நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையுடன் இண்டர்வியூ எதிர்கொள்ள டிப்ஸ்!!

இண்டர்வியூவினை எவ்வாறு கையால்வது என்று படித்த முடித்தவர்களிடையே பல்வேறு சந்தேகங்கள் உள்ளன.  மாணவர்கள் கல்லுரியில் படிக்கும் பொழுது  சாப்ட் ஸ்கில் பெயரில் இப்பொழுதெல்லாம் இண்டர்வியூவினை எதிர்கொள்வது என கற்றுக் கொடுக்கப்படுகின்றது.


நீங்கள் எந்த இண்டர்வியூவில் கலந்து கொண்டாலும்  உங்கள் உடை மற்றும் நடை பாவனையில் முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும். வேலை தேட தொடங்கிவிட்டாலே தானாக அந்த  தன்மை சிலருக்கு அப்டேட்டாகும். ஆனால்  பலருக்கு இண்டர்வியூ குறித்த டென்சன்கள் என்ன கேட்பார்களோ வேலை கிடைக்குமா, இண்டர்வியூ  சிறப்பாக செய்லபடுவேனா என்ற சந்தேகங்கள் ஏற்படுகின்றது. இந்த மனநிலையிலுள்ளோர்க்கும்.  நேரடி தேர்வு குறித்த எந்த ஒரு முன் அனுபவம் இல்லாதவர்களுக்கான இந்த பதிவு உதவிகாரமானதாக இருக்கும். 

வேலை குறித்த தெளிவு: 
நீங்கள் கலை அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் போன்ற எந்த பாடங்களில் பட்டங்கள் பெற்றிருந்தாலும் பட்டப்படிப்பை முடிக்கும் நிலையில் இருந்தாலும் உங்களுக்கான வேலை குறித்த சாய்ஸ் எனப்படும் தெளிவான  முடிவு இருக்க வேண்டும். படிக்கும் வரையில் அது குறித்த யோசனை இல்லையெனில் பரவாயில்லை. ஆனால் படித்தப்பின்  வேலைக்கு போக வேண்டும் என்ற பொறுப்புணர்வு மனதில் எழுந்தால் நிச்சயம் அது குறித்த தெளிவான பார்வை எந்தெந்த வேலைக்கு போக வேண்டும் எந்த வேலைகளுக்கு போக என்ன தகுதிகள் தேவை என்பது குறித்த தெளிவு இருக்கும் அதற்கான திறனை வளர்த்து கொண்டு ஜொலிக்கலாம். 

திறன்  பயிற்சி: 
வேலைக்கு  போக முடிவெடுத்தப் பின் அதற்கான திறன்களை தெளிவாக வரையறுத்திருக்க வேண்டும். அதன்படி திறன்களை முழுமையாக  கற்றுக் கொள்ள வேண்டும். தெரியாதவற்றை கற்றுக்கொண்டு தெர்ந்தவர்ற்றை நன்கு மெருக்கேற்றி அதற்கான தேர்வினை எவ்வாறு எளிதில் தேர்ச்சி பெறுவது.  குறிப்பிட்ட தேர்வுக்கான எழுத்து மற்றும் நேரடி தேர்வுக்கான மொழி, ஆளுமை, தன்னம்பிக்கையோடு பதிலளித்தல் மற்றும்  சுமார்டாக கொடுக்கப்படும் கேள்விகளுக்கு விடையளித்தல் நேர மேலாண்மையுடன் செயல்படுதல் போன்ற பயிற்சிகளை தொடர்ந்து செய்து  வேலைக்கான எந்த  ஒரு தேர்வையும் எதிர்கொள்ள எல்லா திறன்களையும் ஒருங்கிணைத்து கொண்டவாராக இருக்க வேண்டுமென்பதில் எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும். 

சுயவிவர பயோடேட்டா: 
வேலைக்கு விண்ணப்பிக்கும் பொழுது  உங்களின் அடிப்படை தகவல்கள் மற்றும்  அந்த வேலையினை பெற உங்களிடம் இருக்கும் அடிப்படைத் திறன்கள்  கல்வித் தகுதிகள் மற்றும் தனி திறன்கள் அது குறித்த நீங்கள் பெற்ற வெற்றி ஆகியவை குறித்து தெளிவாக சுருக்கமாக தெரிவிக்க வேண்டும். அத்துடன்   பயோடேட்டா போன்றவற்றை எவ்வாறு வடிவமைத்தல் எந்த பணிக்கு எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என்பதை கூகுளில் தெரிந்து கொண்டு அதனை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும்.  உங்கள் சுய விவரங்கள் பார்த்து  உங்களைப் பற்றிய கணிப்பில் ஒரு மனநிறைவு  உண்டாகுமாறு உருவாக்கியிருக்க வேண்டும்.  அலைன்மெண்ட்கள் கொடுத்திருக்கும் தகவல்கள் அனைத்தும் உண்மையாக இருக்க வேண்டும்.நீங்கள் விண்ணப்பித்திருக்கும் வேலைக்கு  தகுதியானவர் என்ற அடிப்படையுணர்வு தோன்றுமாறு எளிமையாக   திறன்  படைத்தவர் என்ற நன்மதிப்பை கொண்டிருக்க வேண்டும் உங்கள் சுயவிவர பயோடேட்டா.

