டிஎன்பிஎஸ்சியின் குரூப் 2 தேர்வினை வெல்ல அறிவியல் பாடப்பகுதியின் அவசியம் நாம் அறிந்ததே. அதனை சிலேட்குச்சி இந்தியா இங்கு ஹைலைட்களாக கொடுத்துள்ளது. பொது அறிவுப் பகுதியில் தவிர்க்க முடியாத பகுதியான அறிவியிலில் நாம் வலிமையாக இருக்க வேண்டும்.
மனிதனின் செரிமான முறை:
உணவு மண்டலத்தில் அமைப்பு செயல்பாடு இரைப்பை மற்றும் உணவு குழலில் தோன்றும் நோய்களைக் கண்டறிந்த நோய் சிகிச்சை முறையையும் பற்றி அறிவது கேஸ்ட்டிரோ எண்ட்ரியாலஜி எனப்படும்.
இரைப்பை குடல் பெரிய தசையிலான 9 மீட்டர் நீளமுடைய பை மற்றும் குழல் போன்ற பகுதியாகும்.
மனித உணவுப்பாதை 6 முதல் 9 மீட்டர் நீளம் கொண்டது.
மனித உடலின் மிகக்கடினமான பகுதி பற்களின் எனாமல்
மனிதர்களுக்கு 32 பற்கள் காணப்படுகின்றன. அவற்றில் வெட்டு பற்கள் 4, கோரைப் பற்கள் 2, முன் கடவாய் பற்கள்- 4 பின் கடவாய் பற்கள் -6 என ஒவ்வொரு தாடையிலும் 16 பற்கள் வீதம் 32 பற்கள் காணப்படுகின்றன.
கடைசி கடவாய் பற்கள் 20வது வயதிற்குப் பின் முளைக்கும் இவை ஞானப் பற்கள் எனப்படும்.
வாயில் மேலண்ணச் சுரப்பிகள், கீழ்த்தாடைச் சுரப்பிகள் மற்றும் நாவடிச் சுரப்பிகள் என மூன்றும் இணை உமிழ்நீர்ச் சுரப்பிகள் காணப்படுகின்றன.
பொன்னுக்கு வீங்கி என்ற வைரஸ் நோயினால் பாதிக்கப்படுவது மேலண்ணச் சுரப்பிக்கிகள் ஆகும்.
மூன்று இணை உமிழ்நீர் சுரப்பிகளுக்கும் இணைந்து நாள் ஒன்றுக்கு 1.5 லிட்டர் உமிழ்நீரைச் சுரக்கின்றன.
உமிழ்நீர்ச் சுரப்பிகள் சுரக்கும் உமிழ்நீரில் டையலின் என்ற நொதியும் பை கார்பனேட் என்ற உப்பும் கோழையும் லைசோசைம் என்ற நொதியும் காணப்படுகின்றன.
தொண்டைப் பகுதி 11 செ.மீ நீளம் கொண்டது இதில் 2 உள் நாசித்துளைகள், 2 யூஸ்டேசியன் குழல்கள், வாய், குரள்வளை, உணவுக் குழல் என 7 துளைகள் உள்ளன.
உணவு குழல் 22 செமீ நீளமுடைய தசைப்படலக் குழலாளனது இதன் உட்ப்புறச் சுவரில் கோழைப்படலம் கொண்ட மெல்லிய அடுக்காலான எபிதீலியம் திசு காணப்படுகிறது.
இரைப்பையில் மூன்று பகுதிகள் இருக்கும் அவை கார்டியாக் இரைப்பை , ஃபண்டஸ் இரைப்பை மற்றும் பைலோரஸ் இரைப்பை
இரைப்பை நீரில் சுரக்கும் நொதிகள் பெப்சின், ரெனின், ஹைடிரோ குளோரிக் அமிலம்
இரைப்பைச் சுவரிலுள்ள சிறுகுழிகளில் காணப்படக்கூடிய சிறப்பு வகைச் செல்லாகிய ஆக்ஸன்டிக் செல்லினால் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உற்பத்தி செய்யப்படுகின்றது.
சிறுகுடலிலின் மூன்று பகுதிகள் டியோடினம் , ஜீஜீனம் மற்றும் இலியம்
டியோடினத்தின் நீளம் 22 செ.மீ ஆகும்.
மனிதனின் உடலில் மிகப் பெரிய சுரப்பி கல்லீரல் இதன் எடை ஏறக்குறைய 1500 கிராம், கல்லீரல் பித்த நீரைச் சுரக்கின்றது. பித்த விரிடின் என்ற பித்த நிறமிகளும் காணப்படுகின்றன.
அதிகப்படியான கொழுப்பு கலந்த உணவை உன்பதனால் பித்தப்பையில் பித்தக் கற்கள் உருவாகின்றன.
கணையம் நாளமுள்ள சுரப்பியாகவும், நாளமில்லாச் சுரப்பியாகவும் வேலை செய்கிறது.
கணையத்தின் மேற்ப்புற லாங்கர்கான் திட்டுக்கள் காணப்படுகின்றன.
கணையத்திலுள்ள ஆல்பா செல்கள் குளூக்கோகான என்ற ஹார்மோனையும் பீட்டா செல்கள் இன்சுலின் ஹார்மோனையும் சுரக்கின்றன.
நாளமுள்ள சுரப்பியாக கணையம் சுரக்ககூடிய நொதிகள் 1.சுக்ரோஸ், 2, மால்டோஸ், லாக்டோஸ், லைப்பேஸ் ஆகும்.
இலியம் சுருண்ட வடிவமமுடைய குழல்- சிறுகுடலில் ஐந்தில் மூன்று பகுதிகள் நீளமுடையது.
இலியத்தின் உட்புறச் சுவரில் காணப்படும் விரல் போன்ற நீட்சிகள் குடல் உறிஞ்சிகள் எனப்படும்.
சிறுகுடலில் ஏறக்குறைய நான்கு மில்லியன் குடலுறிஞ்சிகள் காணப்படுகின்றன.
பெருங்குடலில் இலியத்தில் தொடங்கி மலப்புழை வரை 1.5 மீட்டர் நீளமுடையது இதில் மூன்று பகுதிகள் சீக்கிம், கோலன் மற்றும் மலக்குடல் ரெக்டம்
சீக்கீம் ஐந்து செ,மீ நீளமுடையது இதில் உள்ள முட்டுப்பை, குடல்வால் என்று அழைக்கப்படும் எச்ச உறுப்பாகும்.
மனித உடலில் சக்தியை கொடுப்பது குளுக்கோஸ் என கண்டறிந்தவர் பெர்னட்
மேலும் படிக்க:
மேலும் படிக்க:
0 Comments