ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரே போட்டியில் 2 பதக்கங்களைப் பெற்று சாதித்துள்ளனர் இந்திய வீரர்கள். ஜகார்தாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் 10,000க்கும் மேற்பட்ட வீரர்கள் 45 நாடுகளைச் சேர்ந்தோர் பங்கு பெற்று விளையாடி வருகின்றனர்.
இந்தியாவில் இருந்து மொத்தம் 500 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே 2 தங்கத்தை வென்று பதக்கப் பட்டியலில் மிளிரும் இந்தியா மீண்டும் ஒரு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கதை ஒரே போட்டியில் வென்றுள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் இறுதி போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த 16 வயது சவுரப் சவுத்ரி தங்கம் வென்றார். மீண்டும் அதே போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த அபிஷ்க் வர்மா வெண்கலம் வென்றுள்ளார்.
சவுரப் சவுத்ரி 16 வயது இளம் வீரர் 240.7 புள்ளிகளுடன் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் இறுதி போட்டியில் தங்கம் வென்றார். மூன்று முறை ஒலிம்பிக் பட்டம் பெற்றவர்களுடன் போட்டியிட்டு எந்த வித பதற்றமும் இல்லாமல் செயல்பட்டதாக தெரிவித்தார்.
விவசாயத்தை நேசிக்கும் தங்கமகன்:
துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற சவுரப் சவுத்ரி தன்னுடைய ஓய்வு நேரத்தில் தந்தையுடன் இணைந்து விவசாயம் செய்வது பிடிக்கும் என்று கூறுகிறார். சிறுவயதில் மண்ணை பண்படுத்தி பயன்படுத்திய இளைக்னரரை நினைத்து தாயகம் என்றும் பெருமை கொள்ளும்.
துப்பாக்கி சுடுதலில் சவரப் வென்ற தங்க மெடல் இந்தியாவின் ஐந்தாவது தங்கம் ஆகும்.
வெள்ளி வென்ற சஞ்சீவ் ராஜ்புட் :
37வயதான சஞ்சீவ் 2018 ஆம் ஆண்டு காமவென்ல்தில் தங்கம் வென்ற சங்சீவ் ஆசிய போட்டியில் 453.3 புள்ளியுடன் வெள்ளி வென்றார். இது சஞ்ச்சீவின் 5 ஆசிய மெடல் ஆகும்.
மேலும் படிக்க:
1 Comments
Great India, great
ReplyDelete