உடை, மொழி: 
சுயவிவரங்கள் அடங்கிய பயோடேட்டாவை நீங்கள் பூர்த்தி செய்து அனுப்பும் முன்பு உங்களிடம் இருக்க வேண்டியது  வேலைக்கான இண்டர்வியூ குறித்த தெளிவு மற்றும் அங்கு அணிய வேண்டிய பார்மல் துணிகள் அத்துடன் அங்கு பேச வேண்டிய மொழி குறித்து தெளிவான பார்வை இருக்க வேண்டும்.  எதுவானாலும் தெளிவாக அச்சமின்றி பேசவும் ஆடம்பரமற்ற  உடையும் அணிந்திருத்தல் போதுமானது ஆகும்.

நேரடி தேர்வுக்கு அணியும் உடைகள் பார்மலாக உங்கள் நிறத்திற்கேற்றவாறு  அனிய வேண்டும் மேலும் உடைகளின் நிறம் மற்றும்  மேக் அப்களில் பர்பெக்சன்ஸ் இருக்க வேண்டும். பேசும் மொழிகளிலும் நேரத்தி இருக்க வேண்டும் அத்துடன் பிகேவியரில்    கவனம் கலந்திருக்க வேண்டும். உங்கள் கேள்வி உடல்வாகில் எந்த வித சலனமோ டென்சனோ   தெரியக் கூட்டாது.

உங்களிடம் இருக்கும் திறன் மற்றும் உங்கள் போக்ஸ் அத்துடன் வேலையில் உங்களை பற்றிய மதிப்பு உயரும்படியான நடவடிக்கையிருந்தால் உங்களுக்கான வேலை உறுதி ஆகும்.

சுய பரிட்சையம்: 
இண்டர்வியூவில் உங்களைப் பற்றி செல்ப் இண்ட்ரோ கொடுக்கும் பொழுது நீங்கள் யார் எங்கிருந்து வருகிறிர்கள் உங்கள் குடும்பம் சார்ந்த பின்னனி ஆகியவற்றை தெளிவாக சுருக்கமாக  தெரிவிக்கவும்.

அதன்பின் இண்டர்வியூவில் கேட்கப்படும் கேள்விகள் குறித்து தெளிவான லாஜிக்கலாக விடை கொடுக்க தெரிந்திருக்க வேண்டும். தெரியாத கேள்விகளுக்கு உண்மையை  கூறவும். விடையை தேடுகிறேன் பேர்வழியென்று  மழுப்பி பேசுதலை தவிர்க்கவும்.

உங்களுடைய கல்வி தகுதிகள் குறித்து தெரிவிக்கும் பொழுது அதனுடன் நீங்கள் பயின்ற பாடங்களை தவிர்த்து தெரிந்து கொண்ட வேலை சம்மந்தமான திறன்கள் இருந்தால் நிச்சயம் தெரிவிக்க வேண்டும்.

கேள்விகளுக்கு விடையளிக்கும் கலை: 
இண்டர்வியூவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சுற்றி வளைத்து பதில் கொடுப்பதை விட  கேள்விக்கு உண்டான நேரடி பதிலை தெளிவாக  கொடுங்க. மற்றும் கேள்விக்கு தகுந்த விடை இருக்க வேண்டும் பேசும் பொழுது தன்னம்பிக்கை குரலில் தெரிய வேண்டும்.

கேள்விகளுக்கு நேரடியான விடை  கொடுக்கும் பொழுது சிம்பிளாக விடை கொடுங்க அத்துடன் கொடுக்கப்படும் விடைக்கு தேவையெனில் எடுத்துக்காடுகள் கொடுத்து விளக்கலாம். மேலும் நீங்கள் கொடுக்கும் எடுத்துக்காட்டுகள் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும்.

நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை: 
 உங்களுடைய  பார்வை முழுவதும் இண்டர்வியூவரை பார்த்து இருக்க வேண்டும் ஐ காண்டாக்ட் மிக அவசிய ஆகும். உங்களுக்கான இருக்கையில் அமரும் போது நேராக அமர்ந்து  பதில் கொடுக்க வேண்டும்.   சேரில்  அமரும்பொழுது  சேரின் நுணியில் அமர்ந்து பேசுதல் சரியான அனுகுமுறையல்ல.

Post a Comment

0 Comments