இந்திய காமராசர் வாஜ்பாய்க்கு வணக்கத்துடன் அஞ்சலி!

இந்திய தாய்திரு நாட்டின் தலைசிறந்த பிரதமராக பணியாற்றிவர் திரு. வாஜ்பாய் நாட்டின்  இக்கட்டான சூழல்களில் முடிவுகளை எடுப்பதில் வல்லவராக இருந்தார் வாஜ்பாய். அபதுல்கலாம் போன்ற சிறந்த மனிதர்களை குடியரசு தலைவராய் முன்மொழிந்த பெருமை அவரையே சேரும். தேசம் மாபெரும் ஒரு தலைவரை இழந்து தவிக்கின்றது.  திரு.வாஜ்பாயிக்கு அஞ்சலியுடன் அவர்  காலத்தில் செய்யப்பட்ட சாதனைகள் நினைவு கொண்டு  அவருக்கு நன்றியுடன் இறுதி  வணக்கம் செய்வோம்.  

வாஜ்பாய் பிறப்பு:
இந்திய மண்ணின் மைந்தர்  வாஜ்பாய் மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் 1924ம் ஆண்டு டிசம்பர் 25ந்தேதி (கிறிஸ்துமஸ் நாளில்) பிறந்தார். அவருடைய தந்தையின் பெயர் பண்டிட் கிருஷ்ணபிகாரி வாஜ்பாய். அவர் பள்ளி ஆசிரியர்.


குவாலியரில் தொடக்கக்கல்வி பயின்ற வாஜ்பாய் பின்னர், விக்டோரியா கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. பட்டம் பெற்றார். பின் முதுகலைப்படிப்பிற்காக கான்பூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அரசியல் விஞ்ஞானத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார்.

சிறந்த  கவிஞரான வாஜ்பாய் கவிதை எழுதுவதில் வல்லவர், தேசபக்தி கவிதைகள்  பல  எழுதியுள்ளார். சட்டக்கல்லூரியில் சேர்ந்தார். பதவியில் இருந்து ஓய்வுபெற்ற அவருடைய தந்தையும், சட்டம் பயில விரும்பி அதே கல்லூரியில் சேர்ந்தார். தந்தையும், மகனும் விடுதியில் ஒரே அறையில் தங்கி, ஒரே வகுப்பில் படித்தனர். எனினும் சட்டப்படிப்பை வாஜ்பாய் பூர்த்தி செய்யவில்லை. மாணவராக இருக்கும் போதே ஆர்.எஸ்.எஸ். இயக்க நிறுவனர் கேசவராவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அதன்மூலம் வாஜ்பாய் அரசியலில் நுழைந்தார்.

விடுதலைப் போராட்டத்தில் வாஜ்பாய்:
1941ல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1942ல் மகாத்மாகாந்தி நடத்திய ‘வெள்ளையனே வெளியேறு‘ போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். இன்றைய  இளைய சமுதாயத்திற்கு இனியதொரு  பாடமாய் திகழ்கின்றார்.  தேச தந்தையுடன் தேசியவாதியான வாஜ்பாய்  நடத்திய விடுதலைப்  போராட்டங்கள் இனி ஒரு தலைமை ! இனி ஒரு தலைமை இதுபோல் வேண்டும் என்று  மெய்சிலிர்க்கச் செய்கின்றது.

பத்திரிக்கை ஆசிரியர்:
1946ல் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நடத்திய ‘ராஷ்டிரீய தர்மா‘ என்ற பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார் பேனா முனையில் பெரும் பொருப்புகளை ஏற்று பெருமைப்படுத்தினார். பின்னர் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் புதிதாகத்தொடங்கிய சில பத்திரிகைகளின் ஆசிரியரானார். அவர் எழுதிய கட்டுரைகள் மூலம் அவருடைய எழுத்தாற்றல் வெளிப்பட்டது.

ஜனசங்கம்:
1950ல் ‘ஜனசங்கம்‘ கட்சியை உருவாக்குவதில் முக்கிய பங்கெடுத்துக் கொண்டார். 1951ம் ஆண்டு லக்னோ தொகுதியில் நடந்த பாராளுமன்ற இடைத்தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டார். அதில் தோல்வி அடைந்தார். எனினும் பிறகு அதே தொகுதியில் வெற்றி பெற்றார். 1962, 1986ம் ஆண்டுகளில் டெல்லி மேல்சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இந்திரா காந்தி ‘நெருக்கடி நிலை‘ அறிவித்தபோது, 1975 முதல் 1977 வரை சிறையில் இருந்தார். நெருக்கடி நிலை தளர்த்தப்பட்டு பாராளுமன்றத்தேர்தல் நடைபெற்றபோது, ஜெயப்பிரகாசரின் யோசனைப்படி எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ‘ஜனதா‘ என்ற கட்சியை அமைத்தன. வாஜ்பாய் தன்னுடைய ‘ஜனசங்கம்‘ கட்சியை, ஜனதாவுடன் இணைத்தார்.

