போராளி !!!!

கியூப கிண்ணம் காஸ்ட்ரோவின் சின்னம் 

இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த போராளி க்யூபா என்ற தேசத்தின் பெயரை உலகமெங்கும் உச்சரிக்க வைத்தவர் . கியூபா  தேசத்தை உலகெங்கும் அறிய வைத்தவர். வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு சிம்மசொப்பணமாக இருந்தவர். வானிலிருந்து ஹைடிரஜன் துகள்களை தூவி நாட்டுமக்களை அல்லல் படுத்தினார்கள் , விளைந்த சர்க்கரைப்பண்டங்களை வாங்க மறுத்து பொருளாதார தடைகளில் சிக்க வைத்தனர். குழந்தைகளுக்கு குடிக்க பால் இல்லை. உடுக்க உடைக்கு பற்றாகுறை,  கடுமையான சிக்கலில் கியூபா காய்ந்து கிடந்தது,,,.
அமெரிக்காவை ஓடஓட விரட்டியடித்தது கியூபா அமெரிக்காவின் நிறுவனங்களை அரசுடைமையாக்கியது கியூபா. தேசத்தை அலங்கோலப்படுத்திய அமெரிக்க முயற்சிக்கு அடிப்பணியாமல் எழுந்த நின்றது கியூபா கல்வியில் 92 % சதவீகித முன்னேற்றம் மற்றும் மருத்துவத்தில் தன்னிறைவு என பெரும் உச்சத்தை எட்டியது கியூபா . உலகின் சர்க்கரை கிண்ணம் என்ற அழைக்கப்பட்ட கியூபாவினை காத்த பெருமை அந்த மாபெரும் வீரர்க்கு உரியது . காஸ்ட்ரோவின் வீரமும் வேட்கையும்  புரட்சியும் சிளிர்பை ஏற்படுத்தியது கியூபாவை ,,. தேசத்தின் விடுதலை நாட்டு மக்களின் நலனுக்காக 1000 ஏக்கர் பண்ணை நிலங்களை விட்டு வாழ்ந்தவர் காஸ்ட்ரோ. கியூபாவை விட்டிருந்தால் அமெரிக்காவின் அடியில் இன்னொரு தீவாக இருந்திருக்கும் .  இன்று உலகிற்கெல்லாம் எடுத்துக்காட்டாக இருந்து உலகிலேயே சிறந்து விளங்கும் நாடாக கியூபா விளங்குகிறதென்றால் அதற்கு காரணம் அமெரிக்காவின் சிம்மசொப்பணம் ஃபிடல் காஸ்ட்ரோ ஆவார். சிறுவயது முதலே கரும்பு பண்ணையில் பணியாற்றியோர்களையும் கண்டு திகைத்து போனவர் காஸ்ட்ரோ கேள்விகளால் தன் பெற்றோர்களை துளைத்தவர் காஸ்ட்ரோ . தனது வயது ஒத்தவர்கள் செருப்பின்றி வருவதைப் பார்த்து ஏன் இந்தநிலை என்று கேள்விகளால் துளைத்தவர் காஸ்ட்ரோ .

கியூபாவின்ப புரட்சிக்காக தன்னை மெழுகாய் உருக்கியவர் காஸ்ட்ரோ ஆவார். கியூபா வெற்றி பெற்றது முதல் 700 முறைக்கு மேல் ஃபிடலை  கொல்ல முயன்று தோற்றது அமெரிக்கா. அணிசேரா நாடுகளின் ஒருநாடாக இருந்து தனது தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர் காஸ்ட்ரோ . யார் இவர் , இன்னும் என்ன இருக்கின்றது இவரைப் பற்றி அறிய ஆவலா நிச்சயம் அறிந்து கொள்ளலாம் . உலகம் இவரை கம்யூனிசவாதி என்கிறது .  ஆனால் நாம் இவரை இந்த நூற்றாண்டின் சிறந்த போராளியாக காண்போம் யார் இந்த காஸ்ட்ரோ ??  கியூபா என்றால் என்ன ? புரட்சி என்றால் என்ன் என்ற உங்களின் பல கேள்விகளுக்கு பதிலுடன் அடுத்த பதிவில் அறிவோம் ………
Image Results For Fidel Castero

Post a Comment

0 Comments