மகளிர் தினத்தில் பெண்ணை அவமானப்படுத்தும் 90 எம்எல் சினிமா!

சமீபத்தில்  வெளியான 90 எம்எல்  சினிமா படம் பெண்களின்  சிறப்புக்கு பங்கம் விளைவித்து கலாச்சார சீரழிவை உண்டு செய்கின்றது. பெண் தெய்வமாக கருத்தப்படுகிறாள் நாட்டிலுள்ள நதிகளுக்கெல்லாம் பெண்கள் பெயரே வைக்கப்படுகின்றன. இந்நிலையில் சமிபத்தில் வெளியான 90 எம்எல்   சினிமாவில்   வெளியிடப்பட்டுள்ள பெண்களைப் பற்றிய தவறான சித்தரிக்கப்பட்டுள்ள  சினிமாவை பார்த்து தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் பெண்கள் அனைவரும் கொந்தளித்துள்ளனர். யாரே எங்கோ செய்யும் கேவலத் தன்மையை சினிமாவாக எடுத்த ஒரு பெண் இயக்குநரை நினைத்தால்  நெருப்பாக  கோவம் கொப்பளிக்கின்றது.  நீயும் ஒரு பெண்ணா என கேட்கத் துடிக்கின்றது. இதற்கு துணைபோன ஓவியா  ஹைபர் ஆக்ட்டிவிட்டி கொண்ட ஒரு பெண்ணுக்கு ஆதரவு கொடுத்து தலைக்கு மேல் ஆடிய ஆண்களுக்கு எல்லாம் தற்பொழுது புரிய வரும். 

இதற்கு பெயர்தான் முற்போக்கு சிந்தனையா,   பெண்களுக்கு மூடத்தனமான கட்டுப்பாடுகள் தவறுதான்  ஆனால் பெண்ணை கேவலப்படுத்தும் இதுபோன்ற சினிமாக்கள் நம்மை சிதைக்கும்.  இன்னும் நாம் சமூக கட்டுப்பாடுகளுக்குள்தான் வாழ்கின்றோம் என்பதை மறந்து ஒரு பெண் இயக்குநர் இப்படி எடுக்கலாமா என்ற கேள்வி எழுகின்றது. 



பார்லிமெண்ட்டில் 50% இடஒதுக்கீடு கேளுங்கள், சரிசமமான உழைப்பிற்கேற்ற சம்பளம் கேளுங்கள், காம கண்னோட்டத்தைப் பார்ப்பதற்கு எதிரான பாதுகாப்பு கேளுங்கள் இதுதான் முற்போக்கு சிந்தனை. 

அடிப்படை உணர்வு பெண்ணுக்கு  இருக்குகு அதைக் கட்டுப்பாட்டால் தடுக்காதீர்கள், என்று கூறும் பெண்ணிய இயக்குநரே   உங்கள் உணர்வுகள்  சிந்தனைகள் ஒட்டு மொத்த  சமுதாயத்திற்கும் ஒன்று போல் இருக்கும் என நினைப்பது தவறு அதனை உணர்ந்து செயல்படுங்கள். 

இயக்குநரே பெண் இயக்குநரே நீங்களும் ஒரு பெண்தானா என்று சந்தேகம் எழுகின்றது.  நமது சமுதாயத்தில் இன்னும்  நீங்கள் நினைக்கும் சிந்தனையாளர்கள் இன்னும் உதிக்க வில்லை ஆகையால் உங்கள்  படைப்பு தவறாகத்தான் மக்களுக்கு புரியும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.  உங்கள் முற்போக்கு சிந்தனையை எல்லாம் பார்த்து  துடைத்துப் போட்டு விட்டுப் போகும் சமுதாய பின்புலத்தில் நாம் இல்லை என்பதை  அறிந்தால் நலம் பயக்கும்.

சென்சார் போர்டா இல்லை அந்த செகண்ட் சோ போர்டா: 
நாட்டில் இறையாண்மை பாதிக்கப்படுகின்றது, வன்முறை அதிகம்,   இது தவறு, இதை வெட்டு அதை வெட்டு என்ற பேசும் சென்சார் போர்டு சுயநினைவோடு அனுமதி  கொடுத்ததா இல்லை சென்சார் போர்டுக்கும் ஊத்திக் கொடுத்து செயல்பட வைத்தனரா,  சமிபத்தில் வெளியான ஜான்சி ராணி   வரலாற்று வீரக்கதை எத்தனைப் பேருக்குத் தெரியும் என தெரியவில்லை. ஆனால் பெண் வக்கிரமாக இந்த 90 எம்எல்  படம் குறித்து அனைவருக்கும் தெரிகின்றது.    