மந்திரி சபை:
1977 தேர்தலில் காங்கிரஸ் தோற்றது. இந்திராகாந்தியும் தோல்வி அடைந்தார். மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைக்கப்பட்ட ஜனதா அரசில், வெளி விவகார மந்திரியாக வாஜ்பாய் பொறுப்பு ஏற்றார். வெளிவிவகார மந்திரியாக இருந்தபோது, ஐ.நா. சபைக்கூட்டத்தில் கலந்து கொண்டு, இந்தியில் உரை நிகழ்த்தினார். பல சர்வதேச மாநாடுகளிலும் பங்கு கொண்டார்.

ஆட்சி அமைப்பு:
1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் எந்தக்கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. எனினும், பாரதீய ஜனதா கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று இருந்ததால், மந்திரிசபை அமைக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
1996ம் ஆண்டு மே மாதம் 16ந்தேதி பிரதமராக வாஜ்பாய் பதவி ஏற்றார். பெரும்பான்மை பலத்தை பாராளுமன்றத்தில் நிரூபிக்க இயலாமல் போனதால் 13 நாட்களில் ராஜினாமா செய்தார்.

மீண்டும் வாஜ்பாய்:
1998ம் ஆண்டு மார்ச் மாதம் 19ந்தேதி 2வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். பாரதீய ஜனதா கூட்டணியில் இடம்பெற்று இருந்த ஜெயலலிதா, வாஜ்பாய்க்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதால், 1999 ஏப்ரல் 17ந்தேதி வாஜ்பாய் அரசு ஒரு ஓட்டு வித்தியாசத்தில் கவிழ்ந்தது.

1999 செப்டம்பர் அக்டோபரில் நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று, அக்டோபர் 13ந்தேதி இந்தியாவின் பிரதமராக 3வது முறையாக வாஜ்பாய் பதவி ஏற்றார்.

வாஜ்பாய் மக்களவைக்கு 10 முறையும் மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்வு செய்யபட்டு உள்ளார்.

அரசியலுக்காக மட்டுமே வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டுள்ள வாஜ்பாய் திருமணம் செய்து கொள்ளவில்லை. வாஜ்பாய், ஆங்கிலத்திலும், இந்தியிலும் அற்புதமாக பேசக்கூடிய ஆற்றல் படைத்தவர். கவிதைகள் எழுதுவதிலும் வாஜ்பாய் வல்லவர். இவருடைய கவிதைகளும், சொற்பொழிவுகளும் இந்தியிலும், ஆங்கிலத்திலும் புத்தகங்களாக வெளிவந்துள்ளன.

பாரதீய ஜனதா கட்சித்தலைவர்களில், எல்லாக்கட்சித்தலைவர்களின் நன்மதிப்பையும் பெற்றவர் வாஜ்பாய். வாஜ்பாய் ஆட்சி காலத்தில் அணுகுண்டு வெடித்து சோதனை நடத்தப்பட்டது. அமெரிக்கா போன்ற நாடுகள் பொருளாதரத் தடை என மிரட்டின. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இந்தியாவின் உறுதிப்பாட்டை உலக அரங்கில் நிலை நாட்டியவர் வாஜ்பாய்.

பிரதமர் பதவியிலிருந்து விலகிய பிறகு வாஜ்பாய் தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. உடல் நலக்குறைவு காரணமாக அவர் வீட்டிலேயே தங்கி இருந்தார். அவரது வளர்ப்பு மகள் அவரை கவனித்து வந்தார். 1992ல் மத்திய அரசு இவருக்கு ‘பத்மபூஷண்‘ விருது வழங்கி கவுரவித்தது. 1994 இல் லோகமான்யா விருது கிடைக்கப் பெற்றது. 1994 இல் அவுட் ஸ்டேண்டிங் பார்லிமெண் விருது கிடைக்க பெற்றார். 2015 ஆம் ஆண்டு பாரத் ரத்னா  கொடுக்கப்பட்டது.


