சுவட்ச் பாரத் அடுக்க கட்ட இலக்கை நோக்கி பயணம்!...

காந்தியின் பிறந்த தின கொண்டாட்டத்தினை இந்தியா விமரிசையாக கொண்டாடும் வழக்கம் கொண்டது.  மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2 ஆம் தேதியில் நாடு முழுவதும் காந்தியின் அகிம்சை கொள்கை, சத்திய வாழ்கை நினைகூரந்து பேசப்படுகின்றது. 
காந்தியின் கொள்கைகளை முன்னிருத்தி, தூய்மை இந்தியா என்ற திட்டத்தை   2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்தார்.

சுவட்ச் பாரத்:
சுவட்ச் பாரத் திட்டத்தின் பெரும்பாலான கொள்கைகள் நிறைவேறிவிட்ட நிலையில் ஸ்வச் பாரத் 2.0  விரைவில் துவக்க அரசு திட்டமிட்டுள்ளது.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளான இன்று நாட்டை திறந்த வெளிக் கழிப்பிடம் இல்லாத நாடு என்று அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுகின்றது. தூய்மை இந்தியா இயக்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையினை அரசு  மேற்கொண்டு வருகின்றது.

பிரதமர் மோடி 2014-ம் ஆண்டு தொடங்கிய தூய்மை இந்தியா திட்டமானது 11 கோடி கழிவறைகள் நாடு முழுவதும் உருவாக்கியுள்ளது. இதன் மூலம் நாடு திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாத நாடாக  மாறவுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். 

ஸ்வச் பாரத் 2.0 இயக்கத்தின் முக்கிய நோக்கம், திடக்கழிவு மேலாண்மை, கழிவுரை நீரை சுத்தப்படுத்தி மறுசுழற்சிக்குப் பயன்படுத்துதல், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் விஷயங்களைக் கையாளுதல் போன்றவை பிரதான நோக்கங்களாகும். சுவட்ச்பாரத் இயக்கம் 2.0 அல்லது திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாத நாடு (ஓடிஎப்)திட்டம் மிக விரைவில் மத்திய அரசு அறிவிக்கும் போன்ற தகவல்கள் கிடைக்கின்றன.
 


இத்திட்டத்துக்கான அனைத்துப் பணிகளும் நடந்து வருகின்றன. யுனிசெஃப் அமைப்புடன் சேர்ந்து கடந்த 12 மாதங்களாக அதிகாரிகள் இதில் ஈடுபட்டு வருகிறார்கள். இத்திட்டத்தின் படி, ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி, விழிப்புணர்வுப் பிரச்சாரம் மூலம்  மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மாற்றத்தை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. துய்மையான இந்தியாவின் அடுத்த திட்டத்தில் முதலீடும் மிகப்பெரிய அளவில்  அரசு ஒதுக்கீடு செய்யும். 

நாட்டின் வளர்சி மற்றும் பாதுகாப்புக்கு அரசு எவ்வாறு திட்டமிடுகின்றதோ அதுபோல்  நாட்டின் தூய்மை ஆரோக்கியத்தில் அரசு கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Post a Comment

0 Comments