மயக்கநிலையில் உள்ளவர்களுக்கு என்ன செய்ய வேண்டும், மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு காத்தல், நீரில் விழுந்தவர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவிகள், தீக்காயம் ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும், அத்துடன் வலிப்பு வந்தவர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவிகள் என்னவென்று வரும் பதிவுகளில் கற்றுக்கொள்வோம்.
உயிர்காத்தல் என்பது அதிமுக்கியமான ஒரு உதவியாகும் ஆனால் அதுகுறித்து முறையான விழிப்புணர்வு நம்மிடையே இருப்பதில்லை என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். இதற்காகவே சிலேட்குச்சி முதலுதவி கற்பிக்க தொடங்குகிறது இதனை பயன்படுத்துங்கள், கற்றுகொடுங்கள் மற்றவர்களுக்கும் மகிழ்வுடன் வாழுங்கள் .
மயக்கநிலை கடக்கனுமா :
மயக்க நிலையிலுள்ளோரை எழுப்ப என்ன செய்யலாம் .
நீர் முகத்தில் தெளிக்கலாம் .
நம்ம பாசையில சொன்னா தண்ணிய முகத்தில் அடிக்கலாம். அது ஏன் முகத்தில் தண்ணீர் தெளிக்கின்றோம் எனில் உடலில் மற்ற பாகங்களை விட முகத்தில் தான் 40% உணர்வு நரம்புகள் இருக்கின்றது ஆதலால முகத்தில் நீர் தெளிக்கும் போது மயக்கநிலையில் உள்ளவர் மயக்கம் தெளிந்து எழுவார். முகத்தின் அருகில் மூளை இருக்கிறது ஆதாலால் உணர்வு நரம்புகள் அதிகப்படியாக முகத்தில் இருக்கின்றது.
(எ.கா )
கோவம் வரும் பொழுது வீட்டில அடி வாங்குகிறிங்களா முகத்தில் அடிக்கும் பொழுது கோவம் பொத்துட்டு வரும் காரணம் முகத்தில் உள்ள அதிக உணர்வு நரம்புகள்
காதலிக்கும் பொழுது கொடுக்கப்படும் முத்தங்களில் மெய் மறந்து போவேமே அது நினைவில் வருதா அதற்கு காரணம் முகத்தில் உள்ள உணர்வு நரம்புகள் ஆகும்.
மயக்கத்தில் உள்ளவர்கள், அடிப்பட்டவர்கள், மாரடைப்பில் உள்ளவர்கள், உடம்பில் அடிப்பட்டவர்கள் , தலையில் அடி பட்டவர்கள் இரத்தபோக்கு உள்ளவர்களுக்கு தண்ணீர் கொடுக்க கூடாது ஏன் தண்ணி கொடுக்க கூடாதுன்னு கேக்ரீங்களா , இந்த கேள்விக்கான விடை அடுத்த பதிவில் பார்ப்போம்
மேலும் படிக்க :
முதலுதவி மருத்துவத்தின் ஆரம்பம் அனைவரும் அறிதல் அத்தியாவசியம் !!!
0 Comments