சென்னை வாசிகளே! நிவாரணமா நிரந்தர தீர்வா முடிவு உங்க கையில !

சென்னையில் அடைமழை கொட்டுகிறது மக்கள் மிகுந்த சிக்கலில் உள்ளனர் . சென்னையில் 2015 ஆண்டு முதல் வெள்ளத்தையும் வருடதோறும் வார்தாவும், நாடா என கடந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

2015 ஆம் ஆண்டில் கோடிக்கணக்கான பொருட் சேதம், இருக்க இடமில்லை, எங்கு பார்த்தாலும் நீர் சூழ்ந்தநிலை, குளிரும் உடன் பச்சிளந்தளருமாக சென்னை பரிதவித்து கொண்டிருக்கின்றது.

ஊடகங்களின் இடைவிடாத லைவ் கொண்டாட்டம் : 


சென்னையில் ஏற்பட்டுள்ள மழைப்பாதிப்புகளை படம்பிடித்து லைவாக காட்டும் தொல்லைக்காட்சிகள் அனைவரின் மனதிலும் அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது.

பயமா இருக்கு மாம், வாட் த ஹெல் ரெயின் , ஷிட்! என கூவுகிற சென்னை வாசிகளை நாம் நிறைய பார்க்கலாம். தொ(ல்)லைக்காட்சிகள் சென்னையில் மின்சாரத்திற்கு பஞ்சம் இருக்கோ இல்லையோ ஆனால் நீங்கள் பார்த்து கொண்டிருப்பது நான் ஸ்டாப் கொண்ட்டாட்டங்கள் என நிறைய இடைவிடாமல் மழையை வடம்பிடித்து படம் பிடித்து நம் நாடிகளை பிடுங்க வைகின்றன.

கடந்த மூன்று வருடமாக சென்னையின் நிலை மிகுந்த சிக்கல்லில் உள்ளது . இன்னும் அது பேரழிவை சந்திக்கும் என தகவல்கள் கிடைத்து கொண்டிருக்கின்றது. நிவாரணங்களுக்காக நின்று கொண்டிருக்கிறோமோ என்றாவது நிரந்தர தீர்வு குறித்து நினைச்சிருக்கிறோமா அது என்ன நிரந்தர தீர்வுன்னு யோசிக்கிறிர்களா இருக்கு நிறைய இருக்கு அவற்றை அறிந்து கொள்வோம்.

சென்னைக்கு நிவாரணம் தேவையில்லை நிரந்தர தீர்வு :

சென்னை மழையால் சேரி வாழ் ஸ்லம் மக்கள் வாழ்க்கை பேஜாராய் போய் கொண்டிருக்கின்றது. பேஜாராய் போன இவர்களுக்கு தேவை நிவாரணமா நிரந்தர தீர்வா என்பதுதான் எனது கேள்வி,

மனிதம் காக்க வேண்டும் கரம் கொடுப்போம் , காப்போம் மனிதநேயம் என்பதெல்லாம் எதிர்ப்பாராத பேரழிவுக்கு எதைப்பற்றியும் கவலைப்படாத பேரழிவுக்கில்லை. கடந்த இரண்டு வருடங்களாக மக்களின் வாழ்க்கை நவம்பர் மாதங்களில் நனைந்து கசிந்து போகின்றதே அதற்கு என்ன காரணம் இனியாவது எஞ்சியிருக்கும் சென்னையை காப்போம்.

கனத்த இதயங்களுடன் கட்டிடங்களை தரமட்டமாக்குங்கள்:

இந்தமுறை மழை நின்றதும் ஏரியை வாரேன் எருமையை குழுப்பாட்டுரேன் என வாசிப்பதை நிறுத்துங்கள் போதும் உங்கள் வாய்ப்பிதற்றல் . முதலில் சென்னையின் வரைப்படத்தை பார்த்து பழைய எஸ்டிடிகளில் உள்ளப்படி செனையை மாற்றுங்கள் அரசுக்கு இது வேண்டுகோள் இல்லை, எச்சரிக்கை! இம்முறையில் நிவாரணம் தேவையில்ல்லை எங்களுக்கு நிரந்தர தீர்வை வேண்டுங்கள் சென்னை வாசிகளே!. உங்களின் கட்டிடம் எந்த ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது என்பது அறிந்து இடம் பெயருங்கள் தாழ்வான மேடான இடம் வேண்டாம்,  தட்டிப்பறித்த இயற்கையின் போக்கை பொறுப்போடு திருப்பி கொடுங்கள், உங்களோடு சென்னை அழிய வேண்டுமா இல்லை கொள்ளு பேரன் எள்ளு பேரன்களை சென்னை பார்க்க வேண்டுமா என்பதை சிந்தியுங்கள் செயலாற்றுங்கள்.

சென்னையை காக்க ஏரி , குளங்களை ஆக்கிரமித்து வாழும் ஏழுமலையாக இருந்தாலும் இந்தியன் ஏர்லைன்ஸ் ஆனாலும் பல்கலைகழக கட்டடங்கள், பல்லிழிக்கும் மால்களானாலும்  தயவு தாட்சியம் பார்க்கமல் இடியுங்கள் இல்லையெனில் இன்னொரு மழைக்கு உங்கள் வசந்த மாளிகைகளெல்லாம் வாழ்விழந்து மண்ணோடு போகும் .

மக்களே இயற்கையின் முன்பு எந்த தெர்மாகோள் திட்டங்களும் எடுபடாது . அதாகப்பட்டதென்னவென்றால் சென்னையை காக்க சென்னை வாசிகளே முடிவெடுக்க வேண்டும். நம்முடைய ஆடம்பர செகுசு வாழ்க்கைகாக நாம் இதுவரை நடத்திய நாடகத்தை நிறுத்துவோம் இடம் பெயர்வோம் இயற்க்கையின் ஏரி குளங்களை நாமே மீட்போம் சென்னைக்கு செவி கொடுப்போம் செத்துப்போன் ஏரி குளங்களை மீட்டுபோம் அரசை நம்பி ஆண்டியாவதை விட, அறம் செய்து இனிவரும் சந்ததியினரை இனிதே சென்னையில் வாழவைப்போம் !

Post a Comment

0 Comments