மத்திய அரசில் வேலை வேண்டுமா விண்ணப்பியுங்கள்!

மத்திய அரசின் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிட்டெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு  செய்யப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 45 ஆகும். பிஇசிஐஎல்லில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் பெயர்கள் ஆப்ரேசன் தியேட்டர் டெக்னிசியன், ஆப்ரேசன் தியேட்டர் அஸிஸ்டெண்ட் ஆகும். 

மத்திய அரசின் பிஇசிஐஎல்லில்  ஆப்ரேசன் தியேட்டர் டெக்னிசியன் பணிக்கு மாதச் சம்பளமாக ரூபாய் 19, 032 தொகையும், ஆப்ரேசன் தியேட்டர் அஸிஸ்டெண்ட் பணிக்கு ரூபாய் 17, 498  தொகையும்  பெறலாம்.

கல்வித்தகுதியாக பிஎஸ்சி மற்றும் +2 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

40 வயது வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 




விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 500 செலுத்த வேண்டும். 

அதிகாரப்புர்வ தளத்தில் https://www.becil.com  தேவைப்படும் தகவல்களை அறியலாம்.  மேலும் கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து சான்றிதழ் நகல்களை இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும். 

அனுப்ப வேண்டிய முகவரியினை கீழே கொடுத்துள்ளோம். 
பிஇசிஐஎல் கார்பரேட் ஆபிஸ் 
சி-56, 
ஏ/17 செக்டர்- 62, 
நொய்டா- 201307

விண்ணப்பங்கள்    சேர வேண்டிய  இறுதி தேதி அக்டோபர் 25, 2019 ஆகும்.  

மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பெற இங்கே கிளிக் செய்யவும். 

Post a Comment

0 Comments