தீபாவளி பண்டிகை நெருங்கி கொண்டிருக்கின்றது. தமிழகத்தில் சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார்.
வெதர்மேன் தனது ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, தற்போது கன்னியாகுமரியில் மிகக் கன மழை பெய்து வருகிறது. அதேப்போல தூத்துக்குடி, ராமநாதபுரம், கோவை, நீலகிரி மாவட்டங்களிலும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களும் இன்று பரவலாக மழையைப் பெறும். தமிழகத்தில் சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் பரவலாக கன மழை பெய்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வானிலையில் வேகமாக உருவாகும் மேகச் சுழற்சியால் ராமநாதபுரம் முதல் சென்னை வரை கடற்கரையை ஒட்டியிருக்கும் மாவட்டங்களில் இன்று முதல் மழை பெய்யும்.
சென்னை முதல் தூத்துக்குடி வரை பகல் நேரங்களில் மழை பெய்வதைப் பார்க்க முடியும். சென்னையில் அவ்வப்போது மழை பெய்யும் நிலை இருப்பதால், வெளியே செல்பவர்கள், ரெயின் கோட் அல்லது குடையை நிச்சயம் கொண்டு செல்வது நல்லது என தெரிவித்துள்ளார்.
அதே சமயம் இவ்விரு நாட்களில்இரவு அல்லது காலை நேரத்தில் மிகக் கன மழையாகவும் இருக்கும்.
மீனம்பாக்கம், ஆலந்தூரில் 6 செ.மீ. கேளம்பாக்கம், மாமல்லபுரம், கேகே நகர், கோலப்பாக்கம், நுங்கம்பாக்கம் - 4 செ.மீ. அதே போல் கேரளாவிலும் இவ்விரு தினங்களும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் பட்டாசு வாங்குவது, புதுத்துணி, இனிப்பு காரம் பலகாரங்கள் செய்ய கடைவீதிகளில் கூட்ட நெருசல்களில் சென்று வருகின்றனர். மழையும் தன் பங்குக்கு காட்டு காட்டுகின்றது. பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறையானது மழையை பொறுத்து அரசு அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மேலும் படிக்க:
0 Comments