவு குழல் வழியாக வயிற்றில் கலக்காமல் அது சுவாசத்தை நிறுத்தி நுரையீரல் வழியாக உயிரை இழக்க நேருடுகிறது.

ஆகையால் தயவு செஞ்சு சிந்தித்து செயலாற்றுங்கள் தெரியாதவர்களுக்கு கற்று கொடுங்கள் . அடிப்படை உண்மை பலருக்கு தெரிவதில்லை அறிந்துகொள்வோம் இது குறித்து அறிவிப்போம் அனைவருக்கும் .

உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் நிலை உயரும் பொழுது பணிவு கொண்டால் வாழ்வு தழைக்கும் என்ற வரிகளை நினைவில் நிறுத்தி நல்லது செய்வோம் .

மேலும் படிக்க: 

Post a Comment

0 Comments