பள்ளி, கல்லுரி மாணவிகளின் கருமை நிற கனவு என்ன இது? என்ற கேள்வியா எழுகின்றதா, அது நல்லது, இன்று அனைத்து டீன் ஏஜ் மாணவிகளின் மனதில் கருமை நிற கனவு என்பது இயற்கையின் வரத்தால் கிடைத்ததை தக்கவைக்க செய்யும் கனவாகும். இந்த கனவை மூதலீடாக கொண்டு இந்திய அழகு பொருட்களுக்கான சந்தைகள் சக்கைப் போடு போடுகின்றன. ஆனால் அனைத்தும் கெமிக்கல் கலந்தவையாக பெண்களின் கருமை நிற கனவுக்கு நிரந்தர தீர்வு தருவாதாக இல்லை. இப்பொழுது புரிந்ததா நாங்கள் கருமை நிற கனவு என எதைப் பற்றி கூறுகின்றோம். பெண்களின் கருமை நிற கனவு என்பது நீண்ட அடர்த்தியான கூந்தல் வளர்ப்பு பற்றிதான் கூறுகின்றோம்.
இன்றைய அவசர உலகில் கருமை நிற கூந்தல் வளர்ப்பு குறித்து பெண்கள் பல்வேறு யுக்திகளையும் சந்தையிலுள்ள பல சரக்குகளையும் பயன்படுத்தி இருப்பார்கள் ஆனால் அவற்றின் பயன்கள் என்று பார்த்தால் செலவு மட்டுமே மிச்சம் ஆகும்.
கூந்தல் பராமரிப்பு என்பது இக்காலத்து பெண்களுக்கு அத்தியவசியமாகிவிட்டது. அதற்காக பார்லர் சென்று தன் கூந்தலை வீணாகி விடுகிறர்கள். பண்டையகாலத்தில் இருந்த பெண்கள் தன் கூந்தலை பெரிது போற்றி காத்தனர், ஆனால் இக்காலத்து பெண்கள் தம் கூந்தலை பராமரிக்க சரியான வழிதெரியாமல் பார்ப்பதை எல்லாம் பயன்படுத்தி தலைமுடி வளர்ப்பு பராமரிப்பு தெரியாமல் பால்படுத்துகின்றனர். இக்காலத்து பெண்களுக்காக வீட்டிலிருதே தன் கூந்தலை காக்க ஏற்ற குறிப்புக்கள் இதோ சிலேட் குச்சி வழங்குகின்றது.
இன்றைய காலகட்டத்தில் காற்று மாசுபாடு காரணமாக நாம் வெளியே சென்று வரும்போது அதிகபட்சமான தூசிகள் காரணமாக நம் கூந்தல் பாதிக்கப்படுகிறது. மேலும் தலைமுடி வலிமையும் சேர்ந்து பாதிப்பு அடைகிறாது. அதற்கு முதல் காரணம் காற்றில் உள்ள தூசுகள் ஆகும். அதற்காக தூசுகளில் இருந்து நம் கூந்தலை காத்துக்கொள்ள எளிய முறையில் வீட்டிலிருது பொருட்களை வைத்து தயாரித்து பயன்படுத்தவும். தினமும் அதனை பயன்படுத்தி கூந்தலின் நிலத்தையும், அடர்த்தியையும் பாதுகாக்கலாம்.
கருமை நீற கூந்தல் பராமரிக்க பச்சை நிற பசுமை எண்ணெய்:
பசுமை எண்ணெய் தயாரிக்க முக்கியமாக தேவைப்படும் பொருட்கள் நாட்டு வைத்திய பொருட்கள், வீட்டு பொருட்கள் பெரும்பான்மையாக பயன்படுத்தி தயாரிக்கலாம். சில பொருட்கள் உங்கள் வீடு, மற்றும் தோட்டங்களில் வளரும் பொருட்களும் கடைகளில் நீங்கள் தினமும் வாங்கி பயன்படுத்தும் பொருட்களே ஆகும்.
தேவைப்படும் பொருட்கள்:
நெல்லிக்காய், மருதாணி பூ இலை, அத்துடன் செம்பருத்தி ஆகும். இவை இயற்கையாக வளருவதுடன் மற்றும் நாம் அன்றாட வாழ்க்கையில் தினமும் கடந்து செல்வது ஆகும். இயற்கையின் கொடையான பொருட்களை பயன்படுத்தும் பொழுது பக்க விளைவற்ற பயன்கள் பெறலாம். மற்றும் இயற்கையாகவே நம் கூந்தல் வளர்த்து பாதுகாக்க பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை :
பயன்படுத்தும் முறை :
மருதாணி இலை, அடுக்கு செம்பருத்தி இலை பூ அல்லது ஒத்த செம்பருத்தி, பெரிய நெல்லிக்காய், கறிவேற்பிலை, மற்றும் கரிசலாக்கண்ணி இலை அனைத்தும் சேர்த்து வைத்து அரைத்து காயவைத்து தேங்காய் எண்ணெயில் போடு ஊரவைத்து தினமும் கூந்தலில் தடவி வந்தால் கூந்தல் கருமை நிறத்துடன், நீளமாகவும், தடிப்பாகவும் வளரும்.
பசுமை எண்ணெயை தினமும் தடவி வந்தால் பெண்களின் கூந்தலில் உள்ள பொடுகு, மற்றும் அனைத்தும் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.
கூந்தல் வளர்ச்சியானது பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவிகளுக்கும் மிகவும் உதவியாக இருக்கும்.
இழந்த என் அழகு கிடைக்குமா என்று கவலை படும் அணைத்து பெண்களும் மீண்டும் அழகை பெற இது கண்டிப்பாக பயன்படும். நம் அழகை நாமே பராமரிப்போம்.
WRITTEN BY: SLATEKUCHI TEAM NANDHINI GOVINDASAMY, MARIYAMMAL
PICTURE CREDIT TO SLATEKUCHI MANGER: B. SRIMATHI
மேலும் படிக்க:
பட்டுப் போன்று கூந்தல் பளப்பளக்க கற்றாழை கண்டிசனர் வீட்டிலியே செய்யலாம் வாங்க!
பசுமை எண்ணெயை தினமும் தடவி வந்தால் பெண்களின் கூந்தலில் உள்ள பொடுகு, மற்றும் அனைத்தும் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.
கூந்தல் வளர்ச்சியானது பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவிகளுக்கும் மிகவும் உதவியாக இருக்கும்.
இழந்த என் அழகு கிடைக்குமா என்று கவலை படும் அணைத்து பெண்களும் மீண்டும் அழகை பெற இது கண்டிப்பாக பயன்படும். நம் அழகை நாமே பராமரிப்போம்.
WRITTEN BY: SLATEKUCHI TEAM NANDHINI GOVINDASAMY, MARIYAMMAL
PICTURE CREDIT TO SLATEKUCHI MANGER: B. SRIMATHI
மேலும் படிக்க:
பட்டுப் போன்று கூந்தல் பளப்பளக்க கற்றாழை கண்டிசனர் வீட்டிலியே செய்யலாம் வாங்க!
0 Comments