திருக்குறளுடன் மொழிப் பாடக் குறிப்புகளை படிங்க குரூப் 2 தேர்வை வெல்லுங்க!

தேர்வர்களே குரூப் 2 நேரடி தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டு படிக்க தொடங்கியாகிவிட்டது. திட்டமிட்டு படிக்க வேண்டிய பாடங்களை பட்டியலீட்டிர்களா உங்களுக்கான இந்த வாய்ப்பை எப்பொழுதும் பயன்படுத்தும்  பொழுது நேர மேலாண்மை என்பது அவசியம் ஆகும். நேரம் பொன் போன்றது அதே நேரத்தில் காலம் யாருக்காவும் காத்திருக்காது இந்த பழமொழிகளை நன்றாக  உணர்ந்து செயல்பட வேண்டும். வெற்றியை பெற வேண்டுமானால் அதற்கான சவால்களையும்  முறையாக கையாள வேண்டும். உங்களுக்கான திருக்குறள் பாடக்குறிப்புகள் சிலேட்குச்சி வழங்குகின்றது படியுங்க தேர்வை வெல்லுங்க.

திருவள்ளுவரின் சிறப்பு பெயர்கள் 
முதற் பாவலர், தெய்வபுலவர், செந்நாப் போதர், பொய்யில் புலவர், பெருநாவலர், மாதானுபங்கி,

தமிழக அரசு திருவள்ளுவரையும் உலகப் பொதுமறையான திருக்குறளையும் சிறப்பிக்க தை மாதம் இரண்டாம் நாளை திருவள்ளூவர் நாளாக அறிவித்து கொண்டாடியது. 


திருக்குறள் மொத்தம் 9 இயல்களின் எண்ணிக்கையை கொண்டது. 1812 இல் திருக்குறளை முதன் முதலில் பதுப்பித்து தஞ்சையில்  வெளியிட்டனர். 1812 இல் மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம் என்பவர் பதிப்பித்து வெளியிட்டார்.

திருக்குறள் ஆங்கிலம், கிரேக்கம், இலத்தீன் போன்ற முக்கிய மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் திருக்குறள் 107 மொழிகளுக்கே மேல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

திருக்குறள்  குறள் வெண்பாவால் ஆனது ஆகும். மேலும் வள்ளுவருக்கு சுருங்கச் சொல்லி விளங்க வைப்பவர் எனச் சிறப்புமுண்டு. 

திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால் தமிழன் என்னும் ஒர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது. திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றாவிட்டால் தமிழ்மொழி இருப்பாதாக உலகத்தாருக்கு தெரிந்திருக்காது என கி.ஆ.பெ.விசுவநாதம் தெரிவித்தார். 


பால்
அதிகாரம்
இயல்
இயல்களின் பெயர்கள்
அறம்
18
4
பாயிரவியல் 04, இல்லறவியல் 20, துறவறவியல் 13,
ஊழியல் 01
பொருள்
70
3
அரசு இயல் 25, அமைச்சு இயல் 32, ஒழியியல் 13
இன்பம்
25
2
களவியல் 07, கற்பியல் 18

திருவருட்பா :
கண்ணில் கலந்தாள் கருத்தில் கலந்தான் என்று பாடியவர் இராமலிங்கர் அடிகளார் ஆவார்.
இராமலிங்க அடிகளாரின் சிறப்பு பெயர் திருவருட்பிரகாசன் வள்ளலார். 
இராமலிங்க அடிகளாரின் பெற்றோர்  இராமையா- சின்னம்மையார் ஆவார். அடிகளார் எழுதிய நூல்கள் ஜீவ காருண்யம் ஒழுக்கம், மனுமுறைகண்டவாசகம் ஆகியவை ஆகும். 

ராமலிங்கரின் பாடல்கள் அனைத்தும்  திருவருட்பாவில் தொகுக்கப்பட்டுள்ளன. 
மேலும் இவர் சமரச சன்மார்க்க நெறியை வழங்கியவர் ஆவார்.  அனைத்து மதங்களின் நல்லிணைக்கத்திற்காக சங்கத்தை அமைத்தார். 
சத்திய தரும சாலையை ராமலிங்கர் அமைத்து பசித்துயர்  போக்கி மக்களுக்கு உணவளித்தார். 
ஞானசபையை இராமலிங்க அடிகளார் அறிவு நெறிவிளங்க நிறுவினார். 
வாடிய பயிறை கண்டபொழுதெல்லாம் மனம் வாடினார்.  வடலூரில் ராமலிங்கரின் சத்திய தரும சாலையை நிறுவினார். இன்றும் அது சிறப்பாக நடைபெறுகின்றது. திருவருட்பாவில் மொத்தம் 5818 பாடல்கள் உள்ளன.


மேலும் படிக்க: 


Post a Comment

0 Comments