ஆசிய விளையாட்டில் அதிரடி காட்டி வருகின்றது இந்தியா. கோலகாலமாக ஆசிய போட்டிகள் ஆகஸ்ட் 18 , இந்தோனேசியா தலை நகர் ஜகார்தாவில் தொடங்கியது.
இந்தியாவில் முதல் முதலில் 1951 இல் ஆசிய நாடுகள் இணைந்து புதுதில்லியில் நடத்தியது. ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கொருமுறை நடைபெறும் இந்த ஆசிய விளையாட்டு போட்டியானது ஒலிம்பிக் போட்டிக்கு நிகரான முக்கியத்துவம் பெற்றது.
2018, இல் 18-வது ஆசியப் போட்டி நடைபெறுகின்றது. இந்தோனேசியா இப்போட்டியை ஜகார்த்தா மற்றும் பாலோம்பங்கில் போட்டிகள் இரு நகரங்களில் நடைபெறுகின்றது.மொத்தம் 45 நாடுகளை சேர்ந்த 10,000 வீரர் வீராங்கணைகள் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
ஆசிய விளையாட்டு திறப்பு விழா:
ஆசிய
விளையாட்டு இந்தோனேசியாவில் நடைபெற்று வருகின்றது. இந்திய தேசிய கொடியை ஏந்தி
சென்று இந்தியா சார்பில் அணிவகுக்க ஈட்டி எறிதல் வீரர் நிரஜ் சோப்ராவுக்கு
வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் தங்கம் :
ஒலிம்பிக்கிற்கு நிகரான ஆசியா போட்டியில் இந்தியாவின் பதக்க வேட்டையை துப்பாக்கி சுடுதல் போட்டியின் மூலம் தொடங்கியது. இந்தியாவின் அபூர்வி சந்தேலா மற்றும் ரவிகுமார் ஜோடி 429.9 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றது.
சீனா தைபே-வைச் சேர்ந்த யின்ஷின் லின், சௌசௌன் லூ தங்கம் வென்றார்.
சீனாவின் சௌ ரௌஸோ, யாங்க் ஹோரான் வெள்ளி பதக்கம் வென்றனர்.
மிகச் சிறப்பான தொடக்கத்தை கொண்டுள்ளது இந்தியா தொடர்ந்து ஜெயிக்க இந்திய அணி வீர்ர்களுக்கு சிலேட் குச்சியின் சார்பில் வாழ்த்துக்கள்.
வாழ்த்தும் வரவேற்பு கொடுங்கள்:
வாழ்த்தும் வரவேற்பும் வெல்வோர்க்கும் விளையாடுவோர்க்கும் கொடுக்க வேண்டியது இந்தியர்களான நமது கடமை கிரிகெட் போட்டிக்கு கொடுக்கும் அதே ஆதரவினை ஆசிய விளையாட்டு வீரர்களுக்கும் கொடுக்க வேண்டும். அந்த வகையில் சிலேட்குச்சி வெற்றியாளருக்கு வாழ்த்தும் பங்கு பெற்று விளையாடியோர்க்கு பெருமை வரவேற்பும் கொள்கின்றது.
0 Comments