தமிழக அரசின் பெண்கள் மேம்பாட்டு கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் பெண்கள் மேம்பாட்டு கழகத்தில் 106 உதவித் திட்ட இயக்குநர், மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சம்பளத் தொகையாக ரூபாய் 22,000- 60,000 வரை பெறலாம்.
பெண்கள் மேம்பாட்டு கழகத்தில் வேலைவாய்ப்பு பெற 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
எம்சிஏ மற்றும் கணினி அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள், சமூக சேவை, மேலாண்மை, சந்தையியல் போன்ற துறைகளில் எம்பிஏ, ஐசி, டபிள்யூஏ, சிஏ முடித்து பணி அனுபவம் பெற்றவர்கள்
அல்லது ஏதாவதொரு துறையில் முதுகலைப் பட்டம் பெற்று சந்தையியல் துறையில் டிப்ளமோ பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள்.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி பிப்ரவரி 13, 2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பதிவு செய்ய தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்க:
0 Comments