சென்னையில் மீண்டும் கனத்த மழைக்கு வாய்ப்பு!

தென்கிழக்கு வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

இன்று முற்பகலில் தீவிர புயலாகி மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் அறிவித்துள்ளார்.

இந்திய பெருங்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது சென்னை அருகே 1120 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இன்று முற்பகலில் புயலாக மாறி வட மேற்கு நோக்கி நகரும் மேலும் இது தெற்கு ஆந்திராவில் கரையைக் கடக்கும். ஆந்திராவில் டிசம்பர் 17 ஆம் தேதி ஆந்திரா ஓங்கோல் - காக்கிநாடா இடையே  புயல் கரையை கடக்கும். இதனால் ஆந்திராவில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


வட தமிழக கடலோரம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில்  45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புயலாக மாறி உள்ளது சென்னை அருகே கரையைக் கடக்கும்.
சனி மற்றும் ஞாயிறுகளில் இதன் காரணமாக மழை அதிகரிக்கும்.

புயல் காரணமாக காற்று வேகமாக வீசக்கூடும் மலைக்கும் வாய்ப்பிருப்பதால் பலத்த மழை வாய்ப்பு இருக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments