சபரிமலையில் பெண்கள் நுழையகூடாது என்று இந்து மக்களிடம் பெரும்பான்மையான ஒற்றுமை கருத்துக்கள் நிலவுகின்ற வேலையில் இதை வைத்து அரசியலாக்க தேசிய காங்கிரஸ், கேரளாவின் பினராயி அரசு, மற்றும் தமிழ் நாட்டின் திமுக, மற்ற திராவிட கட்சிகள் பெரியார் வாதிகள், பெண்ணியவாதிகள், பாஜக போன்றோர் இதில் குளிர்காய்ந்து பெயர் வாங்க துடிக்கின்றனர்.
சுதந்திர போராட்டத்தின் தொடக்கமான சிப்பாய் கலகத்தில் பல காரணங்கள் இருந்தபொழுதும் மத நம்பிக்கையில் பிரிட்டிசார் தலையிட்டது ஒரு பெரிய மற்றும் உடனடி காரணமானது. அதனை காப்பியடித்து கொண்ட நமது அரசியகல் கட்சிகள் இவ்வாறே நாடு முழுவதும் அவ்வபோது அரசியல், புகழ் விரும்பிகள் நாட்டில் சென்சிட்டீவ் என்று சொல்லக் கூடிய உணர்வு பூர்வமான விவகாரங்களில் தலையிட்டு குட்டையை குழப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பாவம் இதில் பலிகடாக போவது அப்பாவி மக்கள்களின் நம்பிக்கைதானே என்ற மனப்போக்கு நிலவுகின்றது. ஆனால் இந்தியாவில் மக்கள் தற்பொழுது விழித்தெழுந்துள்ளனர். தங்களது உரிமைக்காக போராட தயாராகவும் உள்ளனர்.
இதுதொடர்பான மக்களிடையே தமிழ்நாடு கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கான மற்றும் வட மாநிலத்தவர் கருத்து கேட்கப்படும் போது அதென்னங்கய்யா பேசுரக்கு ஒன்னும் இல்லைங்கரப்ப ஏதாவது ஒண்ணு புடிச்சு தொங்கிறீங்க இந்தசமூக சிக்கல்கள் நட்டிலுள்ள ஒற்றுமையை குழப்பிவிட நடக்கின்றது என படித்த இளைஞர்கள் கூறுகின்றனர்.
ஐப்பனின் நான்கு சிறப்புத் தளங்களான குளத்துப்புழா மற்றும் ஆரியங்கா, அச்சன் கோவிலகளிலெல்லாம் பெண்கள் அனுமதிக்கப்படுகின்றனர் ஆனால் பிரம்மச்சரிய விரதம் பூண்டுள்ள அதுவும் மலை முகடுகளில் தனித்து தானே ஒதுங்கி வாழ்கின்ற சாஸ்தாவின் தளத்தில் மட்டும் பெண்கள் அனுமதிக்கப் படுவதில்லை, ஆனால் ஐப்பன் கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் அது அவர்களின் உரிமை என்று கேட்டு போராடுவது ஒட்டு மொத்த இந்து பெண்களா? அல்லது பெண்ணியவாதிகள் என பெயர் வைத்து பேராசைக்காரத்தனமான புகழ்ச்சியை விரும்பும் பெண்களா என்ற கருத்து பொதுமக்களின் எண்ணத்தில் எழுகின்றது. அனைத்து கல்லுரி மாணவர்களிடையே இது குறித்த விவாதங்கள் நடத்தப்பட்டாலும். இறுதியிலே பெரும்பான்மையான பெண்கள் ஐதிகம் மரபினை பரிசீலித்து அமைத்து காத்து இதனை ஏற்றுக்கொள்ளவும் செய்கின்றனர்.
ஆமாம் பிரம்மச்சரியம் பூண்டு ஒதுங்கி கரடுமுரடான மலைப்பாங்கில் வாழும் ஐயப்பன் தளத்திற்கு ஒட்டுமொத்தமாக பெண்களை வரவேண்டாம் என்று கூறவில்லையே, குறிப்பிட்ட வயது பெண்கள் மட்டும் வரவேண்டாம் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது என்ற கருத்து தமிழ்நாடு மற்றும் கேரளா கர்நாடக ஆந்திர வடமாநில அனைத்து மத பெண்களும் இந்த கருத்தையும் ஏற்றுக் கொள்கின்றனர்.
பத்து லட்சம் பேர் போராட்டம்:
வெள்ளத்திலிருந்து மீண்ட கேரளா நிவாரணப் பணியினை கவனிக்கின்றதோ இல்லையோ ஆனால் இந்த ஐப்பன் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பினை ஏற்பதுபோல் வேடமிட்டு மக்களின் உணர்வுகளை காயப்படுத்துகின்றது. நாடு முழுவதுமுள்ள பக்தர்களிடையே கொந்தளிப்பு ஏற்படவைத்து அசாதரணப் போக்கை விளைவிக்க ஏதேனும் சதித்திட்டம் தீட்டுகின்றதோ என்ற ஐயம் பொது மக்களிடையே நிலவுகின்றது.
