நாகையில் கஜாபுயல் சீரமைப்பு காரணமாக பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்ட பள்ளிகளுக்கு மறுசீரமைப்பு பணிகள் காரணமாக நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த கஜா புயலால் நாகப்பட்டினம் திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

கஜா புயல் காரணமாக இருவரை 63 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்லாயிரம் கோடி  மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 


கஜா புயல் கடந்து பத்துநாள் ஆகிய நிலையிலும் சீரமைப்பு பணிகள் முழுமையாக முடியவில்லை. ஆகவே சீரமைப்பு பணிகள் காரணமாக நாகை மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கஜா புயல் காரணமாக மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களின் எண்ணிக்கையும் ஆங்காங்கே கொடுக்கப்பட்டு வருகின்றது. அரசு மற்றும் தனியார்த்துறை போன்ற இரு தரப்புகளாலும் வழங்கப்படுகின்றது.  எனினும் முழுமையாக விரைவாக முடிக்கப்பட வேண்டும். அனைவருக்கும் நிவாரணம் சென்றடையப்பட வேண்டும்.

இலவச மருத்துவ உதவி:
கஜா புயல் பாதிக்கப்பட்ட நாகை தஞ்சை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளிலும் ஸ்கேன் எடுப்பதற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்க படக்கூடாது, என சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments