இந்த நாள் இனிய நாள் ராசிபலன்கள்!

இன்று  விளம்பி ஐப்பசி மாதம் 7 ஆம் தேதி  ஆங்கில மாதம் அக்டோபர் 24 ஆகும்.  ஐப்பசி  மாதம் பௌர்ணமி நாள் 
நட்சத்திரம்: 
இன்று காலை 10.27 வரை ரேவதி பின்பு அஸ்வினி
திதி
 இன்று இரவு 11.01 வரை பௌர்ணமி பின்பு பிரதமை 
யோகம்  மரண
சந்திராஷ்டமம் அஸ்தமம் 
மேஷம் ராசி

எதிர்பார்த்த தனவரவுகளில் காலதாமதம் உண்டாகும். பிறருக்கு உதவும்போது கவனத்துடன் செயல்படவும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வை காண முயற்சிப்பீர்கள். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். புண்ணிய யாத்திரை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அசுவினி : தனவரவுகளில் காலதாமதம் உண்டாகும்.
பரணி : நிதானம் வேண்டும்.
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம் ராசி

நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். மனக்கவலைகள் குறைந்து மகிழ்வுடன் காணப்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

கிருத்திகை : மாற்றங்கள் உண்டாகும்.
ரோகிணி : கவலைகள் குறையும்.
மிருகசீரிடம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.

மிதுனம் ராசி

எதிர்காலம் சம்பந்தமான பணிகளில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைப்பதற்கான சூழல் அமையும். பணியில் உள்ளவர்களுக்கு ஏற்பட்ட தடைகள் நீங்கும். எதிர்பாலின மக்களிடம் கவனமாக இருக்கவும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மிருகசீரிடம் : புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.
திருவாதிரை : உதவிகள் கிடைக்கும்.
புனர்பூசம் : தடைகள் நீங்கும்.


கடகம் ராசி

நண்பர்களுடனான நட்பு நிலை மேலோங்கும். தந்தையின் ஆதரவால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். தொழில் முனைவோர்கள் வேலையாட்களிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

புனர்பூசம் : நட்பு வட்டம் பெருகும்.
பூசம் : விவேகம் வேண்டும்.
ஆயில்யம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.


சிம்மம் ராசி

தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய ஆராய்ச்சி சம்பந்தமான தேடல் உருவாகும். உறவினர்களால் சுப விரயம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மகம் : கவனம் வேண்டும்.
பூரம் : வெற்றி பெறுவீர்கள்.
உத்திரம் : தேடல் உருவாகும்.


கன்னி ராசி

சிந்தனைகள் மேலோங்கும். எதிர்காலம் சம்பந்தப்பட்ட புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். விலையுயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் சாதகமற்ற நட்பு நிலை உண்டாகும். வாகனப் பயணங்களில் எச்சரிக்கையுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திரம் : பொறுமையுடன் செயல்படவும்.
அஸ்தம் : எச்சரிக்கை வேண்டும்.
சித்திரை : பொருட்சேர்க்கை உண்டாகும்.

துலாம் ராசி

விவசாயிகளுக்கும், தானியங்களை விற்போர்க்கும், குடும்ப உறுப்பினர்களால் சேமிப்பு அதிகரிக்கும். மூத்த சகோதரர்களால் சாதகமான சூழல் அமையும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் அமையும். வெளிநாடு சம்பந்தப்பட்ட பணிகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

சித்திரை : சேமிப்பு அதிகரிக்கும்.
சுவாதி : சாதகமான நாள்.
விசாகம் : திறமைகள் வெளிப்படும்.

விருச்சகம் ராசி

மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். வர்த்தகங்களில் மத்தியமான தனலாபம் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க காலதாமதமாகும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இளைய உடன்பிறப்புகளிடம் நிதானம் வேண்டும். தொழில் சம்பந்தமான புதிய நட்புகள் கிடைக்கும். 

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : நினைவாற்றல் மேம்படும்.
அனுஷம் : ஆதரவு கிடைக்கும்.
கேட்டை : காரியசித்தி உண்டாகும்.

தனுசு ராசி

பயணங்களால் இலாபம் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். தொழிலில் புதிய யுக்திகளை கையாண்டு இலாபம் அடைவீர்கள். ஆகாய மார்க்க பயணங்களால் தொழில் முறையில் உள்ளவர்களுக்கு புகழ் உண்டாகும். பிறரின் செயல்களில் உள்ள குறைகளை கனிவாக சுட்டிக் காட்டவும். 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : தனவரவு அதிகரிக்கும்.
பூராடம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
உத்திராடம் : புகழ் உண்டாகும்.


 மகரம் ராசி

நண்பர்களின் உதவிகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புண்ணிய தலங்களுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். சிந்தனைகளை செயல்படுத்த முயல்வீர்கள். எண்ணிய முயற்சிகள் ஈடேறும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மயில்நீலம்

உத்திராடம் : அனுகூலமான நாள்.
திருவோணம் : பயணங்களால் இலாபம் உண்டாகும்.
அவிட்டம் : முன்னேற்றம் உண்டாகும்.


 கும்பம் ராசி

பிறரை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும். வெளியூர் தொழில் முயற்சிகளில் சுமாரான பலன்கள் கிடைக்கும். பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். மனதில் புதிய எண்ணங்கள் தோன்றும். சுபச் செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அவிட்டம் : விமர்சனத்தை தவிர்க்கவும்.
சதயம் : அனுசரித்துச் செல்லவும்.
பூரட்டாதி : வாதங்களை தவிர்க்கவும்.


 மீனம் ராசி

கடல் மார்க்க பணிகளால் எதிர்பார்த்த தனலாபம் உண்டாகும். அறச்செயல்களால் கீர்த்தி உண்டாகும். சுபச் செய்திகள் வந்தடையும். வெளிநாட்டு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பொதுப்பணியில் இருப்போர்க்கு சாதகமான சூழல் அமையும். திருமண வரன்கள் கைகூடும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

பூரட்டாதி : தனலாபம் உண்டாகும்.
உத்திரட்டாதி : சுபச் செய்திகள் வரும்.
ரேவதி : திருமண வரன்கள் கைகூடும்.

Post a Comment

0 Comments