இந்தியா-பாக் போரில் வெற்றிக்கு காரணமான லாங்கோவாலா ஹீரோ ராணுவ தளபதி குல்தீப் சிங் காலமானார்!

இந்தியா பாகிஸ்தான் போரில் இந்திய வெற்றிக்கு காரணமாக இருந்தவர் குல்தீப் சிங் சந்த்புரி, இவர் லாங்கோவாலா ஹீரோ என அழைக்கப்பட்டவர் காலமானார். 

1971 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான்  போரின் பொழுது இந்தியாவை வெற்றியடையச் செய்த வீரர்களுள் ஒருவர் குல்தீப் சிங் ஆவார், இவர் வயது 78 ஆகும்.


இந்தியா-பாகிஸ்தான் இடையே 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள லாங்கிவாலா பகுதியில் பாகிஸ்தான் பீரங்கி தாக்குதல் நடத்தியது. 

அந்த பகுதியில் 23வது பட்டாலியன் தலைமை வகித்தவர் ராணுவ தளபதி குல்தீப் சிங் சந்த்புரி அவரது தலைமையின் கீழ் சண்டையிட்ட 120 இந்திய வீரர்கள் மிக ஆவேசமாக போரிட்டு   பாகிஸ்தானின் 2000 பேர் கொண்ட படையை பின்வாங்கச் செய்தனர். 

இங்கு நடைப்பெற்ற சண்டையின் இந்தியா சார்பில் 2 வீரர்கள் மரணமடைந்தனர். பாகிஸ்தான் சார்பில் 200 பேர் கொல்லப்பட்டனர். 36 டேங்கர்களும், சுமார் 500 ராணுவ வாகனங்களும் அழிக்கப்பட்டன.  பேரழிவை ஏற்படுத்தியது இந்த  குறிப்பிட்ட பகுதியில் நடைபெற்ற போர்.

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஏற்பட்ட பேரழிவு இது என்றும் வர்ணிக்கப்படுகின்றது.  தேசத்தை எதிர் நாட்டு படைவீரர்களிடமிருந்து காத்து பெருமை அடைச் செய்துள்ள நாம் நாட்டு வீரர்களை என்றும் நினைவு கூறி நன்றி  தெரிவிக்க வேண்டும். 

இந்தியாவை காத்து நின்று பெருமைப்பட செய்த  23வது  பட்டாலியன்  ராணுவ தளபதி லாங்கிவாலாவின் நாயகருக்கு அஞ்சலியுடன் பெருமிதத்துடன் தலைவணங்கி இந்திய தேசம் இது போன்ற வீரர்களை தன்னகத்தில் கொண்டு என்றும் வாழ்த்தும்.  இவருடைய இறுதி சடங்கு திங்கள் கிழமை நவம்பர் 19,2018 அன்று நடைபெறும்.

Post a Comment

0 Comments