யூபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் முதன்மை மற்றும் முக்கிய தேர்வுகள் செப்டம்பர் 20, 2018 இல் முடிவடைந்தது இதனையடுத்து சிவில் சர்வீஸ் தேர்வின் முக்கிய தேர்வுக்கான ரிசல்ட் வெளியீட்டிற்காக காத்திருக்கின்றனர்.
ஐஏஎஸ் தேர்வுக்கான மத்திய தேர்வு ஆணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகள் 2018 ஆம் ஆண்டிற்கான முதன்மை தேர்வானது ஜூன் 3, 2018 இல் நடைபெற்றது அவற்றில் மொத்தம் 3 லட்சம் பேர் முதன்மை தேர்வினை எதிர்கொண்டனர். முதன்மை தேர்வுக்கான ரிசல்டானது ஜூலை 14, 2018 இல் வெளியிடப்பட்டது.
இதனையடுத்து நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வுக்கான முக்கிய தேர்வானது செப்டம்பர் 28, 2018 மற்றும் அக்டோபரில் 7, 2018 மாதங்களில் காலை மாலை என இரு வேளைகளில் காலை 9 மணி முதல் 12 மணி நண்பகல் வரையும் மதியம் 2 மணி முதல் 5 மணி வரையும் தேர்வுகள் நடைபெற்றது.
யூபிஎஸ்சியின் மெயின்ஸ் தேர்வு முடிவடைந்தவிட்டது மெயின்ஸ் தேர்வின் முடிவுகளை தொடர்ந்து இண்டர்வியூ நடைபெறும். இண்டர்வியூ தேர்வினை எதிர் கொள்ள தேவைப்படும் தகவல்களை பெற போட்டி தேர்வர்கள் ஆர்வமாக படிக்கத் தொடங்கிவிட்டனர்.
யூபிஎஸ்சியின் 2019 ஆண்டிற்கான தேர்வுகால அட்டவணை:
யூபிஎஸ்சியின் 2019 ஆம் ஆண்டிற்கான தேர்வுகால அட்டவணைகளும் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய ஆட்சிப்பணி நடத்தும் தேர்வை எதிர்கொள்ள தேர்வர்கள் படித்து கொண்டிருக்கின்ற வேளையில் யூபிஎஸ்சியும் தனது 2019 ஆம் ஆண்டிற்கான தேர்வுகளின் அட்டவணையில் சிவில் சர்வீஸ் தேர்வு, வனத்துறை, என்டிஏ , சிடிஎஸ் ராணுவ பணிகளுக்கான தேர்வு, ரயில்வே தேர்வு, இன்ஜினியரிங் பணிகளுக்கான தேர்வுகள் மற்றும் புள்ளியல், எக்கானமிஸ்ட் பணிகளுக்கான தேர்வுக்கான தேதிகளையும் அறிவித்துள்ளது.
ஐஏஎஸ், இந்திய ஆர்மி, இந்திய இன்ஜினியரிங் மற்றும் ரயில்வே பணிகளில் பணியாற்ற படித்து கொண்டிருக்கும் தேர்வர்களே பட்ட படிப்பை முடித்த மற்றும் பட்டப்படிப்பை முடிக்கும் தருவாயில் இருக்கும் மாணவர்களுக்கான இந்த அட்டவணைகளை பயன்படுத்தி திட்டமிடுங்கள்.
காலம் பொன் போன்றது கடமை கண் போன்றது என்பதனை நினைவில் வைத்து தேர்வுக்கான ஒரு வருட காலத்தில் உங்களுக்குள்ள பொறுப்புகள் அவற்றிக்கிடையே அந்த பொருப்பினை எவ்வாறு சமாளித்து படித்தல் மற்றும் அதனை வைத்து எவ்வாறு தேர்வினை வெற்றி பெறுதல் போன்றவற்றை முன்பே திட்டமிட்டு படியுங்கள் யூபிஎஸ்சி என்ற கனவு தேர்வை வெல்ல மாணவர்களுக்கு உதவ சிலேட்குச்சி இந்தியா தொடர்ந்து தன பதிவுகளை தரவுள்ளது.
திட்டமிட்டு படிக்கவும், இடையூறுகளை தாண்டி படிக்கும் மனப்பக்குவம் இருந்தால் எதனையும் எளிதில் வெல்லலாம். 2019 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வுக்கான அறிவிப்பு பிப்ரவரி 19, 2019-இல் வெளியிடப்படும் மார்ச் 18, 2019க்குள் தேர்வர்கள் விண்ணப்பத்தை ஆன்லைனில் செலுத்த கடைசி நாளாகும்.
யூபிஎஸ்சி முதன்மை தேர்வு நாள் ஜூன் 2, 2019 இல் நடைபெறும் ஒரு நாள் இரண்டு தாள்கள் காலை மாலை என நடைபெறும் இந்த சிவில் சர்வீஸ் முதனிலை தேர்வானது சிவில் சர்வீஸ் மற்றும் ஐஎஃப் எஸ் என அழைக்கப்படும் வனத்துறைக்களுக்கு இணைந்து ஒரே தேர்வாக நடைபெறும்.
யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வு:
யூபிஎஸ்சி முதன்நிலை தேர்வானது இரண்டு தாள் பொது அறிவு மற்றும் ஆப்ஸ் என அழைக்கப்படும் சி சாட் பகுதியினை கொண்டது. காலையில் பொதுஅறிவு தாளானது 100 கேள்விகளுடன் ஒரு கேள்விக்கு 2 மதிபெண்கள் வீதம் மொத்தம் 200 மதிபெண்களுக்கு நடைபெறும் முதன்மை தேர்வின் பொது அறிவுத்தாளின் தேர்வு நேரம் காலை 10 மணி தொடங்கி மதியம் 12மணியில் முடிவடையும். மேலும் சிசாட் தாள் ஆப்ஸ் என அழைக்கப்படும் திறனாய்வு, லாஜிக்கல், ஆங்கிலம் காம்பிரிகென்சன் முடிவெடுக்கும் திறன் ஒருங்கே இணைந்து 100 கேள்விகளை கொண்டது, மொத்தம் 200 மதிபெண்கள் சிசாட் தாள் மதியம் 2 மணி தொடங்கி 4 மணிக்கு முடியும்.
சிவில் சர்வீஸ் தேர்வில் நெகடிவ் மதிபெண்கள் உள்ளன. முதன்மை தேர்வில் வெற்றி பெறுவோர்கள் மெயின் தேர்வு எழுத தகுதிப் படைத்தவர்கள் ஆவார்கள் மெயின்ஸ் தேர்வு மொழித்தாளுடன் 9 தாள்களை கொண்டது மேலும் அவற்றில் வெற்றி பெறுவோர்கள் நேரடி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் அதனையடுத்து நேரடி தேர்வில் அதிக கட் ஆப்களுடன் தேர்ச்சி பெறுவோர்களுக்கு தரவரிசை ஒதுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
0 Comments