பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு சதீஸ்தவான் ஸ்பேஸ் செண்டரில் வேலை வாய்ப்பு

சதீஸ்தவான் ஸ்பேஸ் செண்டரில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பிரண்டிஸ் பணிகளுக்கு ஆன்லைனில் ஜூலை 7,2018 முதல் விண்ணப்பிக்க  தொடங்கலாம்.


சதீஸ்தவான் ஸ்பேஸ் செண்டரில் டெக்னிசியன் அப்பிரண்டிஸ் மற்றும் வெக்கேஷனல்  அப்பிரண்டிஸ் பணிகளுக்கான வேலை வாய்ப்புக்கு  தகுதியுடையோர் அறிவிக்கையை படித்து பார்த்து விண்ணபிக்கலாம். 


பணியின் பெயர்
அப்பிரண்டிஸ்
வயது வரம்பு
14 வயது
கல்வித் தகுதி
10, ஐடிஐ பயிற்சி பெற்றவர்கள்
பணியிடங்கள் எண்ணிக்கை
டெக்னிசியன் அப்ரண்டிஸ் 125, அப்பிரண்டிஸ் 75

சம்பளம்
ஸ்டைபெண்ட்
பணியிடம்
 அந்திரபிரதேசம்


டெக்னிசியன் அப்பிரண்டிஸ் பணிக்கு தகுதியானவர்கள் டிசிசிபி கோர்ஸ்  அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் படித்திருக்க வேண்டும். மேலும் இரண்டு வருட வெக்கேஷனல் கோர்ஸும்  படித்திருக்க வேண்டும்.

டிரேடு அப்பிரண்டிஸ் பணிக்கு எஸ்எஸ்எல்சி/ எஸ்எஸ்சி வகுப்புகளுடன் ஐடிஐ/ என்டிசி / என்ஏசி  பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.  

சதீஸ் தவான் விண்வெளி நிலையத்தில்    டெக்னீசியன் பணிக்கு   ரூபாய் 3,542 ஸ்டைபெண்ட் தொகையும். டிரேடு அப்பிரண்டிஸ் பணிக்கு ரூபாய் 5,924 தொகையும் பெறலாம்.

தகுதியானவர்கள் மெரிட் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு  சதீஸ் தவான் ஸ்பேஸ் செண்டரில் வேலை வாய்ப்பு பெறுவார்கள். மேலும் இப்பணிகளுக்கு  விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி  ஜூலை 28, 2018 ஆகும். 


அதிகாரப்பூர்வ  அறிவிக்கை இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம்.  
ஆன்லைனில் விண்ணப்பிக்க இணைப்பை இங்கு கிளிக் செய்யவும். 

மேலும்:

சென்னை ஐசிஎப்பில் வேலை வாய்ப்பு வேண்டுமா விண்ணப்பியுங்க!

Post a Comment

0 Comments