ஆசியப் போட்டியின் முதல் தங்கம் வென்றார் இந்தியாவின் பஜ்ரங்!

ஆசிய தங்கம் அடிங்கடா மேளம் என்னும் அளவிற்கு  தங்க வேட்டை இந்தியா தொடங்கியது. இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் 18வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மல்யுத்த போட்டியில் முதல் தங்க பதக்க்த்தை ஆசிய போட்டியில் வென்று இந்தியாவின் பதக்கப்பட்டியலை தொடங்கியுள்ளார். 

18வது ஆசியப் போட்டிகள் ஜகார்த்தா மைதானத்தில் ஞாயிற்றுகிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.  ஆடவர் பிரிவில் 65 கிலோ பிரிவில் ஃபிரீ ஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதி போட்டியில் ஜப்பான் வீரரை எதிர்கொண்ட பஜ்ரங்  11-8 புள்ளி கணக்கில் வெற்றியை கைப்பற்றினார். 



ஆசியப் போட்டியில்  முதல் தங்கம்: 
ஹரியானாவை சேர்ந்த 24 வயது பஜ்ரங்  புனியா  இந்தியாவிற்கு ஆசிய விளையாட்டில் தங்கம் பெற்று தந்து பெருமிதப் படுத்தியுள்ளார். இவர் உஸ்பெகிஸ்தான், தஜ்கிஸ்தான் வீரர்களை வென்று இறுதி போட்டிக்கு நுழைந்தார். 

இவர் 2014 இல் நடைபெற்ற ஆசியப் காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்றுள்ளார். 2016 இல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். மேலும் 2017 இல் சிங்கப்பூர் மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகளில் இவர் தங்கம் வென்று சாதித்துள்ளார். 65 கிலோ எடைப் பிரிவில் 2 நிமிடத்தில் எதிரணி வீரரை வீழ்த்தும் அனுபவம் பல கொண்டுள்ளார். 

யோகேஸ்வர் தத்திடம் பயிற்சி:
நான்கு முறை ஒலிம்பிக்  போட்டியில் பங்கேற்ற யோகேஷ்வர் தத்திடம் பயிற்சி பெற்றுளார்.

வெற்றி தோல்வி பற்றி கவலையில்லை நான் மல்யுத்ததை கட்ந்த 10 மாதங்களாக நான் உணர்ந்த மல்யுத்தம் வேறு என்பதனை  பஜ்ரங்க தெரிவித்தார். 

மல்யுத்த அமைப்பின் கீழ் இயற்கையான திறனால் பஜ்ரங்நேரடியாக  தேர்ந்தெடுக்கப்பட்டவர் . சுசில் குமார்  மற்றும் ஜியோரிகாவுடன் இணைந்து பயிற்சி பெற்றுள்ளார்.

மேலும் படிக்க:

Post a Comment

1 Comments

  1. Congratulations to him,let's pray to achieve more this season,

    ReplyDelete