சஷ்டி விரதமிருந்து சகலமும் பெறலாம்!

சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும். தீபாவளியை  தொடர்ந்து வருவது மகா சஷ்டி மற்றும் கந்த சஷ்டி என அழைக்கப்படும். கந்தசஷ்டி  காலம் பிரதமை நாளில் ஐப்பசி மாதம் வரும். 

எல்லா மாதங்களில் வரும் சஷ்டி விரதங்களில்  மிகச்சிறப்பு வாய்ந்த விரதமாக 6 நாட்கள் கொண்டாடப்படும்  விரதம் கந்த சஷ்டி விரதம் என அழைக்கப்படுகின்றது. குழந்தை  பாக்கியம் கிடைக்க பின்ப்பற்றப்படுகின்றது. 

செல்வம், ஆரோக்கியம், திருமண பாக்கியம் போன்ற நன்மைகள் பின்ப்பற்றப்படுகின்றது.  கடுமையாக பின்ப்பற்றப்படும் விரதம் கந்தன் அருள் பெற இவ்விரதத்தைப் பின்ப்பற்றலாம். 


நவம்பர் 8, 2018 ஆம் தேதி கந்த சஷ்டி விரதம் ஆரம்பமாகின்றது. நவம்பர் 13 ஆம் நாள் வரை இருக்கலாம். கடுமையாக விரதங்களை இந்நாளில் கடைப்பிடிக்க முடியவில்லையெனில் முடிந்தவரை விரதம் இருந்து வழிபடலாம்.

சூரன் சிவபெருமானை கடும் தவம் புரிந்து  சாகா வரம் பெற்றான். கருவிலே உருவாகத ஒரு குழந்தையின் கையிலேயே இறப்பு வேண்டும் என வரம் பெற்றான். அதன்பின் கர்வத்துடன்  அரக்கத்தனமான செயல்கள் செய்தான். தேவர்களை துன்புறுத்தியதால் சிவபெருமான் முருகனை  நெற்றி பொட்டில் உருவாக்கி சூரனை அழிக்க அனுப்பினார். 

கந்தன் சூரனை வதம் செய்த ஆறு நாட்கள் விரதங்கள் இருந்து கடைப்பிடிப்போர்கள் வேண்டிய வரம் பெற்றனர். காலங்காலமாக கடைப்பிடிக்கப்படும் இவ்விரதமானது வேண்டியதை கொடுக்கும்.

கந்த சஷ்டி காலத்தில் காற்றை மட்டுமே உணவாக கொண்டு விரதம்  இருந்து வாழ்ந்தனர். 

தண்ணீர் மட்டுமே உணவாக கொண்டு  வாழ்வோரும் உண்டு. 

பால் மட்டும் உணவாக அருந்தி வாழ்வோரும் உண்டு.

6 நாட்கள் பழங்கள் சாப்பிட்டு வந்தனர். மசாலா இல்லாத சாப்பாட்டுகள் சாப்பிட்டு வந்தனர் ஒரு பொழுது உணவு சாப்பிட்டு வந்தனர். நம்மை வருத்தி வாழ்ந்தால் வேண்டியதை பெற்று  உண்டி சுருங்கி வளமோடு வாழலாம். 

தண்ணீர் மட்டுமே அருந்தி இருக்கும் விரதத்தால் கருவில் உள்ள நச்சுகள் வெளியேறும். விரத நாட்களில் கோபப் படக்கூடாது. கந்தனை முழுவதுமாக  நம்பி இருந்தால் கந்தன் அருள் நிச்சயம் பெற்று நித்திய நிம்மதி கிடைக்கும். 

ராஜா அழங்காரத்துடன் கூடிய முருகன் படத்துடன்  கணபதி அருளுடன்  தொடங்க வேண்டும். குலதெய்வத்தை வணங்கி விரதத்தை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். 6 நாட்கள் கேவில் சென்று முருகனை வணங்க வேண்டும். முடியாதவர்கள் முதல் மற்றும் இறுதி நாளான ஆறாம் நாள் கோவில் சென்று வரலாம். 

சஷ்டி விரதமிருந்து சகல  வாழ்கை  வரமும் பெற்று வளமோடு வாழ நினைப்பவர்கள் பக்தியுடன் ஆறு நாட்கள்  அமைதியுடன் கந்தனை முழுவதுமாக நம்பி கந்த பூராணம் மற்றும் கந்த சஷ்டி கவசம் பாரயணம் செய்து வந்தால் விரும்பியதை பெறலாம்.

நம்பிக்கையோடு செய்து பாருங்கள் நம் கந்தன் அருள் கண்கூடாக பெறலாம்.

மேலும் படிக்க:

யம தீபம் ஏற்றி கொண்டாடப்படும் தீபாவளி!


Post a Comment

0 Comments