பெண்மை சமூதாயத்தின் தனி உடைமையல்ல!

இந்தியா தாய் மண்ணாக வர்ணிக்கப்படுகின்றது. இந்திய நாட்டில் பாயும் ஆறுகள் பெண்கள் பெயரில் ஓடுகின்றன.  சக்தி சிவம் என்று இறைவனுள் பாதியாக இருப்பவள் பெண்ணாக  சமூகம் சரிசமமாகவும் அதற்கு மேலும் பெண்னை பெருமிதப் படுத்துகின்றது. 

இன்றைய சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு, பெண்களின் தனித்தன்மையின் அளவு எந்த அளவிற்கு பெருகியுள்ள்தோ அதே அளவில்
சமூகம் ஒழுங்கிழந்து செயல்பட்டு வருகின்றது பெண்களின் பாதுகாப்பு நாளுக்கு நாள் கேள்வி குறியாகி வருகின்றன. பெண்களின் மீது சமூகத்தில் தெளிக்கப்படும் பாலியன் வன்முறைகள் மற்றும் பெண்களுக்கு கொடுக்கப்படும் தடைகளின் எண்ணிக்கை சிறதளவே இருந்து அதன் தாக்கம் பெரிய அளவில்   சமூகத்தில் இருந்து வருகின்றது. 



மனதளவில் வலிமையானவர்கள் பெண்கள் ஆனால் சமிப காலங்களின் ஆண்களின் வக்கிரப் பார்வையால் இழிந்தநிலைக்கு கொண்டு செல்லப்படுகிறாள். ஒரு பெண் நடு ராத்திரியில் நடந்து வரும்பொழுது வீதியிலுள்ள ஆண்களின் பார்வையால் அவள் காட்சி பொருளாக தெரிகிறாள்.  எங்கிருந்து வருகிறாளோ, எவனோடு இருந்து வருகிறாளோ அல்லது என்னுடன் வருவாளா  என்ற போக்கிலே பார்வை இருந்து வருகின்றது இந்த மதிப்பீட்டை பார்க்கும் பொழுது  21 ஆம் நூற்றாண்டில் அவளின் வளர்ச்சி, சிந்தனை முயற்சி முன்னேற்றம் அனைத்தும்  எந்தளவிற்கு உச்சத்தில் 
இருக்கின்றதோ அந்தளவிற்கு  தலைகுனிவை உண்டாக்குகின்றது. 

பெண்மை தனி உடைமையல்ல: 
பெண் என்பவள் மனித பிறவி அவ யாருக்கும் தனி உடைமையல்ல தந்தை தாய் அண்ணன், தம்பி, சுற்ற்த்தார், உறவினர்கள் என அனைவரும் அவளுக்கு சமூக கட்டமைப்பில் கொடுக்கப்பட்ட் காவல்கள் மற்றும் சமூகம் பெண்ணைச் சார்ந்தவர்களுக்கு கொடுத்துள்ள மதிப்பு மிக்க அங்கங்களால் பெரிதும் பெண்கள் மதிக்கப்படுகின்றார்கள்  என்றால் எனில் எத்தனை சதவீகிதம் என்று இதனை படிக்கும் ஆணும் பெண்ணும் உங்கள்  தனி கணக்கில் நடப்பு நிகழ்வுகளை வைத்து விடையளித்துக் கொள்ளுங்கள். 

டேராடூனிலிருந்து நாட்டின் தலைநரத்திற்கு உயர் படிப்புகள் படிக்க வந்த பெண் இரண்டு பேரூந்துகள் மூலம் கல்வி நிறுவனங்களுக்கு செல்கிறாள் அந்த பயண நேரத்தில் அவள்  அடைந்த முகம் தெரியாத ஆண்கள் செய்யும்  பாலியல் துன்புறுத்தல்களால் துவண்டு போயுள்ள பெண்களின் இந்த அவல நிலைக்கென்ன பதில் இந்த சமுதாயம் தரப் போகின்றது. 

காதல் என்று களியாட்டங்களால் படிக்கு பெண்கள் பாதைகள் மாற்றப்பட்டு  உடன் படிக்கும் ஆண்களால் மிகுந்த அளவில் பயன்படுத்தப் பட்டு தூக்கி எறியப்படுகின்றார்கள். நவீன உலகில் எதுவும்  தவறில்லை என்ற மனப்பான்மையில் மங்கி போகின்றது  மணப்பரிமாற்றம். மேலும்  விரும்பிவனின் விருப்பங்களையொற்றி நடக்காத பெண்னை சரமாரியாக கத்தியால் குத்தி கிழித்துள்ள கொடூரம் இந்த மண்ணில் நடந்து வருகின்றது. 

