வங்க கடலில் பானிப் புயலின் தீவிரம் அதிகரிப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

பானிப் புயலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வங்கக் கடலில் உருவாகி, அதிதீவிர புயலாக மாறியுள்ள பானி புயல், ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தின் தெற்கு கடலோரப் பகுதியில்  காலை 11 மணியளவில் கரையைக் கடந்தது.
அதிதீவிர புயலான பானி புயல்,ஒடிசாவின் புரி மாவட்டத்தின் கோபால்பூர் மற்றும் சந்த்பாலி பகுதிகளுக்கு இடையே கடலோரப்பகுதியில், நாளை பிற்பகலில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணிக்கு 175 முதல் 185 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

புரியில் கரையைக் கடந்தவுடன் ஜகத்சிங்பூர், கட்டாக், குர்தா, ஜாஜ்பூர், பத்ரக், பாலசோர், மயூர்பாஞ்ச்  பகுதிகளின்  வழியே மேற்கு நோக்கி வங்காளத்துக்குள் பானி புயல் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பானி புயல் தாக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால், புரி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டாம் என்று ஒடிசா அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் 10 லட்சம் மக்கள் பாதுகாப்பான பகுதிகளை நோக்கி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மாநில பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று முதல் ஒடிசா அரசு விடுமுறை அறிவித்துள்ளது. 
பானி புயல் காரணமாக, ஒடிசாவின் 11 கடலோர மாவட்டங்களில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் கெடிபிடிகள் தளர்த்தப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு கருதி, 102 -க்கும் மேற்பட்ட ரெயில்களை தென்கிழக்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது. மேற்கு வங்காளத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது ஆகும். 
 
உள்ளூர் அதிகாரிகள் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய குழுவினருடன் ரெயில்வே அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். அவர்கள் கூறும் தகவலின் அடிப்படையில், ரத்து செய்யப்பட்ட ரெயில்கள் மீண்டும் இயக்கப்படும்.  மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பானிப் புயலால்  பாதிப்புகள் ஏற்பட்டால் செய்ய வேண்டிய  உதவிகள் மீட்பு நடவடிக்கைகள் அனைத்தும் ஆயுத்தமாக வைக்கப்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது ஆகும். 

மே 3, இன்று  கொலகத்தா, புவனேஸ்வர் பகுதியில்  விமானப் போக்குபரத்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிறப்பு ரயில்கள்  வெள்ளி மதியம் 12 மணி முதல் மேற்கு வங்கத்தில்   சாலிமர்வரை செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிறப்பு ரயிலானது புவனேஸ்வர், கட்டாக், ஜெய்பூர், பாலிஸ்வர், கட்டாக் பகுதிகளில் ரயில் நிறுத்தப்படும். மேலும்  இத்துடன் புரி முதல் ஹௌராவரை இரண்டு ரயில்கள் பயணிகளை ஏற்றிச் செல்லும்,

Post a Comment

0 Comments