சூழற் கைதிகள் கேட்பாராற்று அடிமைகளானோம்...












நான் ஒரு Q.C பிரதிநிதி , அதாவது தயாரிக்கப்பட்ட கனரக எந்திரபாகங்களை தரசரிபார்ப்பிற்க்குப்


பின் வாடிக்கையாளரின் வாகனத்தில் ஏற்றி அனுப்பும் பொறுப்பு என்னுடையது .






வேலைபளுவைவிட எனக்கு அளிக்கப்படும் சதா சர்வ காலமும் பாக்கு மென்றுகொண்டும் ,


கிழிந்த ஆடைகளை அணிந்துகொண்டும், வினோத ஓசைகளை எழுப்பிக்கொண்டும் ,
கிடைக்கும் இடைவெளிகளில் சத்தமாக பாடல்களை ஒளி பரப்பிக்கொண்டும் ,
போன் பேசிக்கொண்டும் , எல்லாவற்றிற்கும் மேலாக கடின ...
மிக கடின உழைப்பை தரும் வசதி , வேலைவாய்ப்புகளற்ற ,
வடஇந்திய கிராமங்களிலிருந்து வழின்றி வந்து பணிபுரியும் " பையா "க்கள் .
அவைர்களிடம் நானறிந்த சொற்ப ஹிந்தி வார்தைகளை பயன்படுத்தி வேலை வாங்கிவந்தேன் .

கோடைகாலம் தொடங்கியது முதல் வேலைக்கு வரும் பையாக்களின் எண்ணிக்கை குறைய  ஆரம்பித்தது..


விசாரித்ததில் வருடம் முழுவதும் மூச்சு பிடிக்க , ஏச்சும் , பேச்சும், வாங்கி

(தத்தமது கான்ட்ராக்டரின் கமிஷன் போக) சம்பாதித்த பணத்தை அவரவர்களின்

சொந்த ஊர்களில் சேர்ப்பித்துவிட்டு , சொற்பகாலம் ஓய்வெடுத்தபின் மீண்டும்
இங்கேயே வந்து விடுவார் என அறிந்தேன் .

இந்த இடைப்பட்ட நாட்களில் ஆட்பற்றாக்குறை பெரும் பாடாகிபோனது ,

பல சிறார்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர் ... நித்தமும் ஆட்கள் மாறிக்கொண்டே இருந்தனர் .,
ஆகையால் பயிற்றுவிப்பதே பெரிய வேலையாகி போனது !! ,

ஆகையால் தேக்க நிலையும் அதிகரித்து நேரம் பாராமல் வேலை செய்துவந்தோம் .
வழக்கம்போல் அன்று காலையும் பலர் புதிதாய் வந்தனர் ,
அதில் ஒருவன் மிக சிறியவனாக 15 வயதுகூட நிரம்பாதவனாக தெரிந்தான் .
அனால் வேளையில் படு சுறுசுறுப்பாக இருந்தான் .
எனினும் எனக்கு மனது உறுத்தியது , தவறு என்று பட்டது .
எதேச்சையாக எதிரில் H.R பாலா வந்துகொண்டிருந்தார் ,
வழக்கமான உரையாடலுக்கு பின்னர் அச்சூட்டி சிறுவனைப்பற்றி நாசுக்காக குறிப்பிட்டேன் ,
அவரரோ " விடுங்க பாஸ் கண்டுக்கிடாதீங்க ,
பயலுங்க வர்றதே பெரும் பாடா இருக்கு , நா பாத்துக்கிடறேன் .. யூ டோண்டு ஒர்ரி "
என்று கூறி நழுவினார்.

மதியம் " ஜி.எம்" கூப்பிட்டு அனுப்பினார் , " என்ன செல்வம், வேலைலாம் எப்புடி போவுது ,
நிறையா கம்பளைண்ட்ஸ் உங்க மேல .. , புதுசா ரூல்ஸ்லாம் பேசறீங்களாம் .
முடிஞ்சா குடுக்கற வேலைய பாருங்க இல்லாட்டி பல பேரு தவம்கிடக்கான் வேலைக்கு "
என்று ஏடாகுடமாய் பேசி அனுப்பினார் .
இது பாலாவின் பற்றவைப்பு என்பது மட்டும் தெளிவாய் புரிந்தது .

