பெண் பாதுகாப்பினை கேள்விகுறியாக்கியுள்ள பிரியாங்காவின் மரணம்!

அச்சமில்லை, அச்சமில்லை அச்சமென்பது இல்லையே இச்சகத்தோர் எல்லாம் எதிர்த்து நின்ற பொழுதும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே...

பிரியாங்காரெட்டியின் கற்பு பொது இடத்தில் திட்டமிட்டு சூரையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டு இன்றே நாடே கொந்தளிக்கின்றது.

என்னே என்ன கொடுமை, ஒரு பெண் கதற கதற கந்தலாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளாள், ஆனால் அதைவிட அதில் தவறு செய்தவன் இந்த மதம், இந்த இனம் என சலசலப்பை உருவாக்கியுள்ளனர். இதைவிட கேவளமாய் அமைச்சர் 100க்கு அழைத்திருக்கலாம் என்கின்றார். இதைவிட கொடுமையாய்  எங்கள் வீட்டுப் பெண்ணை காணவில்லை என்று காவல் துறைக்கு போனால் விசாரிக்காமல் உங்கள் பெண் யாருடனாவது ஓடியிருப்பாள் என வசைபாடுகின்றனர் காவல் துறையினர்.  இதெல்லாம் உச்சக்கட்ட வெறுப்பை உண்டு செய்கின்றது.



ஹே பெயரில்லா  இனமே நீ சதைபிண்டமாய்  ருசிக்க பெண் ஒரு போகம் இல்லை.
இனிமேல் யாரையும் நம்பி நாம் இருக்க வேண்டாம். பெண்களே விழித்திடுங்கள் வருடம் ஒரு பெண்ணுக்காக அழுதது போதும்

பொது இடங்களில் பெண்களே உங்களை காத்துக்கொள்ள எப்பொழுதும் பெப்பர் ஸ்பிரே மற்றும் சிறிய பேனா கத்தி வைத்துக் கொள்ளவும்.  பெண்தான் பெண்னை காக்க முடியும், சாலையில்  ஏதேனும் ஒரு பெண் இருந்தால், நின்று நலம் விசாரியுங்கள் உதவுங்கள், நீங்கள் கணவர், சகோதரர், அப்பா என யாருடன் வெளியில் சென்றாலும் பெண் தனியே நின்றால் அவர்களிடம் எல்லாம் சரியாக இருக்கின்றதா ஏதேனும் உதவி வேண்டுமா என கேளுங்கள்,.

இனி பெண்கள் பாதுகாப்புக்கென  நாடு முழுவதும் அலாரம் வைக்கப்பட வேண்டும். பொது இடங்களில் புகார் பெட்டி போல் அவை இருக்க வேண்டும். சாலைகளில் பெண்கள் பயணிக்கும் பொழுது, நிற்கும் பொழுது, கடைவீதிகளில் எங்கேனும் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் சிறு சந்தேகம் எழுந்தால் பெண்கள் கைக்கு எட்டும் அளவுக்கு அலாரம் இருக்க வேண்டும். அது கொடுக்கும் அபாயச் சத்தம் அருகிலுள்ள கடைகள், காவல் நிலையஙகள், டோல் பூத்துகள் போன்ற 10 இடஙகளுக்கு சமிக்கை கிடைக்க  வேண்டும் இது சம்மந்தப்பட்ட சுற்றியுள்ள 4 காவல் நிலையங்களில் உள்ள அதிகாரிகள் 10 நிமிடங்களில் அபாயச் சத்தம் கேட்ட இடத்தில் இருக்க வேண்டும். இது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும். இல்லையெனில் வருடம் ஒரு பெண்ணுக்காக ஆஸ்டாக் போட்டு அலர வேண்டும்.


Post a Comment

0 Comments