வாஜ்பாய் செய்த சாதனைகள்: 
இந்தியாவில் வாஜ்பாய் காலத்தில் நாட்டில் கொண்டு வரபட்ட பல்வேறு  தொலை நோக்கு திட்டங்கள் உலக நாடுகளிடையே நடைபெற்றது.

தங்க நாற்கர சாலை:
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை போக்குவரத்தினை சீரமைத்து வாணிபம் மற்றும் பயணங்கள் சீரமைத்த பெருமை அவரையே சாரும். அதனபடி இந்தியா முழுவதும்  விபத்தில்லா தங்க நான்குவழி சாலை உருவாக்குவப்பட்டு பயணங்கள் விரைவாகவும் பாதுகாப்பகவும்  உருவாக்கப்பட்டது. 

கற்கை நன்றே கற்கை நன்றே :
கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற நறுந்தொகை வாக்கினை பின்ப்பற்றி குழந்தைகள் வாட வேண்டாம் என சர்வசிக்ச அபியான் மூலம்  இந்தியாவின் கடைசி கிராமம் வரை கல்வி கற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பிரதான்மந்திரி கிராம்சடக் யோஜனா மூலம் கடைக்கோடி கிராமம் வரை சாலைகள் போடப்பட்டன. வாஜ்பாயின்  ஆட்சியில்தான் வங்கிவீட்டு கடன் வட்டி குறைந்து வீடு கட்ட வாய்ப்புகள் கிடைத்தன.

கனரக வாகனங்கள்:
வாகன உற்பத்தியும் இந்தியாவில் அதிகரிக்ப்பட்டு வாகன கடனும் தாராளமாக கிடைத்ததன் பலனாக மிதிவண்டியை வாங்கும் சாதரண மக்கள் கனவும் நிறைவேறியது

விறகுஅடுப்பு மண்ணெண்ணெய் அடுப்புமே பயன்படுத்தி வந்த வாஜ்பாய்  ஆட்சியில்தான் பெரும் செல்வாந்தர்கள் மட்டுமே பயன்படுத்திய கேஸ் (சமையல் எரிவாயு ) பயன்படுத்த முடிந்தது.
மேலும் இவர் ஆட்சியில் தான் அதிகப்படியாக இருளில் இருந்த மக்களுக்கு காற்றாலை மின் உற்பத்தி மூலம் தடையில்லா மின்சாரம் கிடைக்க வழி செய்யப்பட்டது.

தமிழக சாலைகள்:
 போக்குவரத்திற்கு இந்தியா முழுவதும் தரமான தேசிய நெடுஞ்சாலைகள் கிடைத்தது அதில் தமிழகத்தில் போடப்பட்ட சாலைகள் விவரம் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

NH.66 கிருஷ்ணகிரி to பாண்டிச்சேரி
NH,68 சேலம் to உளுந்தூர்பேட்டை
NH 208 மதுரை to கொல்லம்
NH 45A விழுப்புரம் to நாகப்பட்டனம்
NH 206 ...NH 67 திருச்சி to ராமேஸ்வரம்
NH 207 NH 209 சாம்ராஜ்நகர் to தின்டுக்கல் மற்றும்
NH 45B ஆகியவை கன்டோம்.
தங்கம் விலை பவுன் 4470/-இல் இருந்து 3300/- ஆக குறைந்தது . தொடர்ந்து 4.5 ஆண்டுகள் உயராத விலைவாசி வாஜ்பாய் காலத்தில் பின்ப்பற்றப் பட்டது. மேலும் வாஜ்பாய் ஆட்சியில்தான் உயராத லிட்டருக்கு  ரூபாய் 36/-க்கு. பெட்ரோலியம் கிடைத்தது.
செல்வந்தர்கள் மட்டுமே 3000O/- 0YT 3மாதம் 15000/- 6மாதம் கழித்து கிடைத்த தொலைபேசி இனைப்பை 1000ரூபாய் செலுத்தி உடனடியாக சாமானிய மக்களுக்கு கிடைக்கச் செய்து அவர்களின வனிகத்தை அதன் மூலம் பெருக்கினார்கள்.

250/- ரூபாயும் 2ரூபாயும் செலுத்தி செல்லுலார் தொலைபேசி சாமானிய மக்கள் நாங்கள் பெற்றனர்.
மதுரை சின்னப்பிள்ளை காலில் விழுந்து ஊக்குவித்து மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் மகளிர் வாழ்வு மேம்பாடு அடைய ஆதரவுகள் கிடைத்தது.