வாடிய முகத்துடன் மீண்டும் பணியை தொடங்கிய சில நேரத்திலேயே
" உனக்கு ஏண்டா இதெல்லாம் ? , 3 மாசம் முன்னாடி பாதுகாப்பு அதிகாரியவே பாலிடிக்ஸ்

பண்ணி அனுப்பிட்டான் அந்த பாலா , உனக்கு தெரியும்ல ? ,
பாத்துகோ அவ்ளோதான் சொல்லுவேன் " என்று மனோஜ் அவன் பங்கிற்கு சொல்லிவிட்டு
போனான் ... அறிதான அக்கறையுள்ள சகா !

சில நாட்களுக்கு பின் பொருட்களை ஏற்றி அடுக்கையில் இரு ஆட்களுக்கு
(காலை 10 மணியளவில் ) காயம் ஏற்பட்டது , ஒருவனுக்கு லேசான காயம் முதலுதவி

அளிக்கப்பட்டது .. மற்றொவனுக்கு விரல்களில் இருந்து ரத்தம் வெள்ளமாக கசிந்தது .. ,
அதுவும் நான் குறிப்பிட்ட அதே சுட்டி சிறுவனுக்கு
அன்று பாலா விடுப்பில் இருந்ததால் நானே அவனை ஓட்டுநர் உதவியுடன் அருகேயுள்ள மருத்துவ
கல்லூரி மருத்துவமனைக்கு கூட்டி சென்றேன் ,
கையில் ஓரளவு காசு இருந்தால் எதற்கும் தாமதிக்காமல் " X -ரே , மருந்து , மாத்திரை ,
என ஏற்பாடு செய்தேன் .
அங்கு இருந்த இளைய மருத்துவரும் மிக அக்கறையுடனும் , சிறிது நேரத்தை கூட
வீணடிக்காமலும் ,விவேகத்துடநும், செயல்பட்டு ரத்த கசிவை நிறுத்தினார் .
புதிதாக படித்து முடித்தவர் போல என்று எண்ணிக்கொண்டேன் .

சில நேரம் கழித்து அறுவைசிகிச்சைக்கான பதிவேட்டில் கையொப்பம்மிட்டேன் ,

அவன் பெயர் " கந்தி மால் " என்றே அப்போது தான் அறிந்தேன்! .
சிகிச்சைக்குப்பின் " அவனது இருவிரல்களும் நசுங்கிவிட்டது , அவற்றை நீக்கிவிட்டோம்

ஒருவாரமாவது ஓய்வெடுக்கணும் , ரெண்டுநாள் இங்கயே இருக்கணும் ,

பிறகு பாத்துட்டு கட்டு பிரிப்போம் " என்றனர்.

மாலை 6.30 திற்கு மேல் சாவகாஸமாய் வந்தான் கந்தியின் காண்ட்ராக்டர் ,
வந்து அவனை ஏனோ தானோ என்று பார்த்துவிட்டு " டிஸ்சார்ஜ் " பண்ணிக்கிறேன் என்றான் ..
நானோ எரிச்சலடைந்து ஆவேசப்பட்டேன் , அவன் சிறிதும் அலட்டிக்கொள்ளாமல்
" சோர்தோ சார் , ஆப்கா பிராப்லெம் நஹி " என்று கூறிக்கொண்டே அவனது செல் போனினை
டயல் செய்து என்னிடம் நீட்டினான் .






மறுமுனையில் " நன்றி செல்வம் , பில்ஸளாம் அக்கவுண்ட்ஸ்ல கிளைம் பண்ணிக்ககிடுங்க,
நா பாத்துக்கிடறேன் " என்றான் பாலா அதே விஷமத் தனத்துடன் .

இரண்டு , மூன்று நாட்கள் அதே நினைப்பாகவே இருந்தது , அலுவலகத்தில் அவனைப் பற்றி
யாரும் கேட்கவேயில்லை ...
ஒரே வாரதிற்குள் கையில் கட்டும்பிரியாமல், ரத்தவிளாறுடன், கந்தல் துணியை

சுற்றிக்கொண்டு வேலைக்கே வந்துவிட்டான் " கந்தி " !! , சற்று தள்ளி அவனது காண்ட்ராக்டர்
எங்கள் இருவரையும் ஏளன புன்னகையுடன் பார்த்தான் .

சிலரின் வறுமை இங்கு பலருக்கு லாபம், நானும் அவன் போன்ற ஒரு சூழ்நிலை கைதியே .


                                              ---------- சா.ரா

Post a Comment

0 Comments