மாயமில்ல மந்திரமில்ல மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்

வயது பருவத்தில் அதாவது டீன் ஏஜ் பருவம் முதல் 40 வயதுவரை ஒரு நாளைக்கு 40முதல் 50 ஆயிரம் எண்ணங்கள் உருவாகும்.அவை அனைத்தையும் திரும்ப கொண்டு நினைவுக்கு கொண்டு வருவது கொஞ்சம் கஷ்டம் ஆனால் மறதி என்பது இயற்கை.


நம்ம மூளை இந்த எண்ணங்களை தேவைப்படுவது தேவையில்லாததுன்னு பிரிச்சு பார்ப்பதால் தேவையற்றது எல்லாம் மறக்ககடிக்கப்படுகின்றது. இதிலென்ன பெரிய அலசல்ன்னு கேக்றிங்களா நம்ம மறக்கடிக்கின்ற தேவையற்ற எண்ணங்களில் தேவையான  சிந்தனைகளையும் சேர்த்து மிஸ் பண்ணிருவோம்.

நாம எப்ப பிரியா இருக்கிறோமோ அப்பொழுது நமக்கு பெரிய  வியத்தகு சிந்தனைகள், நிறைய யுக்திகள் தென்படும். எப்பொ மனசு ரிலாக்ஸா நீங்க வச்சுட்டு  பகல் கனவு காணுர ஸ்டேஜில் உங்க மனசை  வைத்திருக்கின்றிருக்கிறோ   அப்பொழுது புதுசா யூஸ்புல்லான ஐடியாக்கள் நிறையா கிடைக்கும்.

நம்முடைய மூளை நரம்புகள் நெருக்கடியற்ற சூழலில் வேலை செய்யும் பொழுது சிறப்பாக செயல்படும். அப்பொழுது நமக்குள் உதிக்கும் சிந்தனைகளின் மதிப்பு மிக்க சிந்தனைகளுள் ஒன்றாகும். ஏன் இந்த ரிலாக்ஸ் மைண்ட் செட்டில் வேலைப் பார்த்தால் வேலையை  சிறப்பாகச் செய்யலாம். எப்பொழுதும் பிரியா இருக்கிறீங்களோ அப்பொழுது உங்களுக்குள் உருவாகும் சிறப்பான எண்ணங்களை சேகரித்து தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்துங்க.

மனசு ரிலாக் எப்பொழுதும் வச்சுக்கனும் அதுக்கு ஜிம் வொர்கோட் பண்ணனும். டெய்லியும் ஒரு அறைமணி நேரம் உங்களை தயார் செய்யுங்க. எப்பிடி தயார் செய்யனும்னா  உங்களோட வேலை, படிப்பு, மீட்டிங், இன்டெர்வியூ எதுவாக இருந்தாலும் உங்களால் சரியாக செய்ய முயற்சி செய்யுங்க அது உங்களுக்கு நல்ல  பலனை தரும்.

தினமும் ஒரு 20 முதல் 50  முறை உங்களுக்குள்ளே நம்பிக்கையா இந்த நாள் இனிய நாள் எந்த ஒரு சிக்கல் வந்தாலும் என்னால் சமாளிக்க முடியும் அமைதியா, அழகா இந்த நாள் இருக்கும்னு நம்பிக்கையோட, கற்பனையோட உதயமாகுற நாளை எதிர்கொள்ளுங்க நிச்சயமா உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

உங்க மனசோட அழகு உங்களை இன்னும் அழகாக வைக்கும். புற அழகில் நீங்கள் எவ்வளோ கான்பிடெண்டா மற்றும் கான்சியஸா இருக்கிறிங்களோ அவ்வளவு அக அழகிலும் கவனம் செலுத்துங்க.

அக அழகு என்பது வேறோன்றும் இல்லை எல்லாம் உங்கள் மனதின் அழகே அக அழகு ஆகும். அகத்தினை தூய்மையாக வைத்திருக்கும் பொழுது புற தானாகவே அழகு பெறும்.

அகத்தினை அழகு படுத்துவது நமது எண்ணங்களால் முடியும். நல்ல சிந்தனை,  நம்பிக்கையான போக்கு, உதவும் எண்ணம் இருக்க வேண்ண்டும்.  பொறமை, வஞ்சகம், தன்னலம், பழிவாங்கும் எண்ணங்களை விட்டுவிட வேண்டும்.


Post a Comment

1 Comments