கார்கில் திவாஸின் நாயகன்:
வாஜ்பாய் ஆட்சியில் தான் அமெரிக்காவின் கண்ணில் மண்ணை தூவி பொக்ரான் அனுகுண்டு வெடித்து இந்தியா. மேலும்  மேதை விஞ்ஞானி திரு.அப்துல்கலாமை ஜானதிபதியாக்கிய பெருமை அவரையே சாரும்.

எல்லையில் அத்துமீறி நுழைந்தது தவறு அதிலும் அதனை கண்காணிப்பு செய்த இந்திய வீரர்களை தாக்கி கொடுமை செய்து கொன்ற செயலினை கேட்டு கொந்தளித்த வாஜ்பாய் பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு அனுமதி வழங்கினார். அதன்படியே எல்லையில் அத்துமீறி ஆக்கிரமிக்க நினைத்த அந்நிய நாட்டினரை துரத்தியடித்து வெற்றிவாகை சூட வைத்து இந்தியாவை உலகறியச் செய்த  பெருமை நாட்டிற்கு கொடுத்தார்.
சுற்றுலா கூட போகமுடியாத ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில்(ஸ்ரீநகரில்) தீவிரவாதிகளை அடக்கி சுற்றுலா சுலபமாக்கச் செய்து இந்தியாவிற்கு சுற்றுலா வருமானத்தை அதிகரிக்கச் செய்தார்.
வெளிநாடுகளில் திட்டங்களுக்கு கையேந்திய இந்தியாவை அந்நிய செலாவணி கையிருப்பு 1.5லட்சம் கோடியாக உயர்த்தி நாம் அவர்களுக்கு கடான் கொடுக்கும் நிலை உருவாக்கச் செய்தார்.

அரசியலை விட தேசியம் முக்கியம்:
வாஜ்பாயை பொருத்தவரை அரசியலை விட தேசியம் முக்கியம் எனச் செயல்பட்டார் அது பெங்களூர் நகர கட்டமைக்க கொடுத்த ஓதுக்கீடு தொகையிலும் நாம் அறியலாம்.  அதன்படி நாடு  முன்னேற எதிர்கட்சியாக இருந்தாலும் S.M.கிருஷ்ணாவின் கர்நாடக ஆட்சி காலத்தில் மாநில தலைநகர் பெங்களூரை சிலிகான்வேலியாக்க 1500 கோடி உடன் ஒதுக்கி மென்பொருள் உற்பத்தியை தன்னிரைவாக்கி இந்தியாவில் உள்ள படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்த பெருமை அவரைச் சாறும்.

ஊட்டச் சத்தான பால் தேவையில்  இந்தியா பால் உற்பத்தியில் முதலிடம் பிடிக்கச் செய்தார். டெல்லியில் முதல் மெட்ரோ ரயில் வாஜ்பாய் இயக்கப்பட்டது.  


இமாச்சல் மாநிலத்தில் (மண்டி) முதல் பெரிய சுரங்கப்பாதை 9KM அமைக்கப்பட்டு போக்குவரத்து சுலமாக்கப்பட்டது. மேலும் இவருடைய  ஆட்சியில்தான் மிகச்சிறப்பான நிறைய சுரங்கபாதைகள், கடல் பாலங்கள் கொண்ட கொங்கன் ரயில்வே மங்களூர் முதல் மும்பை பாதை அமைக்கப்பட்டது.

ஏழைகளுக்கு அந்தியோதயா அன்னபூர்னா திட்டத்தில் ஏழைகள் பசியைபோக்க மாதம் 25கிலோ அரிசி இலவசமாக தரப்பட்டது. வால்மீகி அம்பேத்கார் ஆவாஸ்யோஜனாஅய்யா திட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடு கட்டி தரப்பட்டது. அம்பேத்கார் பிறந்தநாள் அரசு விடுமுறை நாள் ஆக்கப்பட்டது. மாற்று மதமானாலும் அவருடைய சமத்துவ தன்மையால ஆட்சியில்தான் மிலாடிநபி விடுமுறை நாளாக கொண்டாடப் பட்டது.


இந்திய காமராசர்:
இந்திய காமராசரை போல் விடுதலைக்காகவும் போராடிய வாஜ்பாய்   நாட்டுமக்களுக்காக திருமணமே செய்து கொள்ளாத வாஜ்பாய் அவர்களின் ஆக்கபூர்வ நடவடிக்கைகள் மிகுந்த சிறப்புத் தன்மை வாய்ந்தது. சாதனைகள் பல செய்து மண்ணுலகம் ஆகஸ்ட் 16,2018இல் விட்டு விண்ணுலகம்   சென்றார்.

Post a Comment

2 Comments