நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க தடையில்லை நீதிமன்றம் தீர்ப்பு!

டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நாடு முழுவதும் நீட்டிக்க கோரிய வழக்கில்  இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 

நீதிபதிகள் சிக்ரி மற்றும் அசோக் பூசன் அமர்வு பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. 

நாடு முழுவதும் பட்டாசுகள் விற்க தடை இல்லை மற்றும் பட்டாசுகள் தயாரிக்கவும் பட்டாசுகளுக்கு எதிரான முழுமையான தடையினை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 



மேலும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் அதிக மாசற்ற மேலும் ஒலி மாசு போன்றவற்றை சுற்றுச்சூழலுக்கு உண்டாக்கதவாறு  பட்டாசுகளை தயாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கூறியுள்ளது. 

பட்டாசு விற்பனை மற்றும் பட்டாசு தொழிலை நம்பி நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் உள்ளனர் அதனை நீதிமன்ற கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்கினாலும்  சுற்றுசூழல்  பாதுகாப்பினை வலியுறுத்தியுள்ளது வரவேற்க தக்கது ஆகும். 

பட்டாசுகள் உள்ளூர்வாசிகள்  மேடின் இந்தியா பட்டாசுகளை வாங்கவும் சீனாவின் தயாரிப்புகளை வாங்குவதை குறைக்கவும் என பட்டாசு விற்பனையாளர்கள் வருடா வருடம் கோரிக்கை விடுக்கவும் செய்கின்றனர். 

தமிழ்நாட்டில் சிவகாசி பட்டாசு தொழிசாலையில் சிறப்பு வாய்ந்த பெயரினை கொண்டு இயங்குகின்றது இங்கு அதிகப் படியான பட்டாசுகள்  உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதுமுள்ள கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்ப படுகின்றனர. 

பண்டிக்கையின் பொழுது தீபஒளி ஏற்றி வண்ண அழங்கார  வெடிகளை மட்டுமே பயன்படுத்தலாம் என அறிவுரைகளையும் ஒரு தரப்பினர் வலியுறுத்துகின்றனர். 

தீபத்திருநாளில் விழிப்புணர்வுடன்  பாதுகாப்பாக பட்டாசுக வெடிக்க வேண்டும். பட்டாசுகள் வெடிக்கும் பகுதிகளில்  சிறியவர் முதல் பெரியவர் வரை  தண்ணீர் பக்கெட்டில் வைத்து வெடிக்க வேண்டும்.  எதிர்ப்பாரத காயங்கள் ஏற்படும் பொழுது தேவைப்படும் தண்ணீர்  பயன்படுத்தி முதலுதவிகள் செய்ய வேண்டும். பட்டாசு கங்குகளில் நீர் ஊற்றி முறையாக அணைக்க வேண்டும் வீதிகளில்  பட்டாசுகள் வெடிக்கும் பொழுது கவனமுடன் வெடிக்க வேண்டும்.

நீண்ட  பட்டாசு குச்சியை வைத்து திரியில் தீ வைத்து வெடிக்க வேண்டும்.  சாலையோரங்களில் வைக்கப்படு ராக்கெட்டுகளில் அதிக கவனமுடன் வைக்க வேண்டும்.  மேலே குறிப்பிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுப்படு பண்டிகையினை கொண்டாடி மகிழலாம்.

Post a Comment

0 Comments