பெரியார், பெண்ணியவாதிகள் திராவிட இயக்கங்கள், கம்யூனிசங்களுக்கு ஒரு கேள்வி?
பெண்ணியம் என்றால் என்ன நீ பாதி நான் பாதிதானே சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளை கடந்து நிற்கின்றோம் இன்னும் நட்ட நடு இரவில் ஒரு பெண் தனியாக நடக்க முடியவில்லை இதற்கு படை அமைத்து பாதுகாத்ததுண்டா, அல்லது இதற்கான தீர்வு நீங்கள் ஆண்ட ஆட்சிகளில் உண்டா,
பகுத்தறிவு பேசும் பலரும் சமாதிகளுக்கு பூ தூவி, பால் வாத்து வணங்குகின்றீர்களே இதற்கென்ன பெயர்,
இங்கிதம் தெரியாமல் தங்கத் தமிழை வைத்து பிழைப்பு நடத்தி வாய்க்கு வந்ததையெல்லாம் உளரி தள்ளூம் சீமான் போன்றவர்களுக்கும். சரக்கில்லாமல் சாதிக்க துடிக்கும் சில அர்ப சமூக ஆர்வலர்களுக்கு மற்ற மதங்களில் பெண்களுக்கு சமய சடங்குகளில் அனுமதிகள் மறுக்கப்படுக்கின்றது அது குறித்து மூச்சுவிடுங்கள் அப்பொழுது மக்கள் உங்களை எளிதாக உணர்வார்கள் என்று குமுறுகின்றர் உங்களை அறிந்த மக்கள்.
நாட்டை ஆள முதலமைச்சர் ஆண் என்றால் துணை முதலமைச்சர் பெண், சட்டசபையில் நாட்டை ஆளும் தலைவி பெண் என்றால் உபதலைவன் ஆண் என்று பாதிக்கு பாதி அமைச்சர்கள் பெண்களாக இருக்க வேண்டும் என உங்கள் உரிமை கேளுங்கள் அதுதான் பெண்ணியம்.
அறிவாய் பாக்க தவறும் ஆணை உடனுக்குடன் தண்டிக்க தடியெடுங்கள் அது பெண்ணியம்.
பெண்கள் பெண்களாலே வஞ்சிக்கபடுவதனை தடுத்து நிறுத்துங்கள் இது பெண்ணியத்தின் பெண்ணியம்.
சிந்தனை, செயலில் ஆண்களுக்கு நிகரானவர்கள் என்று சபதமிட்டு பெண்கள் செயல்பட பெண்ணை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முன்வாருங்கள் பெண்ணிய வாதிகளே.
தொழில் வல்லுநராக, இராணுவ தளபதியாக எல்லைப்படை வீராங்கணையாக, விமானத்தை இயக்குபவளாக ஒன்று பத்து எண்ணிகையை பெண்கள் பங்கு கொள்வதை விடுத்து லட்சக்கணக்கில் கொண்டு வாருங்கள் அதுதான் பெண்ணியம். கார், விமான தயாரிப்பு தொழிற்சாலையில் ஆண்களுக்கு நிகரான பெண் பொறியாளர்கள் எண்ணிக்கையில் அதிகமாக நுழைய வேண்டும்.
கணவன் கயவன் என்றால் கழுத்தறுத்துவிட்டு வருவது பெயர் பெண்ணியம் அல்ல கயவனை செய்த தவறுக்காக உங்கள் காலினை பிடித்து மண்ணிப்பு கேட்கச் செய்து நீபாதி நான் பாதி கண்ணே அது நீ உணர்த்தினாய் பெண்ணே என பாடவையுங்கள் இது பெண்ணியம்.
ஆய கலைகள் 63-இல் ஆணுக்கு நிகராக பெண்கள் எண்ணிக்கையில் பெருக வேண்டும். அப்பொழுதுதான் சரிசமான உரிமையுள்ள நாடாகும். உலக நாடுகளிடையே பெண்கள் பாதுகாப்பாக வாழத்தகுதியில்லா நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது. அதனை நீக்க பாடுபடுங்கள் அது பெண்ணியம். ஆணை அடிமையாக்குவது பெண்ணியமல்ல ஆணை மளதளவில் ஆழ வேண்டும். நீயும் நானும் ஒன்று உனக்கு உற்ற ஒருவனும் நான், உன் விருப்ப காரியங்களில் உற்றத்துணையானவனும் நான் என மாற்றமடைய செய்பவள் தான் பெண் இந்த மாற்றம் வீடு, நாடு விரும்பும் மாற்றம் ஆகும். இதுதான் பெண்ணியம் ஆகும்.
நீதிமன்றம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் இடம் இந்நாட்டில் இன்னும் நீதி வாழ்கின்றது என்று உணர்த்தும் இடம் நிச்சயம் இது குறித்து பரிசீலிக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்துக்கிடக்கின்றது மக்கள் கூட்டம்.
விரைவில் ஐயப்பன் கோவில் சிக்கல்கள் நீக்கப்பட்டு மக்கள் குமுறல்களுக்கு விடை கொடுக்கும் என மக்கள் நம்புகின்றனர்.
மேலும் படிக்க:
0 Comments