பிரம்ம முகூர்த்தம் பற்றிய தகவல்கள் அறிவோமா



சூரியன் உதிப்பதற்கு முன்பு இருக்கும் அதிகாலைப் பொழுதை உஷத் காலம் என்று சொல்கிறார்கள். உஷத் காலம் உஷஸ் என்னும் பெண் தேவதையைப் பற்றி ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இவள் தோன்றிய பின்பே சூரியன் உதயமாகிறான்.அந்த சமயத்தில் தேவர்கள், சிவபார்வதி, மகாலட்சுமி போன்ற தெய்வங்கள் வானமண்டலத்தில் சஞ்சரிப்பது ஐதீகமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் முக்கியமாக தூங்கக் கூடாது. தியானம் வழிபாடு போன்ற பயனுள்ள பணிகளை செய்தால் பலன் அதிகமாக கிடைக்கும். முக்கியமாக இந்த நேரத்தில் செய்யும் வழிபாடு பல மடங்கு அதிக புண்ணியத்தை தருகிறது. 



உடலுக்கும் உள்ளத்துக்கும் ஊக்கம் தருவது காலையில் கண் விழிப்பதாகும். அதிகாலை நேரத்தில் எழுவதால் உடல் சுறுசுறுப்படையும் மற்றும் ஆரோக்கியமாகவும் இருக்கும். எந்த சத்தமும் இல்லாமல் பரபரப்பும் இல்லாமல் காரியங்கள் சிறப்பாக முடியும். அது மட்டுமில்லாமல் அதிகாலை நேரத்தில் சுத்தமான காற்று இருக்கும் மேலும் அதிகாலைப் பொழுதில் வெளியே நடந்து செல்வதால் சுத்தமான காற்று சுறுசுறுப்பை உண்டாக்கி நல்ல உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். 

பெரும்பாலும் இந்துமக்கள் தேதி, கிழமை, நல்லநாள், யோகம் ஆகிய அனைத்தும் சரியாக இருந்தால்தான் எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்குவார்கள். நல்ல நாள் கிடைத்தால் நல்ல நேரம் கிடைக்காது அதனால் நான் செய்ய நினைக்கும் காரியங்கள் அனைத்தும் ஏதாவது தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். இதனை தவிர்க்க நாம் பிரம்மமுகூர்த்தத்தில் தேர்வு செய்வது நல்லது. பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3 மணி முதல் 5 மணி வரை.

எந்த காரியங்களும் செய்வதாக இருந்தால் நல்ல நாள் பார்த்தால் மட்டும் போதும் நேரம் பார்க்க தேவையில்லை எந்த ஒரு நல்ல காரியத்தையும் பிரம்மமுகூர்த்தத்தில் தொடங்கலாம். இந்த அதிகாலை நேரத்திற்கு அவ்வளவு மகிமை இருக்கிறது.




அதிகாலை நேரத்தில் எழுவது பல நன்மைகளைத் தரும் என்று சாஸ்திரங்களும் விஞ்ஞானமும் கூறுகின்றது. வைகறைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக் கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை நம் உடலில் படும் பொழுது நரம்புகளுக்கு தெம்பையும் உற்சாகத்தையும் தருகிறது. அதுமட்டுமல்லாமல் கண்களுக்கு ஆரோக்கியத்தையும் உடல் வலிமையையும் தருகின்றது. அதனால் தான் சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள் கூறுகிறார்கள்.


இந்த அதிகாலை நேரத்தில் எழுவதால் உடல் சுறுசுறுப்படையும் மற்றும் ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் மன அழுத்தம் இல்லாமலும் பரபரப்பும் இல்லாமலும் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்ய முடியும். இந்த தேவதை யின் செழிப்பான கிரணங்கள் விடியற்காலையில் பூமியை நோக்கிப் பாய்வதால் தான் அந்த வேளையில் நீரில் மூழ்கி நீராடுவது விசேஷமாக சொல்லப்படுகிறது. இதனால்தான் அதிகாலை நேரத்தில் நீரும் வெதுவெதுப்பாக காணப்படுகிறது. அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்று நம் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.


தொழில் தொடங்குதல், கணபதி ஹோமம், கிரகப்பிரவேசம், திருமணம் என எந்த ஒரு நல்ல காரியத்தையும் பிரம்மமுகூர்த்தத்தில் செய்யலாம். ஏனென்றால் அது கட்டாயமாக வெற்றியில் முடியும்.

கிரக தோஷம் ராகு-கேது தோஷம் களத்திர தோஷம் இருப்பவர்கள் தோஷ பரிகாரம் செய்வது மட்டுமில்லாமல் இவர்களுக்கு அதிக அதாவது பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் செய்தால், தம்பதிகளுக்கு இடையே பிரிவினை ஏற்படாது அவர்களின் வாழ்வு சிறக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது. புராணங்களில் ஒன்றான சிவ புராணத்தில் ருத்ர ஸம்ஹிதையில் ஸ்ருஷ்டி காண்டம் 11 மற்றும் 13 ஆவது அத்தியாயங்களில் பிரம்ம முகூர்த்தத்தின் சிறப்பை பற்றி சொல்லப்பட்டுள்ளது.

முகூர்த்தம் எப்படி வரையறுக்கப்படுகிறது என்பதை பற்றி பார்ப்போம். வேதத்தில் சொல்லப்பட்டுள்ள சுலோகங்கள் வியாக்கியானம் அதவது உரையும் விளக்கமும் சொல்லும் நூலுக்கு பிராஹ்மனம் என்று பெயர். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை தைத்ரிய பிராஹ்மணம் மற்றும் சதபத பிராஹ்மனம் ஆகியவை ஆகும். 




உங்கள் வாழ்வில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமானால் மற்றும் நினைத்த காரியங்களை நிறைவேற்ற வேண்டுமானால் லக்ஷ்மி கடாட்சம் நிறைந்த இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தை பயன்படுத்தலாம். பிரம்ம முகூர்த்தத்தில் திதி வார நட்சத்திர யோக தோஷங்கள் கிடையாது. அந்த நேரம் எப்பொழுதும் சுபவேளை தான். இந்த நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டை செய்து நமது வேலையை செய்யத் துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான். இந்த நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களும் பெறலாம் என்பது ஐதீகம்.

Post a Comment

0 Comments