ஹைபர் ஆக்டிவிட்டிக்கு ஆர்மி  ஒரு கேடா:
தமிழ் நாட்டு இளைஞர்களுக்கு இது  தேவைதான் சினிமாவில் ஒருவர் நடித்தால் திறனுக்கு கைத்தட்டுங்கள்,   செலவு செய்து  சினிமா பாருங்கள் அத்தோடு நிறுத்தாமல்.  தியாகமும், போர்  குணமும் கொண்ட பத்து லட்சம் பேரூக்குமேல் இயங்கும்  கம்பீர பெயரான ஆர்மியை, ஒரு ஹைபர் ஆக்ட்டிவிட்டிக்கு கொடுத்து பின்னால் திரிஞ்ச உங்களுக்கு நிச்சயம் இது தேவைதான்.  இனிமேலாவது திருத்துங்கள் பெண் ஒரு போக பொருள் அல்ல, உலகத்தின்  முதல் உணவகம், உயிர் காத்து ரத்ததை பாலாக்கித் தரும்  பெண்ணகமான மார்பகத்தினை வைத்து மார்க்கெட்டிங்  செய்து பிழைக்கும் சவக்காடான சமுதாயத்தினை சரி செய்ய புறப்படுங்கள். இல்லையே இருக்கும் இடம் தெரியாமல் வாழ்ந்து சவக்குழிக்குச் செல்லுங்கள். 

கழுகு  பார்வை கண்கள்:
 வீட்டிலுள்ள கடனுக்காக, அண்ணன், தம்பி, அப்பாவுக்காக மற்றும்  தன்னை  பத்து மாதம் சுமந்து  வளத்த தாயின் கஷ்ட நிலையை நினைத்து விருப்பின்றி கதியே என கலங்கி வேலைக்குப் போகும் பெண்கள் லட்சக்கணக்கில் வாழ்கின்றார்கள் அவர்களின் தியாகம், கண்ணிர், உழைப்புக்கு எல்லாம் இனி மதிக்கப்படுமா எதையும் சந்தேக   கோணத்தில் பார்க்கும் ஆண்கள் வாழும் சமுதாயத்தில் இது போன்று சினிமாக்கள் வந்தால் நல்ல வீட்டு பெண்கள் மீது  வீசப்படும் கழுகுப் பார்வையால் கலங்கி நிர்ப்பாளே இது அறியாமல் பெண் இயக்கிய சினிமாவை நினைத்தால் நிக்க வைத்து சுட்டுத்தள்ள மனம்  கொப்பளிக்கின்றது.  இன்னும் நமது சமுதாயம் முதிர்ச்சி அடையவில்லை என்பது கூட தெரியாமல் எவ்வாறு இப்படி இயக்க முடிகின்றது. இது வீரமல்ல நீங்கள் நினைப்பது போல் 90 % சமுதாயப் பெண்கள் இல்லை என்பது உண்மை. வெறும் பத்து  சதவீகித சிந்தனை கொண்ட பெண்களை வைத்து படம் செய்து கல்லா கட்ட நினைத்து இப்படி 90% பெண்களின் குடும்பத்தில் பூகம்பத்தை கிளிப்பினால் என்ன நியாயம்.

போதும் இந்த  பிழைப்பு சினிமா எடுங்கள்,   சில்லரையை வாங்கி கல்லா கட்டுங்கள் ஆனால் கட்டமைப்பு மிக்க சமுதாய வாழ்க்கையை கரைப் படியச் செய்து எதுவும் தப்பில்லை என, இனிமேல் சினிமா எடுத்தால்  உங்கள் பிழைபபு சிரியாய் சிரிக்கும் என்பது மட்டும் உண்மை. 

நல்ல கதைக்கு  வாழ்வளிக்கும் இந்த சமுதாயத்தில் சமுதாயத்தினை சீரழிக்கும் கதைகளை சாட்டையடி  கொடுக்கும்  மாதர் சங்கம் எங்கே, மதிப்பு மிக்க  அரசியல்வாதிகள் எங்கே, ஆளும் அரசு எங்கே  எல்லாம் சுயநல பேய்கள். காசை கண்டால்  காவு கொடுக்கு மந்தை இனங்கள் இனிமேலாவது திருந்துங்கள் சுயமாக செயல்படுங்கள். அறம் பின்ப்பற்றி வாழுங்கள்.

Post a Comment

0 Comments