கஜா புயலினால் விழுந்த தென்னை மரங்களை காக்கும் வழிமுறைகள்!,

கஜா புயல் பெரிய அளவில் பாதிப்பை உண்டு செய்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த துயரத்தில் உள்ளனர்.  மக்களுக்கும் மரம் செடி கொடிகளுக்கும் இழப்புகள் பெரிய அளவி ஏற்பட்டுள்ளது.

கஜாவினால் 2 லட்சத்திற்கு மேல் தென்னை மரங்கள் விழுந்துள்ளன. இது பெரும் இழப்பை விவசாயிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் இழந்த தென்னை மரங்களை மீட்டுக் கொண்டு வர முடியும்.ஆதலால் தைரியத்துடன் செயல்படுங்கள் விவாசாயிகளே

தென்னை மரத்தில் மத்தளம் (அடிப்பகுதி, கிழங்கு, Trunk) பாதிக்கப்படாமல் வேருடன் சாய்ந்து இருந்தால், 100% அந்த மரங்களை உயிர்ப்பிக்க முடியும்.

அதிகபட்சம் 25 அடி மரம் வரை இது சாத்தியமாகும். இந்த முறையை முறையாகப் பின்பற்றி வாருங்கள் நிச்சயம் வெற்றி பெறலாம். இதனை ஹீலர்மதிவாணன் குழு அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுக் கஜா புயலால் வாழ்வாதரம் போகவில்லை என்ற குறைந்த பட்ச நம்பிக்கையை ஊட்டமுனைகின்றார்.

உயிர்ப்பிக்கும் முறை:
இதற்கு முதலில் நீங்கள் உடனடியாகச் செய்ய வேண்டியது, 4 அடி விட்டு மட்டைகளை முழுவதும் வெட்டி விட வேண்டும். இது நீர் ஆவிப் போக்கைதடுத்து மரத்தை உயிருடன் வைத்திருக்கும். பின் ஒரு மாதம் கழித்து நீங்கள் மரத்தை நட்டாலும் கூட அது உயிர் பெற்று விடும்

பின் உடனடியாக இளநீர், தேங்காயை அப்புறப்படுத்த வேண்டும். பின்னர் 3 அடி குழு தோண்டி, வேருடன் மீண்டும் மரத்தை நட்டால் ஒரு வருடத்தில்மீண்டும் அது அழகாய் காய்க்க துவங்கிவிடும.

தென்னை மரத்தின் அற்புதத்தைக் கூறவா தென்னை மரத்திற்கு 15,000 சல்லி வேர்கள் உள்ளது. வெயில் மண்டையைப் பிளக்கும் அளவிற்கு அதிகவெயில் அடிக்கும் காலத்தில், திடீரென மழை பெய்தால், 24 மணி நேரத்திற்குள் புது வேர்களை உருவாக்கி வளர்த்து தண்ணீரை எடுத்துக்கொள்ளும்அளவிற்குப் பேராற்றல் பெற்றது தான் இந்தத் தென்னை மரங்கள் அதனைப் புரிந்து காப்போம்.

எனவே விழுந்த மரங்கள் அனைத்தையும் வீணடித்துவிட வேண்டாம். உயிர் கொடுங்கள் மரத்தை உயிர்தெழ செய்யுங்கள்,

முறிந்த மரங்களுக்கு இது பொருந்தாது ஆகையால் மரம் முறிந்தவர்களுக்கு இந்த முறை பயனளிக்காது.

மேலும் தகவலுக்கு

Agri அணைக்காடு

9787799037

புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்குச் சென்று சேரும் வரை அனைவருக்கும் இதனைச் சேர்க்கவும்


Post a Comment

1 Comments