இந்தப் பதிவில் இன்று மார்ச் 21ஆம் நாளில் என்னென்ன தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பதை தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
1. உலக காடுகள் தினம்
பருவ கால நிலை மாறாமல் இருப்பதற்கும் சீராக இருப்பதற்கும் காடுகளின் பங்கு முக்கியமாக இருக்கிறது. காடுகள் அழிவதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தான் இன்று அதாவது மார்ச் 21ம் தேதி உலக காடுகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காடுகள் அழிக்கப்படுவதால் உலகில் வெப்பநிலை அதிகரிக்கிறது. எனவே காடுகளின் அவசியத்தை உணர்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் இந்த தினத்தில் காடுகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகள் எடுத்துச் சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி வன வளத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியமாக இருப்பதால், இதனையும் எடுத்துச் சொல்லப்படுகிறது.
2. உலக பொம்மலாட்ட தினம்
பண்டைய காலத்தில் மரபுவழிக் கலைகளில் ஒன்றானது பொம்மலாட்டம். பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்குப் பின்னாலிருந்து ஏற்றியபடி கதை சொல்லும் கலை தான் பொம்மலாட்டம். இந்த கலையானது கூத்து வகையைச் சேர்ந்தது. மரப்பாவைக்கூத்து, பாவைக்கூத்து என்ற பெயர்களாலும் இந்த கலை அழைக்கப்படுகிறது. இந்த கலையானது நாட்டுப்புற கலைகளில் ஒரு தனிப் புகழை கொண்டுள்ளது. இன்று பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை சாத்தியமாக்குகிறது என்பதால் திரைப்படத்தின் மூதாதையாகவும் இந்த கலையை சொல்கிறோம். உலகின் பல்வேறு இடங்களில் பொம்மலாட்டம் மரபுவழி கலையாக மட்டும் இல்லாமல் உயிர் அற்ற பொம்மைகள் உயிர் பெற்று திரைக்கு முன்னே ஆடிப்பாடி பேசும் உணர்வில் அனைவரையும் கவரும் வண்ணம் இருக்கின்றது.
3. உலக வண்ண நாள்
பன்னாட்டு வண்ண நாள் என்னும் இந்த நாளை உலகம் சுற்றியுள்ள மறக்க முடியாத வண்ண நடவடிக்கைகள் பெருகிய முறையில் அனைத்துலக வண்ணம் நாள் உருவாக்கி கொண்டாடப்பட்டு வருகின்றது.
4. உலக கவிதை நாள்
உலகம் முழுவதும் கவிதை வாசிக்கவும் எழுதவும் வெளியிடவும் மற்றும் போதனை செய்யவும் ஊக்குவிக்கும் வகையில் யுனஸ்கோ என்னும் ஐக்கிய பண்பாட்டு நிறுவனத்தால் 1999 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
5. இனப் பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாள்
1960 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் நாளில் தென்னாபிரிக்காவின் ஷாடெங்கிலுள்ள உள்ள ஷார்ப்வில் நகர்புறத்தில் நிகழ்ந்த இனவாதிகளுக்கு எதிரான அமைதி பேரணியின் போது அந்நாட்டு காவல் துறையினரால் 69 பேர் கொல்லப்பட்டார்கள். இதன்மூலம் எல்லாவகை இனப் பாகுபாட்டையும் ஒழிக்க வேண்டும் என்ற முயற்சி எடுத்து பன்னாட்டு சமூகத்தை வேண்டி ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1966 ஆம் ஆண்டில் மார்ச் 21ம் தேதியை இனப் பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாளாக அறிவித்தது.
6. உலக டவுன் சிண்ட்ரோம் தினம்
பொதுவாக மனிதன் நோய்வாய்ப்பட்டு இருப்பது இயற்கையாக இருக்கிறது. அது மட்டுமில்லாமல் நோய் எப்பொழுதும் மனிதனின் பகுதியாகவே மாறிவிட்டது. டவுன் சிண்ட்ரோம் என்பது மன வளர்ச்சி குன்றியதைத்தான் குறிக்கிறது. இந்த நோயை முதன்முதலில் கண்டறிந்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவர் ஜான் லாங்டன் டவுன். இவர் 1862ல் தனது ஆராய்ச்சிகள் மூலம் டவுன் சிண்ட்ரோம் எப்படி ஏற்படுகிறது என்பதை கண்டறிந்தார். அதனால்தான் அவரது பெயரின் பின் பாதி இந்த நோய்க்கு வைக்கப்பட்டுள்ளது.இந்த நோயானது மனித செல்கள், குரோமோசோமில் ஏற்படும் குறைபாட்டால் ஏற்படுகிறது. இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக ஐக்கிய நாட்டு பொதுச்சபை 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மார்ச் 21 உலக டவுன் சிண்ட்ரோம் தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவித்தது.
0 Comments