யார் அந்த உமா ….? தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற சிகரம்!

                                        

விசு



ஒருமுறை பள்ளி ஆசிரியர்கள் சுற்றுலா சென்றனர் , அந்த குழுவை வழிநடத்திச் சென்றவர் . சுற்றுலா வந்த ஆசிரியர்களை நன்றாக கவனித்துக்கொண்டு பத்திரமாக பார்த்துக்கொண்டார் .

சிலோனில் உள்ள கந்தர் கதிர்காமர் கோவில் தரிசனம் முடித்து விட்டு அனைவரையும் ஓய்வெடுத்து உறங்க வைத்துவிட்டு அவர் வெளியில் ஒரு திண்ணையில் உட்கார்ந்துகொண்டு “ மாங்கு, மாங்கு“ என எழுதிக்கொண்டிருந்தார் .

அதை கவனித்த ஒரு ஆசிரியை , என்ன சார் அப்படி என்ன எழுதறீங்க ? என கேட்க . அவரும் அவர் எழுதியத் தாளைக் கொடுத்தார்.

அந்த ஆசிரியை அவர் எழுதிய நாடகத்தை படித்துவிட்டு “ நீங்க இன்னும் சில நாட்களுக்கு பின் எங்கயோ போகபோறீங்க , ரொம்ப அருமையா , ஆழமா கதாபாத்திரங்களை செதுக்கி இருக்கின்றீர்கள் “ என்று அவரை மனதாரப் பாராட்டியுள்ளார் .

அதற்க்கு அவர் “ நீங்க சொல்றமாதிரி மட்டும் நடந்திச்சுன்னா , என்னோட கதையின் நாயகிகளுக்கு எல்லாம் உங்கள் பெயரையே வைக்கிறேன் “ என்றார்.

அந்த ஆசிரியை கூறியப்படியே அவரும் மேடை நாடகங்கள் போட்டு வாகை சூடி , பிறகு வசன கர்த்தாவாக மாறி , கடின உழைப்பின் மூலம் இயக்குனர் ஆனார் . இன்றளவும் அவரின் படங்கள் நடுத்தர குடும்பங்களின் நாதம் .

அவரின் படங்கள் பெரும்பாலும் கூட்டுக்குடும்பம் , உறவுகளின் நுட்பம், பந்தம் , பாசம் , பொது ஜனங்களின் வாழ்வியல் நெருக்கடிகளை பேசியது .


மிகவும் எதார்த்தப் படைப்புகள் அவை !

அவர் பெயர் மீனாட்சி சுந்தரம் ராமசாமி விஸ்வநாதன் , சுருக்கமாக சொன்னால் “ விசு “ அவர் இயக்கிய “ கண்மணி பூங்கா “ , “ வரவு நல்ல உறவு “ , “ டௌரி கல்யாணம் “ , “ மணல் கயிறு “ , “ வேடிக்கை என் வாடிக்கை “ ,

“ பெண்மணி அவள் கண்மணி “ , “ சம்சாரம் அது மின்சாரம் “ போன்ற படங்கள் மிகப் பிரபலம் .

அவர் பத்து வருடங்களுக்கு மேலாக தொகுத்து வழங்கிய “ அரட்டை அரங்கம் “ என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியும் மிகப் பிரபலம் .


அவர் அந்த ஆசிரியருக்கு கொடுத்த வாக்கின் படியே அவர் இயக்கிய அணைத்து படங்களின் நாயகி கதாபாத்திரத்திரங்களின் பெயரை வைத்ததோடு நில்லாமல் “ சுந்தரி “ என்கிற அவரது மனைவியின் பெயரைக்கூட ( அவரின் சம்மதத்துடன் ) மாற்றி அழைத்தார்
முதன்முதலில் அவருக்கு ஊக்கமளித்த அந்த பெருமதிப்பிற்குரிய அந்த ஆசிரியரின் பெயர் தான் “ உமா “ .




பின்குறிப்பு :  என்னை ஈன்றேடுத்த தாயாரின் பெயரும் , தாய்க்கு நிகரான பாசத்துடன் இருக்கும் எனது அக்காவின் பெயரும்  “ உமா “ தான் .


சா.ரா

Post a Comment

0 Comments