மனித வாழ்க்கை :
மனித வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்தது உடல் நலம் அதற்கு மனிதன் முக்கியத்துவம் வழங்க வேண்டியது மிக அவசியம் ஆகும். ஆழும் வளரனும் அறிவும் வளரனும் என்ற கோட்ப்பாட்டை மனிதன் அறிந்து கொள்ள வேண்டும்.
நமக்கு இருக்கிற பிஸி செட்டியூல்ல நாம் எந்த ஒரு விசயத்திலு கவனமாக இருக்கனும் என்ற எண்ணம் நம்மிடையே இருப்பதில்லை. வண்டியில டிரைவ் போகும் போது ஏற்படுற கவனகுறைவால் தமிழ்நாட்டில் மட்டும் சராசரியாக வாகன விபத்தில பாதிக்கப்படுறவங்க இறக்கறவங்க எண்ணிக்கை மிக அதிகமா இருக்கு .
அத்துடன் விபத்துகளில் ஒருநாளைக்கு பாதிக்கப்படுறவங்க எண்ணிக்கை சுமார் 60 பேர் இது இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம் இருக்கின்றது.
ஒருநாளில் மாரடைப்பால் இறக்கின்றவர்களில் எண்ணிக்கை 22 பேர்
மின்சாரம், தீ விபத்து, தண்ணீரில் விழுந்து இறக்கிறவர்களின் எண்ணிக்கை 12 முதல் 14 வரையுள்ளது .
எதுக்கடா இந்த புள்ளி விவரம் என்று யோசிக்கிறிங்களா, ஏன் இப்படியெல்லாம் புள்ளி விவரங்களை கொடுத்து மக்களை பயப்படுத்துராங்கனு யோசிக்க வேண்டாம் . கொடுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் அனைத்தும் விழிப்புணர்வு பெற்று உயிர் காக்கவே வழங்கியிருக்கின்றோம் .
உயிர்காத்தல் என்ற ஒரு வாய்ப்பு நமக்கனைவருக்கும் வருவதில்லை ஆனால் அந்த உயிர்க்காக்கும் வாய்ப்பு கிடைக்கும் பொழுது அது குறித்து சரியான விழிப்புணர்வு கற்றல் தெரிந்திருப்பது இல்லை .
சிலேட்குச்சி வழங்கும் இந்த மருத்துவ உதவியை அனைவரும் அறிந்து கொள்வோம். அறியாதவர்களுக்கு கற்றுகொடுப்போம் . இந்த உடல்நல குறிப்பில் மிக அவசியாமான கற்றலில் ஒன்று முதலுதவி ஆகும் .
இந்த முதலுதவி குறித்து கற்றல் முறையான விழிப்புணர்வு நம்மிடையே முறையாக இருப்பதில்லை. வெளிநாடுகளில் ஐந்து வகுப்பு முதல் முதலுதவி படித்தல் பள்ளிகளில் கட்டாயமாகும். இந்தியாவில் அதுகுறித்து ஆலோசனைகள் வலியுறுத்தலகள் கொடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் பள்ளிகளில் முதலுதவிகள் குறித்து கற்றுத்தரப்படும் என்ற நம்பிக்கையில் சிலேட்குச்சி முதலுதவி குறித்து கற்றுத்தர தொடங்குகிறது .
முதலுதவி குறித்து நம்மில் பெரும்பாலோனோர்க்கு விழிப்புணர்வு கற்றல் இருப்பத்தில்லை. ஆனால் முறையான முதலுதவி கொடுத்தால் சுமார் 60 பேர் வரை ஒரு நாளைக்கு உயிர்காக்க முடியும்.
முதலுதவி என்பது ஒரு மனிதனின் உயிர்காத்தலுக்கு உற்றத்துணையாக இருக்குமென்ற கூற்று நம்மில் பலருக்கு தெரிவதில்லை .
அதனை படிப்படியாக தினமும் கற்றுக்கொள்வோம்.
0 Comments