இந்தியாவில் சீர்திருத்தம் என்பது,
அரசின்
எந்தவொரு பகுதியில் நடந்தாலும் எதிர்குரல்கள் கேட்கத்தான் செய்யும், அதுபோலவே இந்திய
பாதுகாப்பு படையின் மூன்று
பிரிவுகளையும் ஒன்றிணைத்து, ஒன்றுபட்ட ஒரு
அமைப்பாக மாற்றம் ஆலோசனைகள் மற்றும் விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
கடந்த
2014-ல்
பாஜக
ஆட்சி
அமைத்ததிலிருந்து, இராணுவத்தில் நிறைய
மாற்றங்கள் கொண்டு
வரப்பட்டுள்ளது. பெண்
போர்
விமானிகளை நியமனம் செய்வதிலிருந்து ரஃபேல்
விமானம் வாங்குவது வரையிலும் நிறைய
எதிர்ப்பும், வரவேற்பும் இருந்தது.
இந்தியாவில் இராணுவத்தின் மூன்று
பிரிவுகளையும் ஒன்றிணைத்து, உலக அளவில் மிகச் சக்திவாய்ந்த பாதுகாப்பு படைகளில் இந்திய ராணுவமும் ஒன்றாகும். இந்திய பாதுகாப்பு படை தரைப்படை, கப்பல் படை, விமானப் படை என மூன்று சக்திவாய்ந்த படைகளை கொண்டு இந்திய பாதுகாப்புத்துறை இயங்கி வருகின்றது.
இந்தியா தனது முப்பைடைகளையும் ஒருங்கிணைக்க புதிய மசோதா தாக்கல் செய்ய பரிந்துரைத்துள்ளது. ஒன்றிணைக்கப்பட்ட போர் பிரிவுகளை உருவாக்க பாதுகாப்பு அமைச்சகம் விவாதித்து வருகிறது. அதேசமயம், இந்திய விமானப் படையிலிருந்து எதிர்ப்புகளும் எழுந்துள்ளது.
இந்தியா தனது முப்பைடைகளையும் ஒருங்கிணைக்க புதிய மசோதா தாக்கல் செய்ய பரிந்துரைத்துள்ளது. ஒன்றிணைக்கப்பட்ட போர் பிரிவுகளை உருவாக்க பாதுகாப்பு அமைச்சகம் விவாதித்து வருகிறது. அதேசமயம், இந்திய விமானப் படையிலிருந்து எதிர்ப்புகளும் எழுந்துள்ளது.
ஒருங்கிணைக்கப்பட்ட போர்
பிரிவு
(Integrated Theater Command) என்றால் என்ன
என்பதை
பார்ப்போம்.
Integrated Theater Commend இண்டிகிரேட்டடு தியேட்டர் காமண்ட் என்பது போர் சமயங்களில் தேவையான துருப்புகளை ஒரே
இடத்தில் குவித்து வைப்பதன் மூலம்
நேரம்
மற்றும் வேலைப்பளுவை குறைப்பதற்கான ஒரு
வழியாகும்.
இதன்மூலம் போர்
என்று
வரும்போதோ அல்லது
இயற்கை
பேரிடர் மீட்பு
பணியில் ஈடுபடும்போதோ, விமானங்கள் அல்லது
டாங்கிகளை வெவ்வேறு இடங்களில் இருந்து கொண்டுவந்து ஓர்
இடத்தில் சேர்க்க வேண்டும், இவ்வாறு ஒன்று
திரட்டி எதிர்
தாக்குதல் நடத்துவதற்குள் எதிரி
படைகள்
முன்னேறி தாக்குதலை நடத்தி
முடித்துவிடும்.
எனவே,
போரில்
எதிர்
தாக்குதல் நடத்த
போதுமான துருப்புகளை ஒரே
இடத்தில் ஒருங்கிணைத்து தயாராக
வைக்கும் பட்சத்தில், எளிதில் தாக்குதலில் ஈடுபட
முடியும்.
இந்த
வேளையில், இந்த
மாற்றத்திற்கான விமானப்படையின் எதிர்ப்பும் சில
காரணங்களுக்காக எழுப்பப்படுகிறது, அதில்
முக்கியமாக கூறப்படுவது, இந்திய
விமானப்படை தன்
சுதந்திரத் தன்மையை இழந்துவிடும் என்ற
கருத்து. 2001-இல் ஒருங்கிணைந்த ராணுவ தலைமை அந்தமான் நிகோபர் தீவுகளில் மட்டும் 2001 இல் நியமிக்கப்பட்டது. ஆனால் படைகளுக்கு ஏற்ப்பட்ட சிக்கல்கள் புரிதலின்மை காரணமாக அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதையெல்லாம் தாண்டி,
ஆட்சியாளர்களுக்கு அடிவயிற்றில் புளியை
கரைக்கும் விஷயம்
என்னவென்றால், இந்த
சீர்திருத்தம் ஏற்படுத்துவதால் முப்படைகளும் சேர்ந்த இராணுவ
ஆட்சியை அமைந்துவிடுமோ என்ற
அச்சமும் உள்ளது. இந்தியாவில் சிறு சீர்த்திருத்தம் செய்து பாதுகாப்பு படையை பக்காவாக மாற்றி இந்திய அரசியல்வாதிகளை கேள்வி கேட்க செய்ய வேண்டும். அப்பொழுதுதான் நமது தலைகளுக்கு நிஜ தலைவலி தெரியும்.
WRITTEN BY YOUTH
ICON: SARAVANA KUMAR MOHANA
0 Comments