தமிழ்நாடு காவல்துறையில் சப்இன்ஸ்பெக்டர் பணி பெற விண்ணப்பியுங்க!

தமிழ்நாடு காவல்துறையில் உதவி ஆய்வாளர் வேலைக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆன்லைன் மூலம்  தேவைப்படுவோர் விண்ணப்பிக்கலாம்.

 

பணியிடங்களின் விவரம்: 
சப்இன்ஸ்பெக்டர் டெக்னிக்கல் பணிக்கு 309  பேர் காலியிடங்கள் நிரப்ப தமிழ்நாடு காவல் துறையில் நிரப்பபடவுள்ளது. 

பணியின் பெயர்
சப்-இன்ஸ்பெக்டர் டெக்னிக்கல்
வயது வரம்பு
20 வயது முதல் 28
கல்வித் தகுதி
பட்டப்படிப்பு, டிப்ளமோ
பணியிடங்கள் எண்ணிக்கை
309

சம்பளம்
 ரூபாய் 36,900 -1,16,600
பணியிடம்
  தமிழ்நாடு
 
வயது: 
ஜூலை 1,2018 தேதி முதல் 20 வயது முதல் 28க்குள் வயது அறிவிக்கையில்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு  வயது வரம்பில் தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது. மற்ற பிரிவினருக்கான வயது வரம்பு சலுகை விவரம் அறிவிக்கையில் பெறலாம்.

தகுதிகள்: 
டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பினை அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்திருக்க வேண்டும். மேலும் உடல்தகுதியாக ஆண்கள் 163 செ.மீ உயரமும், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 154 செ.மீ உயரமும் இருக்க வேண்டும். 

எழுத்து தேர்வு மற்றும் உடல் தகுதி தேர்வு, இண்டர்வியூ மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழ்நாடு சீருடை பணி ஆணையத்தில் பணிவாய்ப்பு பெற விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி:10.8.2018 

 அதிகாரப்பூர்வ தளத்தில் தேவைப்படும் தகவல்களை பெற வெப்சைட் லிங்கினை இங்கு கொடுத்துள்ளோம். கிளிக் செய்து படித்து பார்த்து விண்ணப்பிக்கவும்.

மேலும் படிக்க:

என்எல்சியில் வேலைவாய்ப்பு பெறனுமா விண்ணப்பியுங்க!...

Post a Comment

0 Comments