நாட்டில் தெரிய வருகின்ற சில கொடூரங்கள் மத்தியில் தெரிய வராத பல்வேறு குற்றங்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றது இதுகுறித்து நாம் என்ன செய்ய வேண்டும் என தீர்மானித்து குடும்பங்கள் செயல்பட வேண்டும். குடுமத்தில் ஆண் பெண் இருவரும் சரிசமமாக நடத்தப்படுதல், ஆணிற்கு பெண்ணின் பெருமையுணர்த்தி வளர்த்தல், வாலிப வயதில் ஆண் பெண்களிடையே ஏற்படும் மாற்றங்கள் குறித்து முழுமையாக கல்வி வழியாக சமுதாயத்தில்  பரிமாற்றம் செய்யப்பட வேண்டும்.

தவறு சரி எது என்பது இருவரும் உணர்ந்து செய்படும் அளவிற்கு நாட்டில் கல்வி பலமாக கட்டமைக்கப்ட வேண்டும். சமுதாயத்தில் ஆணுக்கு கொடுக்கப்படும்  முக்கியத்துவத்தை விட பெண்ணிற்கு கொடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு முக்கியத்துவம் குறித்து அனைத்து வயதினருக்கும் அவரவர் வயதிற்கேற்ப  கற்றுக் கொடுக்கப்பட் வேண்டும். குடும்பம்,  சமூகம், வட்டங்கள் என தொடங்கி நாடு முழுவதும் இந்த சிக்கல்களுக்கு விடையளிக்கப்பட வேண்டும்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும்  பால் வேற்றுமைகளை தவிர மற்ற அனைத்தும்  சரிசமமாக  கொடுக்கும் பொழுது பெண்களுக்கான முக்கியத்துவம் பாதுகாப்பு போன்றவை அனைத்தும் தானாகவே பெண்களே  தங்களை தாங்களாகவே காத்து கொள்வார்கள். 

தவறுகளுக்கு தண்டனை கொடுப்பது தட்டிகேட்பது ஒருப்பக்கம் இருக்கட்டும் தவறுகளுக்கு காரணமான  சமூகத்திலுள்ள சரியற்ற கட்டமைப்புகளை சரிசெய்ய வேண்டும். கல்வியில் மாற்றம்,  வீட்டில், சமூகத்தில், பணியிடத்தில், என பெண்ணை எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என மதிபெண்களுடன் இணைந்த பயிற்சி  வகுப்புகள் கட்டாயமாக்கப்பட்டு அனைவருக்கு ஒன்றாக கற்பிக்கப்பட வேண்டும். 

பெண்ணை அறிவுப் பூர்வமாக பார்க்கப்பட வேண்டும். அழகு பொருட்கள் விற்கும்   வணிகச் சந்தையின்  யுக்தியாக இருக்கும் இந்த போக்கினை நிறுத்தப்பட வேண்டும்.  நேரமறையான உணர்வுகளை கொண்ட  உலகம் பெண்மைக்காக படைக்கப்பட வேண்டும். அன்பின் சின்னம் பெண் என்பதோடு மட்டுமல்லாமல் அனைத்திற்கும் அவளின் பங்காற்றல்  இருக்குமளவுக்கு சமமான கட்டமைப்புகள் கொண்ட சமுதாயம் தான் இந்த காலகட்டத்தில் அவசியம் ஆகின்றது. நளினம் பெண்ணிற்கு தேவை ஆனால் அதுவே அவளின் அந்தமாக இருக்க கூடாது. அடுப்படி கலைகள் அவளுக்கு ஆக்கத்தினை கற்றுக் கொடுக்கின்றது என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு அவளால் அனு ஆயுதங்கள்  தாங்கிப்பிடிக்கும் கலைகளிலும் கைதேர்ந்தவள் என எந்த சமுதாயம்  கற்றுத் தருகின்றதோ அதுதான் உண்மையான மனித சமுதாயம் ஆகும்.

பெண்ணுக்கும் ஆண் குறித்த பார்வை  அவர்களின் பொறுப்புகள்  குறித்து  கற்றுக் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த சமுதாயம் தன்னை குற்றமற்ற பார்வையிலிருந்து மீட்க முடியும். வரும் காலத்தில் வணிகச் சந்தையில் பொருளாக காட்சிப்படுத்தப் படாமல் வாழும் சமுதாயம் பெண்ணிற்கு அமைய வேண்டும் அமையும் என்ற நாளை பார்வை நவீன் இந்தியா!..

மேலும் படிக்க:

Post a Comment

0 Comments