இருகரம் கூப்பி தலைவணங்குகிறோம் கடைமைக்கு !!!



அறம் செய விரும்பு ஆறுவது சினம் என்ற ஔவை கூற்றின் ஆழம் இன்று அறிந்தேன், ஆம் சென்னையில் கொட்டும் மழை ஒருபக்கம் இருக்க வீதிகள் தோறும் அழையா விருந்தாளியாக வந்து நம்மை மருந்தாளியாக்கும் கொட்டும் மழையில் காவலுடன் கார்பரேசன் வேலை செய்த காவலர்களுக்கு கனிவான வணக்கங்களுடன் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். 



அழையா விருந்தாளி :

அழையா விருந்தாளியாக வந்த சென்னை மழைநீரை வெளியேற்றி நாம் நடமாட காவலாக இருந்ததுடன் அர்த்த இராத்தியிரியில் காக்கியை கழட்டி கார்பரேசன் வேலை செய்தனர் நமது காவல்த் துறையினர். என்ன இது என்று எட்டிப்பார்த்தால் எனக்கு தெரிந்த அண்ணனும் அங்கே அடைமழையில் பீச்சோரம் காவல் காத்து கொண்டிருக்கின்றார். அருகிலே கடல், அனலைப்போல் கொட்டும் மழை ஆனாலும் குறையவில்லை கம்பீரம் .


அழையா விருந்தாளியாக நான் அழைத்தபொழுது அவர் கொடுத்த நிதான பதிலில் நான் பிரம்மித்துப் போனேன். சென்னையில் இரவு வரை காவல், அடாது மழையிலும் விடாது காவல் காத்து கொண்டிருக்க ஆங்காங்கே வாய்க்காலை போல் கோர்த்து நிற்கும் மழை நீரை அகற்ற காக்கி உடைகள் அணிந்த கம்பீரங்கள் நின்று கொண்டிருந்தனர் . 

அவர்களும் மனிதர்கள் :

வீட்டில் பெற்ற பிள்ளைகளும், பெற்றோர்ரும் அழைக்க அடைமழையில் உங்களுகென்ன அமைதியா இருங்க நான் டியூட்டியில இருக்கேன் என்ற குரல் கொடுத்து கைபேசி இணைப்பை துண்டித்து சென்னையில் கடமையாற்றினார்கள் நமது காவல் துறையினர் .

பழியா பாராட்டா :

அடாது மழையிலும் ஒரு எழுத்தாளர் கேட்கும் கேள்விக்கு கடமையாற்றிக்கொண்டே பதில் அளித்த பொருமை, ஒருமுறை காக்கி உடையின் மீது கரைகள் எல்லாம் கரைந்து மின்னியது என் கண்களில், தவறு செய்யும் போது காவல்த் துறை தவறு செய்துவிட்டது என்று தரகுறைவாக பேசுகிறோம். ஆனால் தவறி கூட அவர்களின் மேலான பணிகளுக்கு பாரட்டுகளை விட பழியைதான் பரிசளிக்கிறோம்.

காவல் காத்துகொண்டே ஆங்காங்கே நீர்த்தேக்கத்தை அகற்றினர் நமது சென்னை காவல் துறையினர். அவர்களும் மனிதர்கள்தான் என்பதை பலநேரம் நாம் மறந்து போகின்றோம். ஒவ்வொரு புரோமோசனுக்காகவும் பத்து வருடம் காத்துகிடக்கும் அவலம் அவர்களுக்கு மட்டும்தான்.

முறையான கௌரவத்துடன் முறைப்படுத்தப்பட்ட சம்பளம், காவல்த்துறை நிதி, கோர்டஸ் என அனைத்து வசதிகளையும் அரசு செய்ய காலம் தாழ்த்தும் போது கடமையை மட்டும் ஆற்றுங்கள் என கேட்பது என்ன நியாயம் என்று அவர்களுக்குள்ளும் கேள்வி எழுமல்லவா . 

கால்கடுக்க வெய்யிலில் நிற்கும் அவர்களுக்கு தேவையென்ன என்று நாம் சிந்திப்பது இல்லை. வாங்கும் அரைகுறை சம்பளத்தில் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாத ஒரு தரித்திர நிலையில் தரமான கடமையை மட்டும் அனைவரும் தருவார்களா என ஒரு நேர்மையான அதிகாரி கூறும் பொழுது எங்கோ தவறு இருக்கின்றது என என்ன தோன்றுகின்றது.

எதற்கெடுத்தாலும் குறைகூறும் போக்கு நமதாக இருக்கையில் எங்கு தவறு நடக்கின்றது ஏன் இந்த அவலம் என்று யோசிக்க யாரும் முன் வருவதில்ல்லை. முடிந்தவரை குறைகூறுகிறோம் . ஆனால் குறை களைய என்ன வழி என்று யோசிக்க யார்க்கும் இங்கு நேரமில்லை. 

கடங்கார காவல்த் துறை என்று ஏசும் நமக்கெல்லாம் தெரிவிதில்லை அவர்களின் பாடு, எதற்கிந்த பிழைப்பு என நினைத்து ஒதுங்கினால் ஒரு பயலும் நிம்மதியா வாழ முடியாது நமது நாட்டிலே அப்புறம் சட்டம் கட்டாந்தரையிலே கவுந்து கிடக்கும். 


குறைகள் இல்லாத் துறைகளில்லே குறைகளை கலைய நினைக்க நல்ல நிர்வாகமில்ல்லை ஆனால் வீதியோரம் நின்னு நாக்கில் பல்லைப்போட்டு பேசும் நமக்கு இன்னும் கற்றல் தேவை. கலைவோம் கடந்துவந்த பாதையின் முற்களை கண்ணியம் காப்போம். கடமையை செய்யாதோரை கடிந்துகொள்வதைப் போல் நம்மை காத்து கொண்டிருக்கும் காவல்த் துறைக்கு இருகரம் கூப்பி தலை வணங்குவோம். 

மேலும் படிக்க:

Post a Comment

0 Comments