மல்யுத்த போட்டியில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, அபிந்தனுக்கு வெற்றியை சமர்பித்தார்!

பல்கேரியாவின் ரூஸ் நகரில் டேன் கோலோவ்- நிகோலோ பெட்ரோவ் சர்வதேச மல்யுத்த போட்டிகள் நடைபெற்று வருகிறது. பல்கேரியாவில் பெற்ற இந்த வெற்றியை  நமது விமானப்படை வீரர் அபிநந்தன் அவர்களுக்கு சமர்பிப்பதாக கூறியுள்ளார்.

இதில் ஆடவர்களுக்கான 65 கிலோ ஃப்ரீஸ்டைல் எடைப் பிரிவு இறுதி சுற்றில், இந்திய வீரர் பஜ்ரங் புனியா, அமெரிக்காவைச் சேர்ந்த ஜோர்டன் ஆலிவருடன் மோதினார். அவரை  வென்று பதக்கத்தை கைப்பற்றினார்.


தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடிய பஜ்ரங் புனியா 12-3 என்ற கணக்கில் ஜோர்டன் ஆலிவரை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார்.

இதன்மூலம்,மல்யுத்த பிரிவில் பஜ்ரங் புனியா தனது 10-வது பதக்கத்தை வென்றுள்ளார். முன்னதாக, அவர் காமன்வெல்த் போட்டிகள், ஆசிய போட்டிகளில் நான்கு தங்கப்பதக்கங்களை வென்றார்.  மேலும் உலகக்கோப்பையில் 1 தங்கம் வென்றார். இது புனியா 10வது பதக்கமாகும்.

மகளிர் பிரிவில் 53 கிலோ  எடைப்பிரிவு இறுதிசுற்றில் நட்சத்திர வீராங்கனை  வினேஷ் போகட் சீனாவின் பேங் குயான் இடையே நடைபெற்ற போட்டியில் தோல்வியுற்று வெள்ளி வென்றார். 

வாழ்த்துக்கள் வீரர்களே சிறப்பான ஆட்டத்தில் தேத்தை பெருமிதப்படுத்துகின்றிர்கள்.  வீரர்களின் ஒவ்வொரு வெற்றியும் தேசத்தை பெருமிதப்படுத்துகின்றது. வெற்றியை  தவறவிட்ட வீரர்கள் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டியது அவசியம் ஆகும். 

Post a Comment

0 Comments