ஐஏஎஸ் கனவுக்கு ஸ்மார்ட் ஒர்க் - ஹார்டு ஒர்கிங் பேலன்ஸ் அவசியம் ஆகும்!

ஐஏஎஸ்  கனவுக்க படித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் மிகமுக்கியான தேவையான ஒரு தகுதி என்னவெனில் அர்ப்பணிப்பு, தெளிவான குறிக்கோளுடன் கூடிய மனநிலை,  எந்த  ஒரு சூழநிலைக்கும்  வளைந்து போகாத தன்மையுடன் செயல்பட்டு படிப்பை விடாப்பிடியாக கொண்டிருப்போர் வெற்றி பெறுவது என்பது உறுதியாகும்.

யூபிஎஸ்சி பிரிலிம்ஸ் தேர்வுக்கான பலமான படிப்பு தேர்வர்களிடையே காணமுடிக்கின்றது. தேர்வுக்கு நாலுமாதம்  படிப்பவர்கள், ஒருவருடகாலமாகப் படிப்பவர்கள், கல்லுரி  காலம் முதல் படிப்பவர்கள்  என தேர்வர்களின்  முயற்சிகள் வெவ்வேறு மாதிரி இருக்கும். சில சமயம் கல்லூரி காலம் முதல் படிப்பவர்கள் தேர்ச்சியினைப் பெறுவார்கள் அப்பொழுது நமக்கு இது எல்லாம் பல வருசமாக படிக்கனும் போல என்று தோன்றும். 



சிலர்   கல்லுரி முடிந்து படிக்க ஆரம்பித்த ஒருவருடத்திலே தேர்வினை  வெற்றியுடன் முடித்து பணிவாய்ப்பு பெறுவார்கள். இவர்களை பார்க்கும் பொழுது ஒருவருடம் படித்தால் போதும் என்ற தோன்றும். 

இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று உண்டு வெற்றியாளர்களிடையே இருந்த காலக்கட்டங்கள் மற்றும் அவர்கள் சூழல் வேறு ஆனால் அவர்களின் வெற்றிக்கு இருந்த ஒற்றுமை  அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய படிப்பு கடுமையாக ஹார்டு ஒர்க்கினையும் எளிதாக  அனுக வேண்டிய ஸ்மார்ட் ஒர்க்கினையும் சரியாகப் பயன்படுத்தியிருப்பார்கள் அதன்படியே தேர்வில் செயல்பட்டிருப்பார்கள். 

ஐஏஎஸ் தேர்வில் தேவையானது எது எவை என்பதையும், தேவையற்றது எது எவை என்பதையும்  நாம் ஆராய்ந்து பதிலளிக்க தெரிந்து கொண்டிருந்த தேர்வர்கள் தேர்வினை எளிதாக அனுக தெரிந்தவர்களாக இருக்கின்றனர்.  இதனை நாம்  தெரிந்திருக்க வேண்டியது அவசியம் ஆகும். 

போட்டித் தேர்விலே  முந்தய ஆண்டுகளின் கேட்கப்பட்ட கேள்விகளின் தொகுப்பு நாம் திறனாய்வு செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.தேர்வர்களின் இந்த தேவையை நாம் உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம் ஆகும்.

மேலும் படிக்க:

ஐஏஎஸ் கனவா பயிற்சியுடன் ஸ்மார்ட்டாக செயல்படுங்கள்!

Post a Comment

0 Comments