ஆடை உலகின் உங்களுக்கான டிரெண்டிங் கலெக்சன்

பேசன் வோல்டில்  நம்முடைய கலெக்சனில் எப்பொழுதும் புதிய ரகங்கள் புகுத்த முக்கியத்துவம் கொடுப்போம்.  இன்றைய பெண்கள்  தங்களுக்கு ஏற்ற உடை, ஆபரணம், மற்றும் கலர் தெரிந்து அவற்றை பயன்படுத்துவதில் ஆர்வமாக இருக்கின்றனர்.  பெண்களுக்கான கலெக்சன்ஸ், வெரைட்டிகளுக்காக புதுப்புது வெப்சைட்கள் ஏராளம் இயங்குகின்றன. பெண்களே உங்களுக்கான  கலெக்சன் லிஸ்டுகளை இங்கு கொடுத்துள்ளோம்.

நவீன உலகின் உடைகளுக்கான கலெசன்கள்  எந்த அளவுக்கு தங்களுக்கு பொருந்தும் என பேசன் படிக்கும் யுவதிகளே, உங்களுக்கான குறிப்புகள் படியுங்கள்,  உயரமாகவும், ஒல்லியாகவும் உள்ள பெண்ணா நீங்கள், குறுக்கே கோடுகள் போட்ட  உடைகளையோ அல்லது பெரிய டிசன்கள்  கொண்ட உடைகளையோ அல்லது பெரிய பார்டர்கள் போட்ட உடைகளை அணிந்ததால் பார்க்க அழகாக இருக்கும். அவைகளை உங்களுக்கு எடுப்பாக இருக்கும்.

கொஞ்சம் பூசியபடி குண்டாக உள்ள பெண்கள் சிறிய டிசன்கள் உள்ள உடைகளையும், சிறிய கோடுகள் போட்ட உடைகளையும், அகலம் குறைவான  பார்டர்கள் உங்களுக்கு  எடுப்பாக இருக்கும் மேலும் உங்களை கட்சிதமாக காட்டும்.



கலர் கலெக்சன்ஸ்:
 மல்டி கலர், சிங்கிள்,  பிளைன் போன்ற வெரைட்டிகளை தங்கள் உடைகளில் பெண்கள் இருக்குமாறு விரும்புவார்கள்,  நிறமாக இருக்கும் பெண்களுக்கு டார்க் கலரும், நிறம் குறைவாக இருக்கும் பெண்களுக்கு லைட் கலரும் பொருத்தமாக இருக்கும் என்ற பொதுவான கருத்து உள்ளது. கருப்பாக இருக்கும் பெண்கள் லைட் கலர் உடை அணிவது விட டார்க் கலர் அணிந்தால்   அது   அவர்களை எடுப்பாக இருக்கும்.

சிவப்பாக இருக்கும் பெண்கள் லைட் கலர் அணிவதால் அழகாகத் தெரிவார்கள். நிறம் குறைவாக உள்ள  பெண்களுக்கு ஓவர் லைட்டாகவும் இல்லாமல், ஓவர் டார்க்காவும் இல்லாமல் இருக்கும் மீடியமான கலர்கள் தான் மிகவும் சிறந்தது. உதாரணமாக கருப்பான பெண்கள் புளூ கலர் உடைகளை அணிந்தால் பார்க்க மிகவும் அழகாகவும், கலராகவும் தெரிவார்கள்.

பண்டிகை காலத்தில் உங்களுக்கான  புதுபுது  கலெசன்கள் சந்தையில் கொட்டிக் கிடக்கின்றது.  உங்களுக்கேத்த பேசனை தேர்வு செய்யுங்க   லுக்கா மாஸ் கிளப்புங்க

Post a Comment

0 Comments