ஆசிய விளையாட்டில் அடித்து நொருக்கும் இந்திய வீரர்கள் சபாஷ் இந்தியா என மிரள வைக்கிறார்கள் ஆசிய விளையாட்டில் மீண்டும் போகாட் வீட்டு பெண் தங்கம் வென்று தாயகம் காத்து பெருமை சேர்த்துள்ளார்.
23 வயது வினேஷ் போகாட் இந்திய பெண்கள் மல்யுத்த போட்டியில் 50 கிலோ ப்ரீஸ்டைல் இந்தியாவின் வினேஷ் போகத் ஜப்பானின் யூகி இரியை 6-2 புள்ளி வித்தியாதத்தில் வென்றார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு வினேஷ் காயத்தால் ரியோவில் நழுவவிட்ட வாய்ப்பை இம்முறை நன்கு பயன்படுத்தினார். மல்யுத்தப் போட்டியில் ஆசியப் போட்டியில் தங்க பதக்கம் வென்றதன் முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாறு படைத்தார்.
2014 ஆம் ஆண்டு ஆசிய போட்டியில் 48 கிலோ எடைப் பிரிவில் வெண்கலம் வென்றார்.
அசத்தலான வெற்றியை பெற்றதன் மூலம் வினேஷ்க்கு வேலையுடன் 3 கோடி பரிசினை ஹரியானா அரசு அறிவித்துள்ளது.
தங்கம் வெல்ல வினேஷ் வெற்றி கோப்பையை வென்றதுடன் இத்தனை வருடம் அவர் பெற்ற பட்ட கஷ்டங்கள் அனைத்தும் இந்த தங்க வெற்றிப் புன்னகையில் கடந்தார்.
மேலும் படிக்க:
0 Comments