யூபிஎஸ்சியின் இன்ஜினியரிங் சர்வீஸ் வேலைவாய்ப்பு அறிவிப்பு !

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 581 பொறியாளர் சார்ந்த பணியிடங்களை நிரப்புவதற்கான இன்ஜினியர் தேர்வு-2019 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியளர் தேர்வாணையம் யூபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

யூபிஎஸ்சி இந்திய அரசியலமைப்பின் அக்டோபர் 1, 1926 முதல்  செயல்பட்டு வருகின்றது. கூட்டாட்சி ஆட்சிப்பணி அமைப்பாக  இந்திய ஆட்சிப் பணித்துறை யூபிஎஸ்சி என மாற்றம் பெற்றது. இந்திய அளவில்  பொதுத் துறைகளுக்கு தேவையான தகுதியுடையோரைப் பணியமர்த்தும் பணியை யூபிஎஸ்சி ஆற்றுகின்றது.

யூபிஎஸ்சி இந்தியன் ஆர்மி, இந்திய ஆட்சிப் பணித்துறை மற்றும் இந்திய ரயில்வேத்துறை, இன்ஜினியரிங் போன்ற துறைகளுக்கு திறமையானோரை தேர்வு மூலம் தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்துகின்றது.

இந்திய ஆட்சிப்பணி ஆணையம் அரசியலமைப்பின் 14வது  பகுதியின்  விதி 315 முதல் 323 வரையின்  கீழ்  செயல்படுகின்றது.


இந்தியன் ரயில்வேயின் பொறியியல்  சேவைப் பிரிவு, ராணுவ தளவாட தொழிற்சாலைகள், மக்கள் கணக்கெடுப்புத் துறை, எல்லையோர சாலைப் பொறியியல் பிரிவு, ராணுவத்தின் பொறியியல் பிரிவு தொலைத் தொடர்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியிடங்களுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.


பணியின் பெயர்
இன்ஜினியரிங் பணியிடங்கள்
வயது வரம்பு
 20 வயது முதல் 30 வயது வரை
கல்வித் தகுதி
இளங்கலை, முதுகலை இன்ஜினியரிங் பட்டம்
பணியிடங்கள் எண்ணிக்கை
581
சம்பளம்
அறிவிக்கையின்படி
பணியிடம்
இந்தியா முழுவதும்


 

யூபிஎஸ்சியின் 2019 ஆம் ஆண்டிற்கான  அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்கள் எண்ணிக்கை 581 ஆகும். 

யூபிஎஸ்சியின் இன்ஜினியரிங்  பணிகளுக்கு விண்ணப்பிக்க 21 வயது முதல் 30 வயதுள்ளோர் விண்ணப்பிக்கலாம். பொறியில துறை, மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்டிரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேசன் போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பிடெக் முடித்தவர்கள், மற்றும் ரோடியோ பிசிக்ஸ், ரோடியோ இன்ஜினியரிங், போன்ற இன்ஜினியரிங் துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களும்  விண்ணப்பிக்கலாம். 

இன்ஜினியரிங் பணிகளுக்கு  தகுதியானவர்கள் முதல்நிலை, முதன்மைத் தேர்வு மூலம் வெற்றி பெறுவோர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மத்திய அரசின் ஆட்சிப்பணி துறையில் பணியாற்றலாம். 

மத்திய ஆட்சிப்பணித்துறையில் விண்ணப்பிக்க பொது மற்றும் ஓபிசி பிரிவினர்  ரூபாய் 200 கட்டணம் செலுத்தலாம். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு  கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. 

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 22.10.2018 ஆகும். 
முதல் நிலை தேர்வுக்கு உத்தேசமாக அறிவிக்கப்பட்டுள்ள தேதி ஜனவரி 6, 2019 ஆகும். 

Post a Comment

0 Comments