கல்வி உரிமை சட்டத்தில் லட்ச மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்!,,

ஆர்டிஇ எனப்படும் அரசின் கட்டாய கல்வி சட்டத்தின்  கீழ்  படிக்க லட்சக்கணக்கில் மாணவர்கள் விண்ணப்பித்து படிக்க ஆர்வமாகவுள்ளனர். 


தமிழகத்தில் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ரைட்  டூ எஜூகேசன் எனப்படும் இலவச, கட்டாயக்கல்வி சட்டத்தின் கீழ் ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை இலவசமாக கற்கலாம். இதற்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏப்ரல் 22-ம் தேதி முதல் மே 18-ம் தேதி வரை நடைபெற்றது.

தனியார் பள்ளிகளில் RTE மாணவர் சேர்க்கைக்கு ஒதுக்கப்பட்ட 1.21 லட்சம் இடங்களுக்கு, 1 லட்சத்து 20,989 பேர் விண்ணப்பித்துள்ளனர்.  நேரடியாக மாணவர் சேர்க்கை நடைபெற்ற நிலையில், நடப்பாண்டு முதல் ஆன்லைனில்  மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதன் மூலம் மாணவர்கள்  கல்வியை தொடங்க வாய்ப்பாக இருக்கும். 

மாணவர்களுக்கான இந்த வாய்ப்பானது முழுமையாக கிடைக்கப்பட வேண்டும், தனியார்ப் பள்ளிகளில்  படிக்க மாணவர்களுக்கு கட்டாயக்கல்வி சட்டத்தின் மூலம் அளிக்கப்படும் வாய்ப்பானது எதிர்காலத்தை சீராக்கும். 

Post a Comment

0 Comments